Saturday 31 October 2009

சுஜாதாவிற்கு வந்த எஸ்.எம்.எஸ்கள் (நன்றி கற்றதும் பெற்றதும்)

* சுதந்திரமாகப் பிறந்தோம்; இன்கம்டாக்ஸ் ஆல் இறந்தோம்

*டாய்லட் பேப்பர் ஐ விரயம் செய்யாதீர், இரண்டு பக்கத்தையும் பயன்படுத்துங்கள்

*எனக்கு அதிர்ஷ்டத்தை துரத்துவதிலேயே நிறைய தேகப் பயிற்சி கிடைக்கிறது

*கடும் உழைப்பு எதிர்காலத்துக்கு நல்லது, சோம்பேறித்தனம் நிகழ்காலத்திற்கு

*நீ மிகவும் தனிப்பட்ட ஆசாமி மாற்ற எல்லோரையும் போல


(சுஜாதா வின் ஏகலைவன்களில் ஒருவன் நான். என்னைப் பாதித்த மரணங்களில் ஒன்று அவரது. இன்று அவரின் நினைவு வரவே இந்த பதிவு... நேற்று எனது பழைய டயரியை தூசு தட்டிக் கொண்டிருந்தேன். அப்போது கீழே விழுந்தது ஒரு கவர். பிரித்த போது எட்டிப்பார்த்தது நான் எழுதி அவருக்கு அனுப்பாமல் வைத்திருந்த கடிதம். அதில் நான் கேட்டிருந்த கேள்வி இப்பதிவின் தலைப்பு. எனக்கே பெரிய ஆச்சர்யம் அடுத்த இதழில் அவர் எழுதி இருந்தார். என் கேள்வி எப்படி புரிந்ததோ. இறைவனுக்கு நன்றிகள். அதன் நினைவாக இது...)
)



Wednesday 7 October 2009

கூகிள் இன் புதிய லோகோ ( ஒக்டோபர் 10 )


இன்று 07/10/2009 கூகிள் பார் கோட் கண்டுபிடிக்கப்பட்டதை நினைவு கூறும் முகமாக தனது லோகோ இனை மாற்றி உள்ளது. வழக்கமாக தனது இயல்பு லோகோவை மாற்றாமல் அதனுள்ளேயே மாற்றம் செய்வது கூகிள் இன் வழக்கம். இம்முறை வெறும் பார் கோட் இனை மட்டுமே கொண்டுள்ளது. ஒரு வேளை இந்த பார் கோட் ஐ ஒரு பார் கோட் ரீடர் இல் கொடுக்கும் பொது கூகிள் என வரக்கூடும்...




Saturday 26 September 2009

கடல்கொள்ளையன் போன்று பேசுங்கள்


சமீப காலங்களில் வலைப்பூக்களில் வலம் வந்த போதே இப்படி ஒரு விஷயம் இருப்பதை தெரிந்து கொண்டேன்.
அது "உலக கடல்கொள்ளையர்கள் போன்று பேசும் தினம்". உலக தினங்களில் வித்தியாசமான ஒன்று. இது வருடாந்தம் செப்டம்பர் 19 ஆம் திகதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கடல்கொள்ளையர்கள் எவ்வாறு பேசுவார்களோ அவ்வாறே நாம் பேச வேண்டும், இந்நாளை கொண்டாடும் பட்சத்தில். இதில் என்ன பிரச்சனை என்றால் நமக்கு ஆங்கில கடல்கொள்ளையர்கள் பேசும் முறையே தெரிந்திருக்கிறது. தமிழ் கடல்கொள்ளையர்கள் இருந்தார்களா என்பது பற்றி தெரியவில்லை. ஒரு வேளை நாம் சற்று நல்லவர்களாக இருந்திருக்கக்கூடும். தமிழ் அன்பர்கள் இதில் ஒரு ஆய்வு செய்ய வேண்டுகின்றேன்.

சரி இனி ஆங்கில கடல்கொள்ளையர்கள் பகுதிக்கு வருவோம். விஷயம் என்னவென்றால் இத்தினத்தை சிறப்பிக்கும் முகமாக கூகிள் மற்றும் பேஸ்புக் ஒரு புதிய மொழி நடையை அறிமுகப்படுத்தி உள்ளன. இது கடல்கொள்ளையர்களின் ஆங்கிலம் என அழைக்கப்படுகிறது. வித்தியாசமான பாணியில் இருந்தாலும் மிகவும் ரசிக்க வைக்கும் இம் மொழியை ஒரு முறை பயன்படுத்தித்தான் பாருங்களேன்.

கூகிள் பைரேட்
பேஸ்புக் இல் இம்மொழியை செயல்படுத்த செட்டிங்க்ஸ் டேப் இலுள்ள மொழிகள் பக்கத்துக்கு சென்று "ஆங்கிலம் பைரேட்" என்பதை தெரிவு செய்யலாம்.

எவ்வாறு இம்மொழி நடையை பேசுவது என்று அறிய இங்கே க்ளிக்குங்கள்.

இம்மொழி நடை தோன்றியதற்கு காரணமாக அளவுக்கு மீறிய மது பாவனை மற்றும் உப்புக் காற்று போன்றன சொல்லப்படுகிறது



Thursday 24 September 2009

சில புகைப்படங்களும் கை வண்ணங்களும்... :)




























மீண்டும் ஒரு சிறு இடைவெளி... இரண்டு மாத காலங்களுக்கு என் காதலி மடிக்கணனி என்னை விட்டு விலகி இருந்தாள். ஒரு விதமான ஊடலில் செயலிழந்து போனது அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இடைப்பட்ட காலங்களில் எனது தேடல் சற்றுக் குறைந்து போனது அப்பட்டமான உண்மை.

சில நாட்களுக்கு முன் நானும் எனது நண்பர்களும் ஒரு சில புகைப்படங்களை எடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தோம். அப்போது எடுத்தவை சிலவற்றை தங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். இது ஒரு விதமான ட்ரிக் ஷாட் உத்தியை கையாண்டு எடுக்கப்பட்டது. மென்பொருட்களின் மூலம் எடிட் செய்யப்படவில்லை. விண்டோஸ் விஸ்டா இலுள்ள "விண்டோஸ் போட்டோ கலரி"ஐ பயன்படுத்தி ப்ரைட்னஸ் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது





Sunday 23 August 2009

இலங்கை வலைப் பதிவர் சந்திப்பு - நடந்தது என்ன???

காலை 9 மணிக்குன்னுதான் வந்தியத்தேவரு எனக்கு மின்னஞ்சல் பண்ணியிருந்தாரு. நமக்கும் நேரந்தவராமைக்கும் ரொம்பத்தான்... அப்பிடியே ஒட்டிகிட்டு போகும்... சரியாக 9.37 ஆயிடிச்சு நான் வினோதன் மண்டபத்தை அடைந்த போது...

கேக்கில் பாதி மெழுகுதிரிகள் ஏற்றப் பட்டிருந்தன. வலைப்பூக்களின் 10 ஆவது பிறந்த நாளாம். நல்லா இருங்கப்பா... (நான் அலப்பறை பண்ண ஆரம்பித்து 2 வருடமாகப் போகிறது. ஆனா நான் 2004 இலேயே வலைப்பதிவு பண்ண ஆரம்பித்து விட்டது எத்தனை பேருக்கு தெரியும். எனக்கே ஒரு மாசம் முன்னாடிதான் தெரியும். அந்த ப்ராபைல் இப்போது முடக்கப்பட்டுவிட்டது. அது கூகிள் ப்ளாகரை வாங்க முந்தி உள்ள விஷயம்.)

நான் வர முன்னாடி சுபானு கொஞ்சம் பேசி வலைப்பதிவிடுவது பற்றி விளங்கப்படுத்தினராம் அதுக்கு முன்னாடி நம்ம புல்லட்டு பேசினது நமக்கு பின்னாடிதான் தெரியவந்தது. மிஸ் பண்ணிட்டன் மாப்பு.

அப்பறம் சுமார் எண்பது வலைப்பதிவர்களும் தங்களை அறிமுகம் செய்துகொண்டோம். நம்ம அலப்பறை சில பேருக்கு கேட்டிருந்தது. "அவனா நீ" கணக்காய் முறைத்துக் கொண்டார்கள். எனக்கு பக்கத்தில் தெரு விளக்கு. மாப்ள சந்திப்பு தொடங்கினதிலிருந்தே சிரிச்சிட்டிருந்தாப்ல.

பின்னாடி மருதமூரான் பேசினாப்ல. பார்ட்டி கொஞ்சம் சீரியஸ் டைப் மாப்பு. இலங்கை தமிழ் வலைப்பதிவர் திரட்டி, மட்றும் சகோதர மொழி வலைப்பதிவர் திரட்டி அறிமுகம் சென்ஜாப்ல.

அப்புறம் எழில்வேந்தன் அண்ணா பேசினாரு. அதே அடக்கம், அதே கனிவு. வலைப்பதிவிடலுடனான தனது உறவு பத்தி பேசினாப்ல.

அப்புறம் சேரன் கிருஷ் பேசினாப்ல, வலைப்பதிவு தொழினுட்பம் பத்தி மாப்பு கொஞ்சம் எடுத்து விட்டாப்ல. நம்ம துறைங்கிரதால நானும் கொஞ்சம் நல்லாவே காதைப் போட்டுகிட்டேன்.

அப்பறம் லோஷன் அண்ணா பேசினாப்ல... கொஞ்சம் பல்சுவையும் இருந்தாப்ல.

கலந்துரையாடல் இடம் பெற்றது... இதில் அனைவரும் பல்வேறுபட்ட தலைப்புகளில் பேசிக் கொண்டனர். காரசாரம் செம அதிகம்.

கடைசியா நம்ம வந்தியத்தேவரின் பின்னூட்டம். அவருதான் கிங்குல. கலக்கிடே தலைவா. நமக்கு அலப்பறைனுதாந் பேரு. போனதில இருந்து எதுவுமே பேசாம கம்னு கிடந்திட்டு அப்டியே கப்னு வந்துடம்ல...

பி.கு: புல்லட்டின் அன்னதானம்தான் எங்கேயோ சந்தடி சாக்குல மிஸ் ஆகிட்டு...



Saturday 22 August 2009

கந்தசாமியும் எனது குற்ற உணர்வும்

ரொம்ப நாளைக்கப்பரம் ஒரு படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணாப்ல...

நானும் என் கிறுக்குப் பய புள்ளைய ரெண்டு பேரும் போனாப்ல... பக்கத்துலேர்ந்த சினிசிடிக்கு... படம் பேரு "கந்தசாமி"... நம்ம விக்ரம் பய புள்ள நடிச்சிரிக்காப்ல... மூணு வருஷமா அப்பிடி என்னதான் எடுத்தாங்களோ தெரியல... எதிர்பார்ப்புகளை எல்லாம் தவிடு பொடி ஆக்கி இருப்பதே அவர்களது சாதனை...

பாடல்கள் முழுக்க காமம் இழையோடியிருக்கிறது. இரட்டை அர்த்தங்கள் வரிகளில். விக்ரம்கு சொந்த வீடு இல்லை போலிருக்கு. அவர் எங்கிருந்து வாரார்னே தெரியல. ஷ்ரேயா தலை முடியை வெட்டி இருப்பதுதான் அவர் நடிப்பிற்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பு. சுசிக்கும் நடிப்பாசை துளிர்விட்டுவிட்டது போல. பிரபு மட்டுமே சற்று மிளிர்கிறார். ஆக கந்தசாமி அதிஷா சொன்னது போல கந்தல்சாமியே...

பெருசா சொல்றதுக்கு இதுல ஒண்ணுமே இல்ல. ஒரே வரியில் சொல்வதானால்...

கந்தசாமி = அந்நியன் + சிவாஜி + சிட்டிசன் + ரமணா

எல்லா மசாலாவும் கலக்கப் போய் ஓவர் டோஸ் ஆகி எமக்கு வயிற்று வலி வந்ததே மிச்சம்...

பி.கு: எனக்கு முன்னாடியே டிக்கட் எடுத்து ஹால் இரண்டில் உள்ள ஷோவை பார்க்காமல் விடுத்து எனாக்காக காத்திருந்து ஹால் மூன்றில் பார்க்க என்னுடன் வந்த என் நண்பனை உள்ளே அனுமதிக்காத சினிசிட்டி காரர்களுக்கு என் குட்டு...

அந்த நண்பன் இற்கு இந்த விமர்சனம் சமர்ப்பணம்...



Wednesday 19 August 2009

டயலொக் ஜி.எஸ்.எம். இன் ப்ளாஸ்டர் பகேஜ் இன் மாத செலவை மிச்சம் பிடிப்பது எப்படி...

எனது பேஸ்புக் பராபைல் இல் பலரதும் வரவேற்பைப் பெற்ற இக்குறிப்பு அலப்பறை ரசிகர்களுக்கு...



ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு குறிப்பு... இதை பற்றி எழுத ஆர்வமூட்டிய நண்பன் நிப்ராஸ் இற்கு முதலாவதாய் என் நன்றிகள்...

சமீப காலமாக என் மொபைல் பில் ஆயிரங்களில் எகிறுகிறது...
இதனாலேயே இந்த ஐடியா...

*மிஸ்ட் கால் - உலகத்திலேயே ரொம்ப சிக்கனமான தொலைத்தொடர்பு வசதி. யாரு கண்டுபிடிச்சான்னே தெரியல்ல. அனா இப்டி ஒரு பிரயோஜனம் இதுல இருக்கும்னு நெனச்சிருப்பரோ என்னவோ. உயிரே போற அவசரம்னாலும் மிஸ்ட் கால் பண்றவங்க ரொம்ப பேறு இருக்காங்க. நீங்களும் பயன்படுத்திக்கலாம்.

*கால் மீ எஸ்.எம்.எஸ். அலர்ட் - டயலொக்கே பிழைச்சி போங்கடான்னு போட்ட பிச்சை... தந்தாண்டா சாமின்னு இருக்கற வரைக்கும் பயன்படுத்திக்கறது நம்ம புத்திசாலித்தனம். கிழமைக்கு இத்தனைனு ஒரு வரையறை இருக்கறதால கொஞ்ச கவனம் தேவை.

*நட்பு வலயம் - இது நம்ம ஏரியா... என் சுபாவத்துக்கு கொஞ்சமும் பொருந்தாது என்றாலும் வேற வழி??? ஆண்கள் ஆண்களையும் பெண்கள் பெண்களையும் நண்பர்களா ஏத்துக்கிட்டா கால் பண்ண வேண்டிய அவசியமே இல்ல :) அல்லது ப்ளாஸ்டர் பகேஜ் வச்சிருப்பவங்களா பார்த்து நட்பு வச்சிக்கலாம். ப்ரீபெய்ட் காரர்கள் கையாளும் யுக்தி இது...

*பொய் - லைன் டிஸ்கனெக்ட் ஆயிடிச்சு மச்சான்னு வாய் கூசாம எடுத்து விட வேண்டியதுதான்... இப்பிடி பேசி பேசி இன்கமிங் மட்டும் வாற மாதிரி ஒரு ஏற்பாடு பண்ணிக்கலாம்.

*உண்டியல் - தினமும் செலவழிக்கிற காசுல ஒரு 15 ரூபாயை எடுத்து ஒரு உண்டியல்ல போட்டு வரலாம். மாச கடைசில தேவையான காசு வந்துடும்.

*நம்மட ப்ளாஸ்டர் பேகேஜ் இல் உள்ள இலவச ஆயிரம் நிமிடங்கள் முடிஞ்சிடிச்சுன்னு வச்சுக்குவோம், அப்போ நம்ம குடும்பத்திலோ நண்பர்களிலோ பிளாஸ்டர்னு ஒரு சேவையை டயலொக் எதுக்கு அறிமுகப்படுத்திச்சுன்னு வெளங்கவே வெளங்காத சில அப்பாவிப் பய புள்ளைங்க இருப்பாங்க. உதாரணத்திற்கு நம்ம அப்பா, அம்மா :) இவங்ககிட்ட இருந்து மொபைலை நைசா லவட்டிடலாம். மாசாமாசம் என் அம்மாக்கு 450 நிமிஷங்கள் மீதமாவே இருக்கின்றன :)

மேலதிகமான உத்திகளை நீங்களும் எடுத்து விடுங்களேன் :)

இதில் சில உத்திகளை தந்த நண்பி டயானாக்கும் எனது நன்றிகள்...



Monday 17 August 2009

CD ஒரு கண்ணோட்டம்...

CD ஒரு கண்ணோட்டம்னதும் ஏதோ நான் CD உருவான வரலாறு பற்றி ஆராயப் போறேன்னு எல்லாம் ரொம்ப தப்பா எட போட்டுடாதிங்க.

அது வேற, இது வேற...

என்னடா இவன் "வரும், ஆனா வராது" ரேஞ்சுக்கு பெரிய பில்டப் பண்ராநேன்னு நீங்க யோசிக்கலாம். யோசிக்காதவங்களுக்கு ஒரு பத்து செகண்ட் டைம் தாரேன் யோசிச்சிகோங்க... 1,2,3,4,5,6,7,8,9,10...

ok?

சரி, இப்ப இதால சகலருக்கும் அறிவிச்சிக்கறது என்னன்னா... cd என்பது என் நண்பர்கள் வட்டத்தில் வேறொரு அர்த்தமும் கொண்டுள்ளது... வாய் தவறி நகைச்சுவையாக உதிரும் வார்த்தைகளை நாங்கள் CD என்று குறிப்பிடுவோம்.

உங்களுக்காக அப்படி சில cd க்கள்...

1. மண்ணுக்குள்ள கண் விழுந்திடுச்சு - கண்ணுக்குள்ள மண் விழுந்திடுச்சு என்கிறது வாய் ட்விஸ்ட் ஆகி இப்பிடி...

2. பிலோவை தூக்கி தலையணைக்கு கீழ வச்சிட்டுதான் நான் தூங்குவேன் - மொபைல் ஐ தூக்கி.................................

3. சன்டிங் - சண்டே + ஈவ்னிங்

4. சிகரட் பற்ற வைக்க முயன்ற நண்பன் "மச்சான் பெற்றோல்மெக்ஸ் இருக்கா?" - மச்சான் லைட்டர் இருக்கான்னு கேக்குறாராம்... இந்த லட்சணத்துல சிகரட் ஒரு கேடு...

5. மச்சான் போனுக்கு டவரேஜ் இல்லடா... - டவர்ல இருந்து வார கவரேஜ்????

6. நான் கொழும்பு, இப்ப மதன்ல இருக்கன் - மின்னலே எபெக்ட்???

7. கிளாஸ் பட்டு கை உடஞ்சி போய்ட்டு - கை பட்டு....

8. தலை பார்க்கவும் ஏலாது, முகம் வாரவும் ஏலாது - முகம் பார்க்கவும் ஏலாது, தலை வாரவும் ஏலாது....

பி.கு. & மு.கு: உங்க நண்பர்கள் மிக வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் ஒரு விஷயம் பற்றிப் பேசும் பொது இவ்வாறான பிழைகள் விடுவார்கள். ஒரு தடவை ட்ரை பண்ணித்தான் பாருங்களேன். ரொம்ப நகைச்சுவையாக இருக்கும். ஆனா அவங்க மனம் நோகாத படி நடந்துக்கறது உங்க பொறுப்பு.

பி.கு. & மு.கு - பின் குறிப்பு & முக்கிய குறிப்பு



Sunday 16 August 2009

கில்லி திருட்டு VCD முதல் ஷோ

ரொம்ப நாளா எழுதணும்னே நினச்சிட்டு இருந்த ஒரு விஷயம்... என் வாழ்கைல மறக்க முடியாத வேடிக்கையான அனுபவம் :)

காலம்: கில்லி படம் ரிலீஸ் ஆகி சரியாக எட்டு நாட்கள்
நேரம்: இரவு ஒன்பது மணி

வீட்ல சும்மா உக்காந்து கொப்பிய புரட்டிகிட்டிருந்தேன். "உனக்கு ஒரு கோல்" கிச்சன்லேர்ந்து அம்மா கூப்பிட்டாங்க.
போய் ரிசீவரை எடுத்து காதில் வைத்து "ஹலோ", சொன்னதுதான் தாமதம். எதிர் முனையில் ஒரு சந்தோஷமான குரல் ஒலிக்க தொடங்கியது.
"ஹலோ மச்சான் நான்தாண்டா .................................., கில்லி படம் VCD வந்திடுச்சுடா கைய கால புடிச்சி முதல் காப்பி எடுத்துகிட்டு வந்துட்டேன். நானே இன்னும் பார்கல்ல, வீட்ல இன்னிக்கு பார்க்கற நெலம இல்ல, உனக்கு வேணும்னா இரவைக்கு பார்த்துட்டு தா" என்றான் அவன்.

ஆஹா இது என்னடா பழம் நழுவி பால்ல விழுந்த கதையா இருக்கேன்னு செம சந்தோசம் எனக்கு. விஜய் படம், அதுவும் முதல் காப்பி அந்தகாலத்துல இதெல்லாம் ஒரு சினிமா ரசிகனின் வாழ்கை லட்சியம். அப்போ விஜய்யும் கொஞ்சம் நல்லாவே நடிச்சிட்டிருந்தார். அப்போது அவர் தெரிவு செய்த கதைகள் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியானவை.

"ஒகே மச்சான் எண்ணி பத்து நிமிஷம், உன் வீட்ல நான் நிப்பேன்" னு போன்னை வைத்தேன்.

"அம்மா, கொஞ்சம் வெளியில் போய்ட்டு வாரேன்".

எனக்கு வீட்ல எப்ப வேணாலும் வெளில போற அனுமதி இருந்திச்சு.

முதல் கட்ட நடவடிக்கையாக நான் போனது, என் இன்னொரு நண்பன் வீட்டுக்கு. அவன்கிட்டாதான் அப்போ ரொம்ப வேகமா சைக்கிள் மிதிக்க கூடிய கால்கள் இருந்தன. நண்பர்களுக்கிடையிலான நட்புறவு சைக்கிள் ஓட்டப் போட்டிகள் டியூஷன் முடிந்த கையோடு அவரவர் வீடு செல்லும் பாதைகள் பிரியும் மெயின் சந்தி வரை நடக்கும். அதில் அனைத்திலும் அவன்தான் வெல்லுவான். நான் எப்போதும் பின் புறமிருந்து முதலாவதாய் செல்வேன். எனவே கொஞ்சம் அவசரமான வேலைகளுக்கு என் சைக்கிளில் நான் அவனை பிக் அப் செய்து கொள்வது வழக்கம்.

கதவை தட்டினேன். வந்தது அவன்தான். "என்னடா?" ன்னான். மேட்டரை சொன்னேன். அவன் விஜய்யின் தீவிர ரசிகன். எங்க ஊர் விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஆகும் அளவுக்கு. எனக்கு பயம் என்னடான்னா முதல் காப்பிய தான் பாக்கனும்னு ஒத்த கால்ல நின்னான்னா ஒண்ணும் பண்ணமுடியாது. குடுத்துத்தான் ஆகணும். நான் அவனுக்கு பண்ணவேண்டிய செய் நன்றிகள் அந்த அளவுக்கு எகிறிப் போய் இருந்தன.

கொஞ்ச நேரம் யோசிச்சான். "ஓகே மச்சான் போறது ஒண்ணும் பிரச்சின இல்ல. இன்னிக்கு வீட்ல கொஞ்சம் விசேஷம், மாமாக்கு திருமண நிச்சயதார்த்தம். அதால இன்னிக்கு வீட்ல படம் பார்க்கிற நிலம இல்லியேடா" ன்னான். ஆஹா, உனக்கு அப்பிடி அப்பிடி வேற ஒரு ஐடியா இருக்கா. முதல் காப்பி நான் பார்க்கணும்டா... மனசுக்குள்ள சொல்லிகிட்டேன்.

"சரி, போய் முதல் எடுத்து வருவம், நிற்கு நீ பார்த்துட்டு காலைல எனக்கு தா" என்றான், ஏதோ அவன்ட சொந்த vcd மாதிரி.
"ஓகேடா சீக்கிரம் ஏறு அவசரமா போகணும்" என்றேன்.
"கொஞ்சம் பொறு, என்கிட்டே வேற ஒரு சாமான் இருக்கு" னு உள்ள போனவன் கைல ஒரு கீயுடன் வந்தான்.

"என்னடா மாப்ளே இது ?" னு கேட்டு முடிக்கல அவன் கை காட்டிய திசையில் ஜம்முனு ஒற்றைக்காலில் சாய்ந்த படி இருந்தது ஒரு 'சலி' / 'சாலி' மொட்டோர்பைக்.

ஆஹா, இது அதுல்ல கணக்கா நான் போய் பின்னாடி உக்கார அவன் உதைத்த எட்டாவது உதையில் மரித்தெழுந்தது அந்த பைக். கிட்டத்தட்ட பக்கவாதம் வராத குறை அதுக்கு. ஹெட்லைட் கிடையவே கிடையாது. ஹேண்டில் ஈசான மூலைப்பக்கம் ஒரு 30 பாகையில் திருப்பி வைத்தால்தான் அது நேராக செல்லும். செயின் இன் சத்தம் யோகி பி ரீமிக்ஸ் பண்ணின பாட்டு கணக்கா இருந்தது.
போதாக்குறைக்கு அன்னிக்கு மழை வேறு. சற்று தூறிக் கொண்டிருந்தது. தவாளிப்புகளே இல்லாமல் வழுக்கைத் தலை ரேஞ்சுக்கு இருந்த அதன் டயர்கள் எந்த அளவுக்கு தாக்குப் பிடிக்கும்னு என்னால் கணிக்க முடியவில்லை...

மெயின் வீதி வந்தவுடன் அவன் அவனது புத்தியை காட்டத்தொடங்கினான். பைக் சற்று வேகமெடுப்பதை உணர்ந்தேன். "டேய், மெதுவா போடா".

"நான் வேகத்தின் காதலன்" என்று கத்திய படியே ஆக்சிலேட்டரை முறுக்கினான் அவன். "எங்கயாவது முட்டிகிட்டு அப்புறம் யோசிக்காம கொஞ்சம் மெதுவாவே போவம்டா, மழை வேறு பெய்யுது" சொல்லி முடிச்சேனான்னு ஞாபகம் இல்ல. போன வேகத்தில் முட்டியது ரோட் கிராஸ் பண்ணின ஒரு லுமாலா உடன்.

லுமாலா சரிந்து ரோட் இல் விழுந்தார். எங்களுக்கு லைசன்ஸ் எடுக்கவே மூணு வருஷம் இருக்குன்னு அப்போதுதான் ஞாபகம் வந்திச்சு. "மவனே எதுவும் யோசிக்காதே முறுக்கின வேகத்திலேயே புடி"ன்னேன்.
மனசுக்குள்ளே "அர்ச்சுனரு வில்லு" பாட்டு விசுவல் உடன் ஓட ஆரம்பித்தது.

விஜய்யை நினச்சுகிட்டே முருக்கியிருக்கணும் அவன், வண்டி செம ஸ்பீட் எடுத்தது. அதன் அதியுயர் வேகமே நாப்பதுதான் என்று கொஞ்ச நேரத்திலேயே எங்களுக்கு விளங்க ஆரம்பித்தது. பின்னால் திரும்பி பார்த்த போது சுமார் ஒரு 30 செக்கனுக்கு பின் ஸ்பொட் இல் இருந்து ஒரு ஸ்பிளென்டர் ஒன்று சீறிக் கிளம்புவது என் கண்ணுக்கு விளங்கியது. "ஆகா முத்துப்பாண்டி துரத்த ஆரம்பிச்சிட்டான்டா, எங்கயாவது உள் ரோடா பார்த்து வண்டிய திருப்பு" கத்தினேன் நான்.

வந்த முதலாவது திருப்பத்தில் திருப்பினான் அவன், டென்ஷன் இல் ரோட் இல் இருந்த கல்லை கவனிக்க் தவறிவிட்டான் அவன். முன் டயர் பட்டதும்தான் தாமதம் கிளம்பிக்கொண்டது. மிக முக்கியமான காரணம் நான் கொஞ்சம் ஓவர் வெயிட் என்பது. இதுவரை காலமும் அதை மறுத்து வந்த நான், இக்கனத்தில்தான் மற்றவர்கள் சொன்னது நிஜம் என்பதை உணர்ந்தேன். இப்போ உணர்ந்து என்னாத்த பண்றது...

இனி வண்டி அவன் கட்டுப்பாட்டை இழந்தது இருவருக்கும் புரிந்தது. பின் டயரில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் வண்டியின் வேகத்தை குறைக்க இருவருக்குமே தோணவில்லை. நான் இடுப்பை இடமும் வலமுமாக ஆட்டி வண்டியை திசை திருப்ப தொடங்கினேன். இந்த கபலீகரத்தில் வண்டியின் ரெயர் வியூ கண்ணாடிகளில் ஒன்று கழன்று விழுந்து விட்டது. மனசுக்குள் இன்னமும் அர்ச்சுனரு வில்லு பாட்டு மெட்டு மறந்து போய் சிக்கின cd கணக்காய் ஓடிக் கொண்டிருந்தது.

கொஞ்ச தூரம் போயிருப்போம் ஒரு பள்ளம் நிறைய வெள்ளம், இறங்கிதான் அதை கடக்கணும். இன்னொரு கல்லில் உதவியால் முன் டயரும் நிலத்தை தொட, வண்டியை வேகப்படுத்தினான் அவன். பள்ளத்தில் இறங்கியதுதான் தாமதம், கத்திய படியே உயிரை விட்டது அது. நேரம் பார்த்து ஸ்ப்ளென்டொர் எங்க இடத்தை அடைந்தது. நாங்கள் அவர்களை கவனிக்காத மாதிரி வண்டிக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டோம். பயனில்லை. வந்த இருவரில் ஒருவன் வந்து என் சேர்ட் கொலரை பிடித்தான், "அடிபட்டா என்ன ஏதுன்னு இறங்கி கேக்கமாட்டியா? அங்க அவன் சாக கிடக்கிறான். அவன் சைக்கிள் வேற உடஞ்சி போச்சு, ஒழுங்கு மரியாதியா காசு 2000 எடு" என்றான். எங்களுக்கு விளங்கியது, இவர்கள் எதுக்காக வந்திருக்கிறார்கள் என்று.

"அண்ணா, இப்ப கைல ஒண்டும் இல்ல. அட்ரசை நோட் பண்ணிகங்க, வீட்டுக்கு வாங்க தாரம்" எண்டான் அவன். அவர்களும் ஒத்துக்கொள்ள நாங்கள் இருந்த இடத்தில் ஒருந்து அவ்வூரில் சரி நேர எதிர் திசையில் இருந்த இரு வீட்டு விலாசங்கள் குடுக்கப்பட்டன. சற்று நேரத்துக்கான உரையாடல்களின் பின் அவர்கள் செல்ல நாங்கள் வண்டியை உருட்டிய படி வீடு வந்து சேர்ந்தோம்.

கையில் சில சிராய்ப்புகள் இருந்தன. ரேடியோவை ஆன் செய்தேன், அர்ச்சுனரு வில்லு பாட்டு ஓடிக் கொண்டிருந்தது...



Wednesday 12 August 2009

வலைப்பூவும் எனது கஷ்ட காலமும்...

கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு அப்புறம் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கிறேன்... படிப்பின் சுமைகளின் கனத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்னால்... ஒரு விதமாக முதல் செமஸ்டர் வெற்றிகரமாக சித்தி எய்ததை கொண்டாட இந்தப் பக்கம் வருகின்றேன். முடிவுகள் இன்னிக்கு வெளியாகின.
புதிய பதிவு புதியா மாற்றத்தை எய்தும் நோக்குடன்....
இதுவரை காலமும் தொழினுட்பம் மிக முக்கிய நோக்காய் இருந்தது என் பதிவில். இனி வரும் காலம், பல் துறையிலும் எனது பார்வையும் அலசலுமாய் இருக்கும்.
சொந்த அனுபவங்களை ஒரு நையாண்டியுடன் பரிமாற எண்ணுகிறேன். அப்போதாவது "அலப்பறை" பேருக்கேற்ற மாதிரி அலப்பறை பண்ணுதான்னு பார்ப்போம் :)



Wednesday 10 June 2009

facebook இல் usernames



இதுவரை காலமும் ஒரு பயனாளரின் நிஜ பெயரை மட்டுமே பயன்படுத்தி வந்த facebook தற்போது பிரத்தியேக பயனாளர் பெயரை அறிமுகம் செய்கிறது (user names)... இதன் மூலம் ஒரு நபரை தெளிவாக இனம் கண்டு கொள்ள முடியும் என்பது அவர்களின் கருத்து... இதனால் அவர்கள் ஒரு நபருக்கென தனியான URL ஐயும் அறிமுகம் செய்கின்றனர்... இதன்மூலம் ஒரு பயனாளரின் URL கீழ்வருமாறு வரும்... http://www.facebook.com/பயனாளர்-பெயர்





மேலும் பிரபலமான தேடுபொறிகளின் மூலமும் இலகுவாக தேடி ஒரு நபரை இனங்காண முடியும்...


இச்சேவை எதிர்வரும் june 13 இல் இருந்து ஆரம்பிக்கிறது... தங்களது பயனாளர் பெயரை பதிவு செய்ய இப்போதே முந்துங்கள்... :) மேலதிக விபரங்களுக்கு http://www.faceboook.com/username



Wednesday 27 May 2009

Windows Vistaஇன் புதிய சர்வீஸ் பெகேஜ்


Microsoft நிறுவனம் இன்று windows vista வின் சர்வீஸ் பெகேஜ் 2 இனை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே vista வை நிறுவியுள்ளவர்கள் அதன் update ஐ கீழே க்ளிக்குவதன் மூலம் டவுன்லோட் செய்துகொள்ளலாம். இங்கே க்ளிக்கவும்...





Tuesday 26 May 2009

facebook இன் புதிய முதலீட்டாளர்கள்..

இன்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது புதிய முதலீட்டாளர்கள் பற்றிய செய்தியை facebook அறிவித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு february மாதம் உருவாக்கப்பட்ட நிறுவனம் ஒரு தனியார் கம்பெனி ஆகும். கிட்டத்தட்ட 200 மில்லியன் இற்கும் மேற்பட்ட பாவனையாளர்களைக் கொண்டதும் அதில் 70% இற்கும் அதிகமானோரை US இற்கு வெளியே கொண்டதுமான மிகப் பெரிய ஒரு social networking தளம் இந்த facebook. இதனுடைய புதிய முதலீட்டாளர்களான Digital Sky Technologies நிறுவனம் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இன் நிறுவனம் ரஷ்ஷிய ஐரோப்பிய உப கண்டங்களில் பாரிய அளவிலான முதலீடுகளை மேற்கொள்ளும் மிகப்பெரிய ஒரு முதலீட்டு நிறுவனம். எது எவ்வாறு இருப்பினும் "தாங்கள் வழங்கும் சேவைகளிலோ அல்லது தமது இயல்பு நடவடிக்கைகளிலோ மாற்றங்கள் ஏதும் இராது" என facebook இன் நிறுவனர் Mark தெரிவித்தார்.



Saturday 16 May 2009

உலகிலேயே அதிக வயதான TWITTER பாவனையாளர்...


Ivy Bean பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க... உலகத்திலேயே ரொம்ப வயசான Fecebook பாவனையாளர் அவங்க. கிட்டத்தட்ட 5000 நண்பர்களுடன் ரொம்ப ஜாலியா வலம் வந்த அவங்க தற்போது இன்னொரு பெருமைக்கும் ஆளாகி இருக்காங்க. அதாவது ரொம்ப வயசான twitter பாவனையாளர் என்பதே அது. Twitter ஒரு நுண் வலைப்பூ இனத்தை (Micro Blog) சேர்ந்தது. மிகச் சிறிய தகவல்களை இலகுவாக பரிமாற்ற முடியும். பரக் ஒபாமா கூட தமது பிரச்சாரத்தை இதன் மூலமாகவும் மேற்கொண்டார்.

Ivy பெஅன் ஐ twitter இல் பின்தொடர கீழே க்ளிக்கவும்...

@IvyBean104

.



ஆன்லைன் C++ காம்பைலர்...

இது கொஞ்சம் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமானது... ஏனையவர்களுக்கு இது தேவைப்படாது... பொதுவாக C அல்லது C++ மொழியில் ப்ரோக்ராம் எழுதுபவர்களுக்கு இது மிகவும் பிரயோஜனப்படும். அம் மொழிகளில் எழுதப்பட்ட ப்ரோக்ராம்களை விண்டோஸ் அல்லது லினக்ஸ் இயங்கு தளங்களில் இயங்கக்கூடிய ஒரு executable file ஆக மாற்றுவதே காம்பைலர்ஸ் இன் வேலை. இவை பொதுவாக ப்ரோக்ராம் வடிவமைப்பான்களுடன் சேர்ந்தே வரும். ஆனால் இவ்வாறான ப்ரோக்ராம் வடிவமைப்பாங்களை தன்னகத்தே கொண்டிடிருக்காதவர்கள், இத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் வெறும் நோட்பாட் இல் எழுதிய கோடிங்கை இதில் கொடுப்பதன் மூலம் இலகுவாக காம்பைல் செய்து பெற முடியும்...


இங்கே க்ளிக்கவும்

.



Zoozoo மனிதர்கள்...

அன்பர்களுக்கு மீண்டும் வணக்கம்...
அண்மைக்காலமாக பிரபல்யம் அடைந்து வரும் zoozoo மனிதர்களின் vodafone விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள். இது என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது... அதனால் அவற்றின் ஒரு சிலவற்றின் தொகுப்பு...



Monday 11 May 2009

தற்போது FaceBook தமிழ் இல்...





Facebook ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. தற்பொழுது இத்தளம் இனிய தமிழ் இலும் தனது சேவையை வழங்க ஆரம்பித்துள்ளது. இதை இத்தளத்தின் நிறுவனர் Mark Zuckerberg சில நாட்களுக்கு முன் அறிவித்தார். உங்கள் தற்போதைய தளத்தையே தமிழ் இல் மாற்ற முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உமது FB account இன் settings இற்கு சென்று அதில் வரும் language என்ற பட்டன் ஐ க்ளிக்கவும். அதில் வரும் drop down மெனு இல் தமிழ் ஐ தெரிவு செய்து சிறிது நேரம் வெயிட் பண்ணவும். தமிழ் "முகப்புத்தகம்" தயார்.

முகப்பு, சுய விபரம், நண்பர்கள், உங்கள் மனதில் என்ன இருக்கிறது என கொஞ்சு தமிழ் இல் நனைகிறது facebook



எச்சரிக்கை



நண்பர்களே,
நம்மாளு ஒருத்தரு மாட்டிக்கின்ன விதத்த இங்க பாருங்க..
அதாலதான் சொல்றேன் பசங்களா, இந்த social networking sites ல கிடக்குறேன் பேர்வழின்னு சும்மா கண்ட கண்ட status மெசேஜ் எல்லாம் போட்டு நீங்களே உங்க தலைல மண் அள்ளி போட்டுக்காதீங்க ஆமா...



"பொய்" - இன்டர்நெட் இல் ரசித்த கதை

அன்பர்களுக்கு மறுபடியும் வணக்கம்...
சமீப காலங்களில் இன்டர்நெட் வெளிகளில் சுற்றித் திரிவதே என் வேலையாய் போய் விட்டது... அப்போது சிக்கியது இது... வயிறு வலிக்க சிரித்தேன். தங்களுக்கும் அப்படியே நடக்க இறைவனை வேண்டுகின்றேன்.

ஒரு நாள் கெல்வின் இன் அப்பா வீட்டுக்கு ஒரு ரோபோட் வாங்கி வந்தார். அந்த ரோபோட் கொஞ்சம் விசேஷமானது. யாராவது போய் சொன்னா அதை கண்டுபிடித்து அவர்களின் கன்னத்தில் அறைந்து விடும்.

அன்னிக்கு கெல்வின் ஸ்கூல்ல இருந்து கொஞ்சம் லேட்டா வந்தான். அப்பா கேட்டாரு "ஏன் லேட் கெல்வின்?".
அதுக்கு அவன் சொன்னான் "இன்னிக்கு எங்களுக்கு எக்ஸ்ட்ரா க்ளாஸ் இருந்திச்சுப்பா"
உடனே அங்கிருந்த ரோபோட் விட்டிச்சு அவன் மூஞ்சில ஒரு அறை.

அதுக்கப்புறம் அப்பா சொன்னாரு "இத பாரு கெல்வின், இந்த ரோபோட் கொஞ்சம் புத்திசாலி. ஒருத்தங்க பொய் சொன்னா அத கண்டுபிடிச்சு அவங்களுக்கு ஒரு அறை அறைஞ்சுடும். அதனால இனி பொய் சொல்லாம என்கிட்ட உண்மைய சொல்லு. மரியாதையா எங்க போனேன்னு சொல்லிடு"

அதுக்கு கெல்வின் சொன்னான் "மன்னிச்சிடுங்கப்பா, நான் சினிமாக்கு போனேன்"

"என்ன சினிமா?"

"திருவிளையாடல்"

மறுபடியும் விட்டிச்சு ஒரு அறை கெல்வின் மூஞ்சில, அந்த ரோபோட்.

"மன்னிச்சுகோங்கப்பா, *பலான படம்* க்குத்தான் போனேன்."

அப்பா சொன்னாரு, "உன்ன நினச்சா எனக்கு வெட்கமா இருக்கு மகனே, நான் எல்லாம் உன் வயசா இருக்கும் போது இப்பிடி *பலான படத்துக்கு* எல்லாம் போனதும் இல்ல, பொய் சொன்னதும் இல்ல."

சொன்னதுதான் தாமதம் அப்பா கன்னத்துலேயும் விழுந்திச்சு செமத்தியான ஒரு அறை.


சத்தம் கேட்டு கிச்சன்ல இருந்து ஓடி வந்தாள் அம்மா.
இவங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு சொன்னாள் "என்ன இருந்தாலும் அவன் உங்க பிள்ளைதானே, உங்க புத்திதானே அவனுக்கும்......"
சொல்லி முடிக்கல அவளுக்கும் விழுந்திச்சு ஒரு **பளீர்* .... ஹிஹி...



Saturday 11 April 2009

எனது புதிய ப்ரோக்ராம்...

அன்பர்களுக்கு வணக்கம்...
நீண்ட நாட்களுக்கு பின்னேரான ஒரு இனிமையான சந்திப்பு...
சமீப காலங்களில் படிப்பின் சுமை அதிகரித்து விட்டது...
அதனால் எனது வலைப்ப பூவினை முன்பு போல் தொடர முடியவில்லை...
இருப்பினும் இனி தொடர முடிவு பண்ணியுள்ளேன்...
முதற் கட்டமாக என்னால் எழுதப்பட்ட ஒரு சிறிய ப்ரோக்ராம்..

இது இலங்கையினருக்கு மட்டுமே பொருந்தும்...
நமக்கு பல நாடுகளிலும் ரசிகப் பெருமக்கள் இருப்பதால் இந்த முன் அறிவித்தல்...
ஆகவே பிற நாட்டவர் இதை டவுன்லோட் செய்ய தேவை இல்லை...

இது உமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்தால் உமது பால் மற்றும் பிறந்த திகதியை சொல்ல கூடியது...
ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்களேன்...

http://rapidshare.com/files/220111834/NIC_-_Murshid_Ahmed.exe

.