Sunday, 23 August 2009

இலங்கை வலைப் பதிவர் சந்திப்பு - நடந்தது என்ன???

காலை 9 மணிக்குன்னுதான் வந்தியத்தேவரு எனக்கு மின்னஞ்சல் பண்ணியிருந்தாரு. நமக்கும் நேரந்தவராமைக்கும் ரொம்பத்தான்... அப்பிடியே ஒட்டிகிட்டு போகும்... சரியாக 9.37 ஆயிடிச்சு நான் வினோதன் மண்டபத்தை அடைந்த போது...

கேக்கில் பாதி மெழுகுதிரிகள் ஏற்றப் பட்டிருந்தன. வலைப்பூக்களின் 10 ஆவது பிறந்த நாளாம். நல்லா இருங்கப்பா... (நான் அலப்பறை பண்ண ஆரம்பித்து 2 வருடமாகப் போகிறது. ஆனா நான் 2004 இலேயே வலைப்பதிவு பண்ண ஆரம்பித்து விட்டது எத்தனை பேருக்கு தெரியும். எனக்கே ஒரு மாசம் முன்னாடிதான் தெரியும். அந்த ப்ராபைல் இப்போது முடக்கப்பட்டுவிட்டது. அது கூகிள் ப்ளாகரை வாங்க முந்தி உள்ள விஷயம்.)

நான் வர முன்னாடி சுபானு கொஞ்சம் பேசி வலைப்பதிவிடுவது பற்றி விளங்கப்படுத்தினராம் அதுக்கு முன்னாடி நம்ம புல்லட்டு பேசினது நமக்கு பின்னாடிதான் தெரியவந்தது. மிஸ் பண்ணிட்டன் மாப்பு.

அப்பறம் சுமார் எண்பது வலைப்பதிவர்களும் தங்களை அறிமுகம் செய்துகொண்டோம். நம்ம அலப்பறை சில பேருக்கு கேட்டிருந்தது. "அவனா நீ" கணக்காய் முறைத்துக் கொண்டார்கள். எனக்கு பக்கத்தில் தெரு விளக்கு. மாப்ள சந்திப்பு தொடங்கினதிலிருந்தே சிரிச்சிட்டிருந்தாப்ல.

பின்னாடி மருதமூரான் பேசினாப்ல. பார்ட்டி கொஞ்சம் சீரியஸ் டைப் மாப்பு. இலங்கை தமிழ் வலைப்பதிவர் திரட்டி, மட்றும் சகோதர மொழி வலைப்பதிவர் திரட்டி அறிமுகம் சென்ஜாப்ல.

அப்புறம் எழில்வேந்தன் அண்ணா பேசினாரு. அதே அடக்கம், அதே கனிவு. வலைப்பதிவிடலுடனான தனது உறவு பத்தி பேசினாப்ல.

அப்புறம் சேரன் கிருஷ் பேசினாப்ல, வலைப்பதிவு தொழினுட்பம் பத்தி மாப்பு கொஞ்சம் எடுத்து விட்டாப்ல. நம்ம துறைங்கிரதால நானும் கொஞ்சம் நல்லாவே காதைப் போட்டுகிட்டேன்.

அப்பறம் லோஷன் அண்ணா பேசினாப்ல... கொஞ்சம் பல்சுவையும் இருந்தாப்ல.

கலந்துரையாடல் இடம் பெற்றது... இதில் அனைவரும் பல்வேறுபட்ட தலைப்புகளில் பேசிக் கொண்டனர். காரசாரம் செம அதிகம்.

கடைசியா நம்ம வந்தியத்தேவரின் பின்னூட்டம். அவருதான் கிங்குல. கலக்கிடே தலைவா. நமக்கு அலப்பறைனுதாந் பேரு. போனதில இருந்து எதுவுமே பேசாம கம்னு கிடந்திட்டு அப்டியே கப்னு வந்துடம்ல...

பி.கு: புல்லட்டின் அன்னதானம்தான் எங்கேயோ சந்தடி சாக்குல மிஸ் ஆகிட்டு...



Saturday, 22 August 2009

கந்தசாமியும் எனது குற்ற உணர்வும்

ரொம்ப நாளைக்கப்பரம் ஒரு படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணாப்ல...

நானும் என் கிறுக்குப் பய புள்ளைய ரெண்டு பேரும் போனாப்ல... பக்கத்துலேர்ந்த சினிசிடிக்கு... படம் பேரு "கந்தசாமி"... நம்ம விக்ரம் பய புள்ள நடிச்சிரிக்காப்ல... மூணு வருஷமா அப்பிடி என்னதான் எடுத்தாங்களோ தெரியல... எதிர்பார்ப்புகளை எல்லாம் தவிடு பொடி ஆக்கி இருப்பதே அவர்களது சாதனை...

பாடல்கள் முழுக்க காமம் இழையோடியிருக்கிறது. இரட்டை அர்த்தங்கள் வரிகளில். விக்ரம்கு சொந்த வீடு இல்லை போலிருக்கு. அவர் எங்கிருந்து வாரார்னே தெரியல. ஷ்ரேயா தலை முடியை வெட்டி இருப்பதுதான் அவர் நடிப்பிற்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பு. சுசிக்கும் நடிப்பாசை துளிர்விட்டுவிட்டது போல. பிரபு மட்டுமே சற்று மிளிர்கிறார். ஆக கந்தசாமி அதிஷா சொன்னது போல கந்தல்சாமியே...

பெருசா சொல்றதுக்கு இதுல ஒண்ணுமே இல்ல. ஒரே வரியில் சொல்வதானால்...

கந்தசாமி = அந்நியன் + சிவாஜி + சிட்டிசன் + ரமணா

எல்லா மசாலாவும் கலக்கப் போய் ஓவர் டோஸ் ஆகி எமக்கு வயிற்று வலி வந்ததே மிச்சம்...

பி.கு: எனக்கு முன்னாடியே டிக்கட் எடுத்து ஹால் இரண்டில் உள்ள ஷோவை பார்க்காமல் விடுத்து எனாக்காக காத்திருந்து ஹால் மூன்றில் பார்க்க என்னுடன் வந்த என் நண்பனை உள்ளே அனுமதிக்காத சினிசிட்டி காரர்களுக்கு என் குட்டு...

அந்த நண்பன் இற்கு இந்த விமர்சனம் சமர்ப்பணம்...



Wednesday, 19 August 2009

டயலொக் ஜி.எஸ்.எம். இன் ப்ளாஸ்டர் பகேஜ் இன் மாத செலவை மிச்சம் பிடிப்பது எப்படி...

எனது பேஸ்புக் பராபைல் இல் பலரதும் வரவேற்பைப் பெற்ற இக்குறிப்பு அலப்பறை ரசிகர்களுக்கு...



ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு குறிப்பு... இதை பற்றி எழுத ஆர்வமூட்டிய நண்பன் நிப்ராஸ் இற்கு முதலாவதாய் என் நன்றிகள்...

சமீப காலமாக என் மொபைல் பில் ஆயிரங்களில் எகிறுகிறது...
இதனாலேயே இந்த ஐடியா...

*மிஸ்ட் கால் - உலகத்திலேயே ரொம்ப சிக்கனமான தொலைத்தொடர்பு வசதி. யாரு கண்டுபிடிச்சான்னே தெரியல்ல. அனா இப்டி ஒரு பிரயோஜனம் இதுல இருக்கும்னு நெனச்சிருப்பரோ என்னவோ. உயிரே போற அவசரம்னாலும் மிஸ்ட் கால் பண்றவங்க ரொம்ப பேறு இருக்காங்க. நீங்களும் பயன்படுத்திக்கலாம்.

*கால் மீ எஸ்.எம்.எஸ். அலர்ட் - டயலொக்கே பிழைச்சி போங்கடான்னு போட்ட பிச்சை... தந்தாண்டா சாமின்னு இருக்கற வரைக்கும் பயன்படுத்திக்கறது நம்ம புத்திசாலித்தனம். கிழமைக்கு இத்தனைனு ஒரு வரையறை இருக்கறதால கொஞ்ச கவனம் தேவை.

*நட்பு வலயம் - இது நம்ம ஏரியா... என் சுபாவத்துக்கு கொஞ்சமும் பொருந்தாது என்றாலும் வேற வழி??? ஆண்கள் ஆண்களையும் பெண்கள் பெண்களையும் நண்பர்களா ஏத்துக்கிட்டா கால் பண்ண வேண்டிய அவசியமே இல்ல :) அல்லது ப்ளாஸ்டர் பகேஜ் வச்சிருப்பவங்களா பார்த்து நட்பு வச்சிக்கலாம். ப்ரீபெய்ட் காரர்கள் கையாளும் யுக்தி இது...

*பொய் - லைன் டிஸ்கனெக்ட் ஆயிடிச்சு மச்சான்னு வாய் கூசாம எடுத்து விட வேண்டியதுதான்... இப்பிடி பேசி பேசி இன்கமிங் மட்டும் வாற மாதிரி ஒரு ஏற்பாடு பண்ணிக்கலாம்.

*உண்டியல் - தினமும் செலவழிக்கிற காசுல ஒரு 15 ரூபாயை எடுத்து ஒரு உண்டியல்ல போட்டு வரலாம். மாச கடைசில தேவையான காசு வந்துடும்.

*நம்மட ப்ளாஸ்டர் பேகேஜ் இல் உள்ள இலவச ஆயிரம் நிமிடங்கள் முடிஞ்சிடிச்சுன்னு வச்சுக்குவோம், அப்போ நம்ம குடும்பத்திலோ நண்பர்களிலோ பிளாஸ்டர்னு ஒரு சேவையை டயலொக் எதுக்கு அறிமுகப்படுத்திச்சுன்னு வெளங்கவே வெளங்காத சில அப்பாவிப் பய புள்ளைங்க இருப்பாங்க. உதாரணத்திற்கு நம்ம அப்பா, அம்மா :) இவங்ககிட்ட இருந்து மொபைலை நைசா லவட்டிடலாம். மாசாமாசம் என் அம்மாக்கு 450 நிமிஷங்கள் மீதமாவே இருக்கின்றன :)

மேலதிகமான உத்திகளை நீங்களும் எடுத்து விடுங்களேன் :)

இதில் சில உத்திகளை தந்த நண்பி டயானாக்கும் எனது நன்றிகள்...