Monday 15 November 2010

பேஸ்புக்கும் காதல்களும் - 3

ஓகே, எழுதி ரொம்ப நாளாச்சுல... ஸோ, இப்போ கொஞ்சம் வேற ட்ராக்ல போக போகுது...

ஒருவரது எழுத்துத் திறனை பார்த்து லவ் பண்ற கருமம்தான் இந்த சோஷியல் நெட்வொர்கிங் எனும் தளங்களும், தகவல் தொழிநுட்ப புரட்சியின் கிழங்களான ஈமெயில் மற்றும் சாட்டிங் இவ்வுலகுக்குத் தந்த தலைவலிகள். இதுல என்ன ப்ராப்ளம்னா, லவ்னா என்னான்னு புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்கள். நிறைய பேருக்கு முதல் காதல் தோல்வியில் முடிவடைவதுக்கு இதுதான் மெயின் மேட்டரே. ஒரு பொண்ணு சூப்பரா பேசுறா அல்லது ஒரு பையன் செம ஸ்டைலா பைக் ஓட்டறான் என்கிறதுக்காக காலம் பூரா கூடவே வச்சிக்கனும்னு ஆசைப்படலாமா? நீங்க என்ன அவவ உங்க முன்னால உக்கார வச்சி நியூஸ் வாசிக்க சொல்லப் போறிங்களா அல்லது அவர் கூட பின்னாடி உக்கார்ந்து லைப் பூரா பைக் சவாரி போக போறிங்களா? வாழனும் பாஸ். அதுக்கு நிறைய விஷயம் பாக்கணும்.

சரி, இதுல இன்னொரு டைப் குரூப் இருக்கு. 'எவன் லவ் பண்ணுவான், எல்லாம் ஒரு டைம் பாஸுக்குதான் மச்சி' சொல்ற ஒரு கூட்டம். இதுங்கதான் ப்ராப்ளம். ஒண்ணுமே பண்ண முடியாது. ரொம்ப அட்ரக்டிவ் ஆனா விஷயங்கள் இவங்ககிட்ட இருக்கும். உதாரணமா பூச்சிய சாப்பிடுற தாவரங்கள் பற்றி படிச்சு இருப்பீங்க. ரொம்ப கவர்ச்சியா இருக்கும். மாட்டினா மவனே, சங்குதான். :)

காதல், ஒருத்தங்க மேல வர்றதுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். முதல் காரணம் மூலமா வாறது வெறும் கவர்ச்சி. அப்றோம் அது டெவலப் ஆகி புதுசு புதுசா காரணங்களைஉருவாக்கிக்கும். இப்டித்தான் லவ் கிரியேட் ஆவுது.
இதுல பேஸ்புக்ல ஸ்டார்ட் ஆவுற லவ் கருமம் எதனால வாருதுங்கறது புரியாத புதிர். ஒருத்தங்க போட்டோ பார்த்து லவ் பண்ண நாம இன்னும் பாட்டி காலத்திலேயா இருக்கோம்.

-டு பி கண்டிநியூட்-