Thursday, 12 August 2010

சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட்

நண்பனின் போஃனும் காதலியின் மொபைலும் ஒரே நேரத்தில் சுவிட்ச்ட் ஆப்ஃபில் இருந்தால் கூட தோன்றாதஒரு பயம் இருவரின் மொபைல்ஸும் கோல் வெயிட்டிங் இருக்கும் போது தோன்றிக் கொள்கிறது. இங்கும் மறைமுகமாக அப்ளை ஆகிறது 'சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட்' தியரி.

இங்கு இதைப் பற்றிப் பேசி வாங்கிக் கட்டிக்க விரும்பலை.


ஒரு சின்ன, மீன் கதை.


நான், அப்பா, கிராண்ட் பா மற்றும் மாமா எல்லோரும் சற்று புதுமை விரும்பிகள். புதுசா ஒரு விஷயம் ட்ரை பண்ணி பாக்கணும்னு காசை வாரி இறைப்போம். அப்டி ஆரம்பிச்சது வீட்டின் முன்புறம் ஏற்படுத்தப்பட்ட ரியல் அக்குவாரியம். பல ஆயிரங்கள் செலவளித்ததாக தாத்தா சொல்லி இருந்தாலும் அப்பாவுக்கு அது லட்சங்கலாயிற்று என்று டவுட் இருக்கவே செய்தது. நீர்வீழ்ச்சி, ஆக்சிஜன் சப்ளையர்ஸ், மலைகள், ஸ்டோன்ஸ் மற்றும் கடல் தாவரங்கள் என சைட் பிட்டிங்க்ஸ் வாங்கும் பொறுப்பு தாத்தாவிடமும், மீன்கள் சஜ்ஜஸ்ட் செய்யும் பொறுப்பு எனக்கும் தம்பி மாருக்கும் விடப்பட்டிருந்தது. ராப் பகலாக கூகிள் மற்றும் எக்ஸ்பெர்ட்ஸ் வாசல் படிகளில் கிடந்திருந்தோம். வாயில் பெயர் நுழையாத மீன்கள் எல்லாம் வாங்கப் பட்டன. சில மீன்கள் டேன்க் சைஸுக்கு ஏற்ப தமது அளவை மாற்றிக் கொள்ளுமாம் என்றார்கள். வாங்கிப் போட்டோம். சிறிய டேன்க்கில் இருந்து பெரிய டேன்க் போகும் போது பெரிசாவது ஓகே, ஆனா பெரிசிலிருந்து சிறிசுக்கு வரும்போது எப்படி சிறிதாக்கிக் கொள்ளும் என்று எனக்கு டவுட் தோன்றினாலும் அது செத்துப் போய்விடுமோ என்ற பயத்தில் எக்ஸ்பெரிமன்ட் செய்து பார்க்கவில்லை. இந்தப் பயத்தையே இவர்கள் வியாபார யுக்தியாக யூஸ் பண்ணிக்கொண்டிருக்கக் கூடும் என்று தம்பி சொன்னான்.


ஒரு 50 விதமான இனங்கள் வாங்கிய பின்னரே தாகம் தீர்ந்தது. இத்தனைக்கும் மீனைக் கையால் பிடிப்பதென்றாலே சுச்சா போகும் எனக்கு. ஒரு 'டேன்க் கிளீனர்' இன மீனைப் பிடிக்கப் போய் அது தனது மறைத்து வைத்திருந்த முள்ளால் இடித்து விட தொற்றிக் கொண்டது "மீனோ போஃபியா" அல்லது "பிஃஷ்ஷோ போஃபியா". அன்றிரவு கனவில் நான் சாப்பிடும் சாப்பாட்டில் கூட டேன்க் கிளீனர் உயிரோடு துடித்துக் கொண்டிருந்ததை பார்த்த கட்டிலை நனைக்காத குறையாய் சிலிர்த்தெழுந்து சில நாட்கள் மீன் சாப்பிடுவதை வேறு தவிர்த்து வந்தேன். இந்த முள் "சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட்" போட்டியில் வெல்லுவதற்காக அது கொண்டிருந்த ஒரு ஆயுதம்.


தலையில் தொப்பி அணிந்த மீன் என் பேவரைட்ஸ் இல் ஒன்று. அதன் தொப்பியை தொட்டுப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் ஒன்றாயிருந்தது. வழுவழுப்பாக ஜெலி போன்று வழுக்கிக் கொண்டு செல்லும். ரொம்ப சாதுவான மீன். என் போன்றது.


தம்பியின் பேவரைட், அரோவானா. லக்கி பிஃஷ் என்றும் அழைப்பதாக சொன்னார்கள். அது வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம் என்றார்கள். அது வாங்கியதில்தான் முக்கால்வாசிப் பணம் செலவழிந்தது.


எதோ ஒரு ஆசையில் வாங்கிவிட்டாலும் அதை மெயின்டைன் பண்ணுவது பெரிய தலைவலியாயிற்று. அனைத்தையும் வெளியில் எடுத்து ஒரு டெம்பரரி டேன்க் இற்குள் மாற்றி அக்குவாரியம்மை கழுவி மீண்டும் அவற்றை உள்ளுக்குள் விடுவதற்குள் அக்கு வேறு ஆணி வேறு ஆகிவிடும். பின்னர் "அக்குவாரியம் கழுவப் போய் அக்கு கழன்ற கதை" எழுதலாம். அக்குவாரியத்துக்குள் இறங்கி மீன்கள் பிடிப்பது என்பது சீன வித்தை. சின்ன வயசில் ஆற்றங்கரைகளில் நண்பர்களுடன் பிடித்திருக்கிறேன். மூன்று விதமாக. தூண்டில், வலை மற்றும் வடிப்பது. முதல் இரண்டும் மீன்கள் செத்தாலும் பரவாயில்லை என்று இறங்குவது. மூன்றாவது உயிரோடுதான் வேண்டும் என்று முடிவெடுத்து கங்கணம் கட்டிக் கொள்வது. இந்த முறைதான் பெரும்பாலும் எனது டேன்க்கிலும் யூஸ் பண்ணினோம். முதல் ஒரு சில முறைகள் நானே ட்ரை பண்ணினேன். எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறது என்பதே இந்த தகைமைக்குக் காரணம். தம்பி நீர் வாடிந்தோடச் செய்யும் குழாயில் நின்று அதைத் திறந்துவிடுவான், நான் கையில் துணியை பிடித்துக் கொண்டு உள் இறங்குவேன். இப்படி செய்யும் ஒரு நாளில் துணியிலிருந்து வெளியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது ஒரு மீன். இங்கு தொடங்குகிறது மீன்களின் சர்வைவல் எனும் போராட்டம்.


பல பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து வெல்வதே உலகில் நிலைக்கும் என்பதை சற்று விரிவாகச் சொல்வது சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட் தியரி. இந்த மீன் கதையிலும் அதே. தன்னை பிடிக்க வருபவர்கள் தொடக்கம் தன் சக மீன்கள் வரை அதன் போராட்டம். இது மீன்கதை நடந்ததெல்லாம் மூன்று வருடங்களுக்கு முதல். அதன் பின் அவற்றை கண்காணிக்கும் பொறுப்பிலிருந்து என்னை விலக்கி மேற்படிப்பு படிக்க வெளியூர் அனுப்பிவிட்டார்கள். நானும் ஏறத்தாள அவற்றை மறந்தே போனேன். இரவு விடுப்பில் ஊருக்குத் திரும்பிய போது அவற்றின் ஞாபகம் வந்தது. சென்று பார்த்தேன், அலங்கார விளக்குகள் சகிதம் டேன்க் ஜொலித்துக் கொண்டிருந்தாலும் உள்ளிருந்தது என்னவோ நான்கு ரக மீன்கள்தான். டேன்க் கிளீனர், காட் பிஃஷ், ஏஞ்சல்ஸ் மற்றும் நீண்ட வால் கொண்ட கோல்ட் பிஃஷ். எனது டேன்க் எனும் சூழலில் வாழத் தகுதியானவை என்ற பட்டத்தை கொண்டு கம்பீரமாக நின்றன.


காலையில் பாட்டி மீன்களின் மரணம் பற்றி ஒரு டேட்டாபேஸ் கொண்டு வந்து காட்டினாள். இந்த மாதிரி மேட்டர்களில் கில்லாடி அவள். ஊரில் நடந்த ஒரு முக்கோணக் காதல் கதை சொன்னாள். இங்கும் சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட்  தியரி அப்ளை ஆகி இருந்ததை கெஸ் பண்ண முடிந்தது. எனக்கு "தி குட் கய்" மூவி ஞாபகம் வந்தது. தன் காதலி தன் தன் ஜூனியரை காதலிக்கும் ஒரு ட்ராக் இதில் சைடாக சென்று கொண்டிருக்கும். 'குட்டி'யின் மேட்கைத்தேய வெர்ஷன் மாதிரி.தாத்தாவின் லாஜிக்கல் ஆர்கியூமென்ட்ஸ் சற்று வித்தியாசமானவை. அவர் சொன்னது "டு ஒவர்கம் தி சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட்  தியரி, தி ஒன்லி திங் யூ நீட் இஸ் செல்ப்ஃ கொன்பிஃடன்ஸ்"
நியாயம் என்றே தோனிற்று.Tuesday, 10 August 2010

மேற்கோள்கள் - 1

ஜென்னி: "நீ எப்பொழுதாவது கனவு கண்டிருக்கிறாயா, பாஃரஸ்ட், நீ யாராக இருக்கப் போகிறாய் என்பதை?"

பாஃரஸ்ட்: "நான் யாராக இருப்பேன் என்பதையா?"

ஜென்னி: "ஆமா"

பாஃரஸ்ட்: (குழம்பிய முகத்துடன்) "நான் நானாக இருக்கப் போவதில்லையா?"இது நிஜமான கேள்விகள். நாம் எல்லோரும் இப்படித்தான். எமக்கென்ற ஒரு காரக்டரை உருவாக்குவதை விடுத்து இன்னொரு நபர் போன்று ஒரு மாயை ஏற்படுத்திக் கொண்டு வாழ விரும்புகிறோம். பொய்ப் பகட்டு.இது கண நேர சந்தோஷம் தந்தாலும், நிஜமான திருப்தி இருக்கப் போவதில்லை.ஒருவரை பின்பற்றுவது என்பதை தப்பாக புரிந்து கொண்டதன் விளைவே அது. நீ இன்னொருவருடை காப்பியாக இருப்பதைக் காட்டிலும், உன்னைப் பார்த்து நீ இவருடைய வழி வந்தாலும் தனக்கென்று  ஒரு சுயம்கொண்டிருந்தாய் என்று மற்றவர்கள் சொல்லும்படியாக இருப்பதே உண்மையான மகிழ்ச்சி. இதை உறைக்கும் படியாய் சொல்லிய இந்த வசனங்கள் இடம் பெற்றது "பாஃரஸ்ட் கம்ப்" மூவியில் :)Monday, 2 August 2010

தூக்கம், ஜாக்கிங், தாத்தா மற்றும் அவள்

அதிகாலையில் குளிப்பது உடம்புக்கு நல்லது, அதுவும் கட்டிலில் குளிப்பது??? இந்தக் கொடுமை எல்லாம் எங்கள் வீட்டில்தான் நடக்கும். பொதுவாவே விடுமுறை என்றால் பத்து மணிக்கு அப்புறம் விடிவது சூரியனின் வாடிக்கை. அல்லது நமக்கு அப்பிடி நடக்கற மாதிரி பீஃலிங்க்ஸ் வரவேண்டும் என்பது கும்பகர்ணன் காலம் தொட்டு அவரது சீடப் பெருந்தகைகளால் (பாஃர் எக்ஸாம்பிள்: நான்) பின்பற்றப்படும் நடைமுறை. ஆனா எங்க பேஃமிலி ராம வம்சத்தை சேர்ந்தவர்கள் போலும். இந்த ஹாபிட் சுத்தமா பிடிக்காது. ஆகவே விடுமுறை நாட்களில் சாராயக்கடைக்குப் போவது போல பதுங்கிப் பதுங்கி இதை செய்ய வேண்டிய ஒரு கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டேன். நான் எல்லாப் இந்த மாதிரி விஷயங்களில் இன்னுமே "பீட்டா" ஸ்டேஜய் தாண்டவில்லை என்பது வெளியிலே சொல்ல முடியாத ரொம்பக் கேவலமான ஒரு மேட்டர். பெரும்பாலும் மாட்டிகொண்டதே உண்டு. இதை கண்டுபிடிப்பதில் தாத்தா கை தேர்ந்தவர். பூட்டியிருக்கும் ஜன்னலை அசவுடன் (ஜன்னல் அசையுமாறு தாங்கி இருக்கும் தாங்கி) கழட்டிக் கொண்டு உள்ளே வந்தவர். இத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு தூங்குவதை விட காம சூத்திரத்தில் உள்ள அனைத்து போசிஷன்களையும் ஒரே நாளில் ட்ரை பண்ணிப் பார்த்துவிடலாம். இதில் மெகா கில்லாடி என் முதல் தம்பி. அவன் தூங்கணும்னு முடிவு பண்ணிட்டான்னா அவன் பேச்ச அவனே கேக்கறதுக்குக் கூட முழிச்சிட்டு இருக்கமாட்டான். ஒருமுறை அடுத்த நாள் நடைபெற இருக்கும் ஒரு கேம் ஷோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். தூக்கம் வருதுன்னான். "கொஞ்சம் வெயிட் பண்ணுடா. இன்னும் டென் மினிட்ஸ்ல தூங்கலாம்" னு சொல்லிக் கொண்டிருந்தபோதே கழுத்தில் ஏதோ குத்துவதை உணர்ந்தேன். ஒரு நுளம்பு. அடித்துவிட்டுத் திரும்பியது அவன் குறட்டை விடாத குறை. இத்தனைக்கும் அப்போது இரவு எட்டு மணிதான்.

"நீ எத்தனை மணிக்குப் படுக்கறியோ அது மேட்டர் இல்லை, அஞ்சு மணிக்கெல்லாம் எழும்பறதுதான் மேட்டர்" என்பது தாத்தாவின் குவாட்டர் அடிக்காமல் சொன்ன தத்துவம். இத்தனை அலப்பறைக்கும் காரணம், அந்த பாழாப்போன "ஜாக்கிங்". தொந்தி குறைப்பதுக்கு டாக்டரிடம் அட்வைஸ் கேட்கப் போய் தலையில்வாரி இறைத்துக் கொண்ட மண் அது. ஆக்சுவலி இது என்னமோ தாத்தாக்குத்தான். நானே இதை தூக்கி என் பனியனுக்குள் போட்டுக்கொண்டதுக்கு காரணம் அவள். எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் ஒடிந்து போய்க்கொண்டிருந்த எங்கள் கிளாஸ் இற்கு ரொம்ப நாளைக்கப்புறம் வந்த ரஜினி படம் மாதிரி வந்து இறங்கினாள் அந்த தேவதை. அவளை இம்ப்ரஸ் பண்ண எல்லாரும் ட்ரை பண்ண, சும்மா ஒரு மூலையில் உக்கார்ந்து கொண்டிருந்த என்னையும் நடுத்த தெருவுக்கு இழுத்து வந்து வம்பிழுத்தது என் ஈகோ. ஒரு நண்பி மூலமாய் அந்த கேர்ள் தனக்கு வரவேண்டிய பாய்பிரண்ட் பத்தி என்ன ஐடியா வைத்திருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டேன். அதில் முதலாவது கண்டிஷன், நோ தொந்தி.

இனி டாக்டர் அட்வைஸ் சீனுக்கு வருவோம்.டாக்டர் சொன்னபடியே தினம் தினம் ஜாக்கிங் போக முடிவெடுத்த என் தாத்தா வெளியே வரும் போறது, ஓர் உணர்ச்சி வேகத்தில் நானும் வரவான்னு கேட்டுத் தொலைத்தேன். தாத்தா பார்த்த பார்வை "ஏன்" என்ற கேள்விக் குறியாய் மாறி எனைத் தட்டியது. "இல்ல சும்மா, பாடிய மெயின்டெய்ன் பன்னலாமேன்னுதான்" என்றேன்.
"அப்போ கண்டிப்பா எல்லா நாளும் வந்துடனும்".
"ஓகே, எத்தனை மணிக்கு?"
"அஞ்சு"
"ஓகே தாத்தா, டன்"
"டன்"

அப்படித்தான் ஆரம்பித்தது இந்தக் கொலை வெறி பிடித்த சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் படலம்.கொடுமையோ கொடுமை என்று ஒவ்வொரு நாளும் தொந்தி குறைக்க காலை அஞ்சு மணிக்கெல்லாம் பீச் சென்று நான் ஓடிக் கொண்டிருக்க, தன் காதலனுடன் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணிக்கொண்டு மேற்படிப்புக்காக வெளிநாடும் சென்று விட்டாள் அவள்.

அவள் டைரியில் என் பேரோ அல்லது அடையாளமாக என் சோடாபுட்டிக் கண்ணாடியோ குறிப்பிடப் பட்டிருக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், அவளுக்கு நான் யார் என்பதே தெரிந்திருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், நான் அவளுக்காக ஜாக்கிங் போன அந்தக் காலப் பகுதியில் என் டைரியில் ஒவ்வொரு நாளும் அவளுக்காக டெடிகேட் செய்தே ஆரம்பித்தேன். அது அழகிய காலப் பகுதி.
அது காதலில்லை. அவள் சென்றதுக்காக நான் வருத்தப் படவுமில்லை. இருந்தாலும் அவள் இப்போதிருக்கும் அட்ரஸ் தெரிந்தால்,"கொஞ்ச காலத்திற்கு என் உடம்பை மெயின்டைன் பண்ண ஹெல்ப் பண்ணியதுக்கு ரொம்பத் தேங்க்ஸ்" என்று ஒரு மொட்டைக்கடதாசி போடலாம் என்றிருக்கிறேன் :)