Sunday 14 February 2010

கூகிள் பஸ் தேடுபொறி

ஒரு டெக்னாலாஜி பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு. பதிவே எழுதி ரொம்ப நாளாச்சு. இத  டெக்னாலாஜினும் சொல்ல முடியாது.

அண்மைக் காலங்களில் வலையுலகம் அதிகமாக பதிவிட்டது இந்த கூகிள் பஸ் பற்றித்தான். இத பாவிக்கறதுல ரொம்ப பேருக்கு செம குழப்பம். என்ன எழவுடா இது எங்கற ரேஞ்கும் போய்ச்சு. ட்விட்டரா இல்ல பேஸ்புக் ஷேயாரானு செம கன்பியூஷன். இருந்தாலும் அவங்க தந்திருந்த ட்விட்டர் போலவேயான சேவையான ஜைகூவை விட இது எவ்ளோ மேல்னு சொல்லலாம். இத பத்தி ரொம்பவே வலைப்பூக்களில் நீங்கள் படித்துவிட்டதால், இதற்கு அடுத்த கட்டமான சில விஷயங்களை பார்க்கலாம்.

கூகிள் பஸ்ஸில் பெரும் குழப்பம் இருந்தது அதன் வெளிப்படைத்தன்மை பத்தி. நாம ஷெயார் பண்ணுவதை பார்ப்பது நம்ம பின்தொடர்வாளர்கள் மட்டும்தானா?
ட்விட்டர் மாதிரி பப்ளிக்னு பப்ளிசிட்டி எல்லாம் பண்ணிட்டு, செய்யலைன்னா எப்பூடி....

இந்த கூகிள் பசங்ககிட்ட பிடிக்காததே இதுதான். எல்லாத்தையும் செஞ்சிட்டு கம்னு இருந்துடுவாங்க, சைனீஸ் மொபைல் மாதிரி (யூசர் மேனுவல் இருக்காது). அப்றோம் கொஞ்சம் கொஞ்சமா தயாரிப்பாங்க.
இவங்க எப்பவுமே இப்டித்தான். :)

மேட்டர் இன்னான்னா, பப்ளிக் ரிசல்ட்ஸும் இருக்கு மாமே. ஆல் யூ காட்ட டூ இஸ், ஜீமெயில்ல மெயில் சேர்ச் பண்ணுற பாக்ஸ்ல தேட வேண்டியதுதான். இது நீங்க கூகுள் பஸ் டேப்கு வந்த உடனேயே ஆட்டோமேட்டிக்கா "சேர்ச் பஸ்"னு மாறிடும். அப்றோம் வேண்டியத தேடிக்கலாம். செம ஸ்பீடு மச்சி.
கிவ் இட் எ ட்ரை...

இது இந்த வாரத்தோட நிலைமைதான். மீண்டும் சிந்திப்போம்....