Wednesday, 27 May 2009

Windows Vistaஇன் புதிய சர்வீஸ் பெகேஜ்


Microsoft நிறுவனம் இன்று windows vista வின் சர்வீஸ் பெகேஜ் 2 இனை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே vista வை நிறுவியுள்ளவர்கள் அதன் update ஐ கீழே க்ளிக்குவதன் மூலம் டவுன்லோட் செய்துகொள்ளலாம். இங்கே க்ளிக்கவும்...

Tuesday, 26 May 2009

facebook இன் புதிய முதலீட்டாளர்கள்..

இன்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது புதிய முதலீட்டாளர்கள் பற்றிய செய்தியை facebook அறிவித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு february மாதம் உருவாக்கப்பட்ட நிறுவனம் ஒரு தனியார் கம்பெனி ஆகும். கிட்டத்தட்ட 200 மில்லியன் இற்கும் மேற்பட்ட பாவனையாளர்களைக் கொண்டதும் அதில் 70% இற்கும் அதிகமானோரை US இற்கு வெளியே கொண்டதுமான மிகப் பெரிய ஒரு social networking தளம் இந்த facebook. இதனுடைய புதிய முதலீட்டாளர்களான Digital Sky Technologies நிறுவனம் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இன் நிறுவனம் ரஷ்ஷிய ஐரோப்பிய உப கண்டங்களில் பாரிய அளவிலான முதலீடுகளை மேற்கொள்ளும் மிகப்பெரிய ஒரு முதலீட்டு நிறுவனம். எது எவ்வாறு இருப்பினும் "தாங்கள் வழங்கும் சேவைகளிலோ அல்லது தமது இயல்பு நடவடிக்கைகளிலோ மாற்றங்கள் ஏதும் இராது" என facebook இன் நிறுவனர் Mark தெரிவித்தார்.Saturday, 16 May 2009

உலகிலேயே அதிக வயதான TWITTER பாவனையாளர்...


Ivy Bean பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க... உலகத்திலேயே ரொம்ப வயசான Fecebook பாவனையாளர் அவங்க. கிட்டத்தட்ட 5000 நண்பர்களுடன் ரொம்ப ஜாலியா வலம் வந்த அவங்க தற்போது இன்னொரு பெருமைக்கும் ஆளாகி இருக்காங்க. அதாவது ரொம்ப வயசான twitter பாவனையாளர் என்பதே அது. Twitter ஒரு நுண் வலைப்பூ இனத்தை (Micro Blog) சேர்ந்தது. மிகச் சிறிய தகவல்களை இலகுவாக பரிமாற்ற முடியும். பரக் ஒபாமா கூட தமது பிரச்சாரத்தை இதன் மூலமாகவும் மேற்கொண்டார்.

Ivy பெஅன் ஐ twitter இல் பின்தொடர கீழே க்ளிக்கவும்...

@IvyBean104

.ஆன்லைன் C++ காம்பைலர்...

இது கொஞ்சம் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமானது... ஏனையவர்களுக்கு இது தேவைப்படாது... பொதுவாக C அல்லது C++ மொழியில் ப்ரோக்ராம் எழுதுபவர்களுக்கு இது மிகவும் பிரயோஜனப்படும். அம் மொழிகளில் எழுதப்பட்ட ப்ரோக்ராம்களை விண்டோஸ் அல்லது லினக்ஸ் இயங்கு தளங்களில் இயங்கக்கூடிய ஒரு executable file ஆக மாற்றுவதே காம்பைலர்ஸ் இன் வேலை. இவை பொதுவாக ப்ரோக்ராம் வடிவமைப்பான்களுடன் சேர்ந்தே வரும். ஆனால் இவ்வாறான ப்ரோக்ராம் வடிவமைப்பாங்களை தன்னகத்தே கொண்டிடிருக்காதவர்கள், இத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் வெறும் நோட்பாட் இல் எழுதிய கோடிங்கை இதில் கொடுப்பதன் மூலம் இலகுவாக காம்பைல் செய்து பெற முடியும்...


இங்கே க்ளிக்கவும்

.Zoozoo மனிதர்கள்...

அன்பர்களுக்கு மீண்டும் வணக்கம்...
அண்மைக்காலமாக பிரபல்யம் அடைந்து வரும் zoozoo மனிதர்களின் vodafone விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள். இது என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது... அதனால் அவற்றின் ஒரு சிலவற்றின் தொகுப்பு...Monday, 11 May 2009

தற்போது FaceBook தமிழ் இல்...

Facebook ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. தற்பொழுது இத்தளம் இனிய தமிழ் இலும் தனது சேவையை வழங்க ஆரம்பித்துள்ளது. இதை இத்தளத்தின் நிறுவனர் Mark Zuckerberg சில நாட்களுக்கு முன் அறிவித்தார். உங்கள் தற்போதைய தளத்தையே தமிழ் இல் மாற்ற முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உமது FB account இன் settings இற்கு சென்று அதில் வரும் language என்ற பட்டன் ஐ க்ளிக்கவும். அதில் வரும் drop down மெனு இல் தமிழ் ஐ தெரிவு செய்து சிறிது நேரம் வெயிட் பண்ணவும். தமிழ் "முகப்புத்தகம்" தயார்.

முகப்பு, சுய விபரம், நண்பர்கள், உங்கள் மனதில் என்ன இருக்கிறது என கொஞ்சு தமிழ் இல் நனைகிறது facebookஎச்சரிக்கைநண்பர்களே,
நம்மாளு ஒருத்தரு மாட்டிக்கின்ன விதத்த இங்க பாருங்க..
அதாலதான் சொல்றேன் பசங்களா, இந்த social networking sites ல கிடக்குறேன் பேர்வழின்னு சும்மா கண்ட கண்ட status மெசேஜ் எல்லாம் போட்டு நீங்களே உங்க தலைல மண் அள்ளி போட்டுக்காதீங்க ஆமா..."பொய்" - இன்டர்நெட் இல் ரசித்த கதை

அன்பர்களுக்கு மறுபடியும் வணக்கம்...
சமீப காலங்களில் இன்டர்நெட் வெளிகளில் சுற்றித் திரிவதே என் வேலையாய் போய் விட்டது... அப்போது சிக்கியது இது... வயிறு வலிக்க சிரித்தேன். தங்களுக்கும் அப்படியே நடக்க இறைவனை வேண்டுகின்றேன்.

ஒரு நாள் கெல்வின் இன் அப்பா வீட்டுக்கு ஒரு ரோபோட் வாங்கி வந்தார். அந்த ரோபோட் கொஞ்சம் விசேஷமானது. யாராவது போய் சொன்னா அதை கண்டுபிடித்து அவர்களின் கன்னத்தில் அறைந்து விடும்.

அன்னிக்கு கெல்வின் ஸ்கூல்ல இருந்து கொஞ்சம் லேட்டா வந்தான். அப்பா கேட்டாரு "ஏன் லேட் கெல்வின்?".
அதுக்கு அவன் சொன்னான் "இன்னிக்கு எங்களுக்கு எக்ஸ்ட்ரா க்ளாஸ் இருந்திச்சுப்பா"
உடனே அங்கிருந்த ரோபோட் விட்டிச்சு அவன் மூஞ்சில ஒரு அறை.

அதுக்கப்புறம் அப்பா சொன்னாரு "இத பாரு கெல்வின், இந்த ரோபோட் கொஞ்சம் புத்திசாலி. ஒருத்தங்க பொய் சொன்னா அத கண்டுபிடிச்சு அவங்களுக்கு ஒரு அறை அறைஞ்சுடும். அதனால இனி பொய் சொல்லாம என்கிட்ட உண்மைய சொல்லு. மரியாதையா எங்க போனேன்னு சொல்லிடு"

அதுக்கு கெல்வின் சொன்னான் "மன்னிச்சிடுங்கப்பா, நான் சினிமாக்கு போனேன்"

"என்ன சினிமா?"

"திருவிளையாடல்"

மறுபடியும் விட்டிச்சு ஒரு அறை கெல்வின் மூஞ்சில, அந்த ரோபோட்.

"மன்னிச்சுகோங்கப்பா, *பலான படம்* க்குத்தான் போனேன்."

அப்பா சொன்னாரு, "உன்ன நினச்சா எனக்கு வெட்கமா இருக்கு மகனே, நான் எல்லாம் உன் வயசா இருக்கும் போது இப்பிடி *பலான படத்துக்கு* எல்லாம் போனதும் இல்ல, பொய் சொன்னதும் இல்ல."

சொன்னதுதான் தாமதம் அப்பா கன்னத்துலேயும் விழுந்திச்சு செமத்தியான ஒரு அறை.


சத்தம் கேட்டு கிச்சன்ல இருந்து ஓடி வந்தாள் அம்மா.
இவங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு சொன்னாள் "என்ன இருந்தாலும் அவன் உங்க பிள்ளைதானே, உங்க புத்திதானே அவனுக்கும்......"
சொல்லி முடிக்கல அவளுக்கும் விழுந்திச்சு ஒரு **பளீர்* .... ஹிஹி...