Thursday, 19 January 2012

சோப்பா / பைப்பா - ஒரு சாதாரணக் குடிமகன் ரூபத்தில் சிறு அலசல்


சமீப காலமாக இணையத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள் இந்த சோப்பா'வும் பைப்பா'வும். சோப்பா'வை தமிழில் "இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம்" என மொழி பெயர்க்கின்றனர். இது அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் பேசப்பட்ட போது பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் அனைவரும் இதை ஒரு "காப்பிரைட்" போன்ற ஒரு சட்டமாகவே பார்த்தார்கள். கொஞ்ச நாட்களின் பின்னரான அலசலின் விளைவாகவே இது எல்லாவற்றையும் விட காரசாரமான ஒரு சட்டம் என்பது தெரிய வந்தது. விஷயம் காட்டுத்தீ போல பரவி இப்போது உலகெங்கும் அதை எதிர்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் கூட, "அதெல்லாம் அமெரிக்காக்காரனுங்க அவங்க நாட்டுக்குள்ள ஏதோ சட்டம் உருவாக்கிட்டுப் போறானுங்க... நீ போய் வேலையைப் பார்ப்பியா... அத விட்டுட்டு..." என்று ஒரு துண்டு பீடியை வாயில் போட்டபடியே சொன்னார் அன்சார் நானா.

வெளிப்படையாக பார்த்தால் மேட்டர் "தம்மாத்துண்டு" வாக்கில்தான் தெரிகிறது. அன்சார் நானா சொல்வதைப் போல் நம் வேலையைப் பார்த்துவிட்டு போய்க்கொண்டிருக்கலாம். ஏனெனில் சட்டம் கொண்டுவரப்பட இருப்பது அமெரிக்காவில். இந்த சட்டத்தின் பின்னணியில் இருப்பது எல்லாம் பெரிய பெரிய மல்டி நேஷனல் கம்பனிகள். அவற்றின் பிரதான வியாபாரத்தளம் அமெரிக்காவாக இருக்கிறது. அவற்றை எதிர்க்கும் கூட்டத்தில் பெரும்பான்மையாக இருப்பதும் அமெரிக்க கம்பனிகளே. இப்படி இருக்க இதை கண்டு ஏன் எல்லோரும் "ஸொம்பீ" ஒன்றை பார்த்தது போல் அலறி அடித்து ஓடிப்போய் கையில் ஒரு பெரிய ஷாட்கண்னை எடுத்துக்கொள்ள வேண்டும். விளக்கம் இருக்கிறது.

"காப்பிரைய்ட்" பற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள். நீங்கள் ஒரு எழுத்தாளராக இருக்கலாம். அல்லது புதிதாக எதையாவது கண்டு பிடித்து இருக்கலாம். அப்போது உங்கள் ஆக்கத்தை அல்லது படைப்பை நீங்கள் உங்கள் பெயரில் காப்பிரைட் செய்து வைத்துக்கொள்ளலாம். 

எதற்காக செய்ய வேண்டும்?
அண்மையில் எனக்கு ஒரு சம்பவம் நடந்தது. நான் ஒரு விடயத்தைப் பற்றி எனது 'ப்ளாக்'இல் ஒரு சிறிய விமர்சனத்தை எழுதி இருந்தேன். அப்போதைய திகதிக்கு, உலகிலேயே முதன் முதலாய் அந்த விடயம் பற்றி ஒரு கருத்தை வெளியிட்டிருந்தது நான்தான். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என்ற பிரச்சனையை பின்னால் வைத்துக்கொள்ளலாம். நான்தான் அதை முதலில் வெளியிட்டேன் என்பதை ஆதார பூர்வமாக என்னால் நிரூபிக்கக் கூட முடியும். அது அவ்வாறு இருக்க, மறு நாள் எனது விமர்சனத்தை வரி கூட மாற்றாமல் காப்பி செய்து, ஏதோ அவர்கள்தான் அதை முதலவாதாக வெளியிடுவதாய் "உலகத்திலேயே முதன் முதலாக..." என்ற வர்ணனை வேறு சேர்த்து போட்டுவிட்டார்கள். இபோதுதான் "காப்பிரைட்" தனது விளையாட்டைக் காட்டுகிறது. பொதுவாக ஒரு படைப்பை "காப்பிரைட்" இற்கு என இருக்கும் அரச அலுவலகத்தில் போய் நாம் உரிமை செய்துகொள்ள முடியும். இதுவே நான் இணையத்தில் மட்டுமே எழுதித் தொலைவதால் "க்ரியேட்டிவ் கொமன்ஸ்" எனும் இணைய உரிமையை உபயோகித்து வந்தேன். இதில் எனது ப்ளாக்'ஐ ரெஜிஸ்ட்டர் செய்து உரிமை பெற்றிட்டேன். அதனால் இதில் எழுதப்படும் அனைத்து படைப்புகளுக்கும் நான் தனித்தனியே உரிமம் பெற வேண்டிய அவசியமில்லை. அதில் வழங்கப்படும் உரிமத்தின் ஒரு வகை, என் அனுமதியுடன் மாத்திரம் எனது படைப்புகளை மாற்றம் ஏதும் செய்யாமல் அப்படியே பிரசுரிக்க முடியும். இதுவே என் 'ப்ளாக்' இற்கு எடுக்கப்பட்டிருந்தது. எனவே எனது படைப்புகள் அனைத்திற்கும் இந்த பதிப்புரிமை வந்துவிடும். இப்போது இந்த பதிப்புரிமையை பயன்படுத்தி என்னால் எனது ஆக்கத்தை காப்பி செய்த அனைவரையும் கோர்ட்டிற்கு இழுக்க முடியும். 
இதுவே காப்பிரைட் இல்லாத பட்சத்தில் எம்மால் சட்ட ரீதியாக ஒன்றும் செய்ய முடியாமல் போகும். அதே சமயம் எம்மிடம் இருந்து காப்பி செய்த இன்னொரு நபர் எமக்கு முன்னால் அதை காப்பிரைட் செய்து கொண்டால் விஷயம் இன்னும் மோசமாக போய்விடும். சட்ட ரீதியாக அது அவரது ஆக்கமாக போய் விடும். அப்புறம் காப்பி செய்தவரிடம் போய் நாம் நீதி, தர்மம் எல்லாம் பேசி கன்வின்ஸ் பண்ணித்தான் ஏதாவது பண்ண வேண்டி இருக்கும்.  

ஒரு படைப்பாளியின் பாயின்ட் ஒப் வியூ இல் தனது படைப்பை தன் அனுமதி பெறாது வேறு ஒருவர் தனது அவரது படைப்பாகவோ அல்லது ஒரிஜினல் ஆக்கம் இன்னாருடையதுதான் என்று குறிப்பிடாது சும்மா வெளியிடுவது ரொம்ப வேதனை தரக் கூடிய ஒரு விஷயம். சினிமா கதைகள் பற்றிய பிரச்சனைகள் கோர்ட்டுக்கு போவதை அடிக்கடி வாசித்திருப்பீர்கள். இவ்வாறு தன் ஒரிஜினல் ஆக்கம் சிம்பிளாக காப்பி செய்யப்படுவதை தடுக்கத்தான் சோப்பா / பைப்பா வந்து தொலைத்தது.

சோப்பா / பைப்பா என்ன செய்ய முடியும்?
இதில் ஆழமான உட்கட்டமைப்புகள் இருக்கின்றன. அது அந்த நாட்டு லோயர்களுக்கே தெளிவாக இன்னும் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறதால் ஒரு சிம்பிள் பாயின்ட் ஒப் வியூ இல் பார்க்கலாம். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு வீடியோ ஒன்றை உருவாக்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் கொஞ்சம் நல்லா இருக்கட்டுமேன்னு பின்னணியில் ஒரு பாடல் ஒன்றை ஓட விடுகிறீர்கள். இதை இன்டர்நெட்டில் யூடியூப்பிலோ அல்லது பேஸ்புக்கிலோ பகிர்கிரீர்கள். இப்போது ஆரம்பிக்கிறது சோப்பா'வின் ஆப்பு. அதை நீங்கள் அவர்களிடம் காசு கொடுத்து வாங்கியதற்கான ஆதாரம் இல்லாத பட்சத்தில் உங்கள் வீடியோ தூக்கப்படும். அதை ஷெயார் பண்ண அனுமதி அளித்ததற்காக யூடியூப் மற்றும் பேஸ்புக் இற்கும் சில நேரங்களில் வரும் ஆப்பு. அவை முற்றாக தடை செய்யப்படும் அளவிற்கு கூட போகலாம். கூகிள் தனது சேர்ச் ரிசல்ட்ஸ்'இல் உங்கள் வீடியோவை காட்டினால் கூகிள் சந்திக்கு இழுக்கப்படும். 

இதெல்லாம், ஒரு படைப்பாளியின் சுயத்தை காக்கிறோம் என்ற போர்வையில் செய்ய இருக்கிறது இந்த சோப்பா. இந்த சட்டம் வந்தால் ஒரு படைப்பாளியின் படைப்பை அவரது அனுமதியில்லாமல் போட்டால் அதற்கு வழக்கோ வாயிதாவோ கிடையாது. டைரக்ட்'ஆக ஆப்புதான். உங்கள் தளம் முடக்கப்படும். அதுவே நீங்கள் ஒரு "ப்ளாக்" வைத்திருந்து அது வேர்ட்பிரஸ்ஸில் அல்லது பிளாக்கர்'இல் ஹோஸ்ட் செய்யப்பட்டிருந்தால் உங்கள் தளத்தை அனுமதித்ததற்காக அவற்றிற்கும் விழும் செம அடி. 
டி.என்.எஸ் தடை என்ற ஒரு புது பிரச்சனை. ஒரு கட்டத்தில் இலங்கை அரசு தனக்கு எதிரான தளங்களை நாட்டிற்குள் பார்க்கவிடாமல் செய்தது உங்களுக்கு தெரியும். இது போன்ற ஒரு தடை குறிப்பிட்ட தளத்தின் மேல் விழும். இதுவே வேர்ட்பிரஸ் இல் இருக்கும் ஒரு தளத்திற்கு விழும் போது அதில் ஏற்றப்பட்டிருக்கும் இன்னும் பிற தளங்களுக்கும் சேர்ந்து பாதிப்பை உண்டாக்கும். சனி போனால் தனியே போகாது என்பதாகி விடும் கதை.  டி.என்.எஸ் தடை எல்லாருக்கும் புரிய சாத்தியமில்லையால் அதை ஆழமாக அலசத் தேவை இல்லை.

இன்னொரு சிம்பிள் எக்ஸாம்பிள். ஒரு நடிகையின் போட்டோவை ஒருவர் அவரது ப்ராபைல் பிக்சர்'ஆக பேஸ்புக்'இல் போடுகிறார் என வைப்போம். இது ஒரு பெரிய போட்டோக்ராபி அல்லது விளம்பர நிறுவனத்தின் காப்பிரைட் செய்யப்பட்ட புகைப்படமாக இருக்கும் பட்சத்தில் அந்த நபரின் கணக்கு முடக்கப்படலாம். பேஸ்புக் இதை அனுமதித்ததுக்காக டி.என்.எஸ் தடை செய்யப்படலாம். இதெல்லாம் கண நேரத்தில் நடக்கலாம். 

ஆன்லைன் இல் படம் பார்ப்பதற்கும் பாட்டுக் கேட்பதற்கும் டவுன்லோட் செய்வதற்கும் காசு செலுத்த வேண்டி இருக்கும். ஒரு பாட்டுக்கு 2$ ஒரு படத்திற்கு மற்றும் ப்ரோக்ராம் இற்கு 50$ எனக் கட்டணம் இருக்கலாம்.  டொரன்ட் தளங்கள் முற்றாக தடை செய்யப்படும்.

இந்த சட்டம் ஏற்பட இருப்பது என்னவோ அமெரிக்காவில்தான் என்றாலும் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் இது மறைமுகமாய் மற்றும் நேரடியாய் பாதிக்கப்போவதை மேல் சொன்னவற்றில் இருந்து விளங்கிக் கொள்ள முடியும். சின்னொரு தப்புக்கு இவ்ளோ பெரிய தண்டனையா என்று கேட்கும் அளவிற்கு இது பாதிப்பை கொண்டு வரும். 

இப்போது அன்சார் நானாவின் விஷயத்திற்கு வருவோம். அவர் சொன்னது போல் இதை நாம் எதிர்ப்பதால் பிரயோஜனம் (நேரடியாக) இல்லைதான். இருப்பினும் கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பரில் அமெரிக்க சட்டவாக்க கழகத்தில் நடந்த முதலாவது வாசிப்பின் பின் அதன் தொடர்ச்சி பெப்ரவரிக்கு ஒத்திப் போடப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுதும் இதற்கு எதிர்ப்பு இருப்பதை காட்டுவதன் மூலம் இது சட்டமாதலை தடுக்கலாம் என்றே அனைவரும் இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். அமெரிக்க மக்கள் மட்டுமே இந்த சட்டத்தை நேரடியாக செயலிழக்க எதுவாக இருக்கும் பட்சத்தில் நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறோம். தங்களது பிரதிநிதியான செனட்டர் இற்கு விரிவான பெட்டிஷன்களை அந்நாட்டு மக்கள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இருந்த போதும் சோப்பா'இற்கு செனட் சபையில் பெரும்பான்மையான ஆதரவு இருக்கத்தான் செய்கிறது. ஒரு சில முக்கியமான, படங்கள் தயாரிக்கும் கம்பனிகள் இவர்களுக்கு சூட்கேஸ் அனுப்பி இருப்பதாலேயே இந்த ஆதரவு என்கிறது ஒரு வட்டாரம். 

எதிர்ப்பு நடவடிக்கை!
ஆரம்பத்தில் இந்த சட்ட அமுலாக்கத்தை மிகத் தீவிராமாக ஆதரித்தது "கோ டாடி" எனும் ஒரு டொமைன் ரெஜிஸ்ட்றார் கம்பனி. (அதாவது, உங்கள் பெயரில் ஒரு தளத்தை தொடக்க வேண்டுமானால் நீங்கள் "உங்கள் பெயர் . கொம்" என்ற இணைய முகவரியை இது போன்ற ஒரு டொமைன் ரெஜிஸ்ட்றார் இடமே வாங்க வேண்டும்.) இதனால் இதில் கணக்கு வைத்திருந்த அநேகமான மக்கள் இதிலிருந்து விலகி வேறு ஒரு இடத்தில் சேர்ந்து கொண்டார்கள். இதில் இந்தக் கம்பனிக்கு ஒரு மாதத்தில் பல மில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டது. இது பாரிய அளவில் நடந்த முதலாவது எதிர்ப்பு நடவடிக்கை. 
இன்னொரு கட்டமாக நேற்று விக்கிபீடியா அதன் ஆங்கில பக்கத்தை முடக்கியது. சற்று நேரத்தின் முன் வெளியாகி இருக்கும் கணக்கின் படி நேற்றைய நாளிலே விக்கிப்பீடியாவை பார்க்க முயற்சித்த எண்ணிக்கை ஏனைய நாட்களைக் காட்டிலும் மிக அதிகமாம். சற்று யோசித்துப் பார்க்கலாம், விக்கிபீடியாவும் கூகிள் உம் இல்லாத இணையத்தை கற்பனை செய்ய முடியுமா? 

எதிர்ப்பின் விளைவு!
சில மணித்தியாலங்களின் முன் பைப்பா சட்டத்தை உருவாக்குவதில் பங்களித்த மற்றுமொரு முக்கியமான நபர்அதிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். ஏனையோரையும் இதற்கான ஆதரவை கைவிட சொல்லி அவர் கேட்டிருப்பது கூடுதல் நலம்.

இது இவ்வாறு இருக்க, சோப்பா'வின் இறுதி முடிவு பெப்ரவரியில் நடக்க இருக்கும் அடுத்த கட்ட வாசிப்பின் பின்னர்தான் தெரிய வரும். அதுவரை இருக்கும் நேரத்தில் எம்மால் முடியுமான விதங்களில் எமது எதிர்ப்பை நாம் வெளிப்படுத்துவோம்.Friday, 13 January 2012

நல்ல நண்பன்


"நண்பன்" படத்தில் வரும் ஒரு அழகான பாடலின் அருமையான வரிகள் இவை. எனக்கு ரொம்பவே பிடித்துப் போனாதால் அதை இங்கே பகிர்கிறேன்.

நல்ல நண்பன் வேண்டும் என்று,
அந்த மரணமும் நினைக்கிறதா?
சிறந்தவன் நீதான் என்று,
உன்னை கூட்டிச் செல்ல துடிக்கின்றதா?

இறைவனே, இறைவனே, இவனுயிர் வேண்டுமா?
எங்கள் உயிர் எடுத்துக்கொள், உனக்கது போதுமா?
இவன் எங்கள் ரோஜா செடி,
அதை மரணம் தின்பதா?
இவன் சிரித்து வீசும் ஒளி,
அதை வேண்டினோம் மீண்டும் தா.

உன் நினைவின் தாழ்வாரத்தில்,
எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா?
மனம் என்னும் மேம்பாலத்தில்,
எங்கள் ஞாபகங்கள் பூக்கவில்லையா?

இறைவனே இறைவனே, உனக்கில்லை இரக்கம்தான்...
தாய் இவள் அழுகுரல், கேட்ட பின்னும் உறக்கமா...

வா நண்பா வா நண்பா, தோள்களில் சாய வா.
வாழ்ந்திடும் நாளெல்லாம், நான் உன்னை தாங்கவா?Thursday, 12 January 2012

நண்பன்

பொதுவாவே ரீமேக்கும் படங்கள் அதீத எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும். பெரும்பாலான ரீமேக்கிய படங்கள் ஒரிஜினல் படங்களின் நல்ல பெயரைக் கெடுத்த ஹிஸ்டரியே தமிழில் அதிகம். அதையும் மீறி, ஒரு ரீமேக்கிய படம் ஒரிஜினல் படத்தை விட நல்ல பெயர் வாங்குகிறது என்றால், ஒரே ஒரு காரணம்ஒரிஜினல் படம் அல்ட்ரா பிளாப் ஆக இருக்க வேண்டும். இந்த விதி எல்லாவற்றையும் மீறும் வரிசையும் ஒன்று இருக்கிறது. தரமான டைரக்டர் மற்றும் நடிகர் உடன் சிறந்த ஸ்க்ரீன் ப்ளே கலந்து செய்யும் படங்களுக்கான வரிசை. அதில் சமீபமாக வந்த அல்லது வர இருக்கின்ற படம், "நண்பன்".

நான் "விஜய்" ரசிகனோ அல்லது ஹால்மார்க் குத்திய விமர்சகனோ கிடையாது. எப்போதாவது மூடு மற்றும் நேரம் இருந்தால் தியேட்டருக்குப் போய் அடித்துப் புடித்தேனும் டிக்கட் வாங்கி வேறு வழியே இல்லாமல் முன் வரிசையில் எழுபது டிகிரி கோணத்தில் தலையை நிமிர்த்தி படம் பார்க்கும் அக்மார்க் அப்பாவி. ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னால் கொஞ்சம் விரிவாக (??! மிஞ்சி மிஞ்சிப் போனால் நான்கு பந்திக்கு மேல் போகாது என நினைக்கிறேன்) எழுதப்படும் ஒரு விமர்சனம் இது. காரணம், என்னுள் எழும்பி இருந்த ஒரு நெகடிவ் தோட்'ஐ உடைத்தெறிந்த மற்றொரு படம், இந்த நண்பன்.

படத்தின் கதையை பற்றி நான் விளக்கத் தேவையில்லை. ஏற்கனவே நாம் நூறு முறை டி.வி.டி.யில் பார்த்து விட்ட அதே "த்ரீ இடியட்ஸ்" கதைதான். ஏற்கனவே ஹிட் ஆகிவிட்ட கதையை மீண்டும் எடுப்பதால் "ஷங்கர்" சொதப்பிவிடுவாரோ என்ற பயம் ஒரு பக்கம், சிங்கிள் ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் குடுத்து அடுத்தடுத்து படங்கள் விஜய் பண்ணுவதால் அவருக்காக கதையை மாற்றி சொதப்பிவிடுவார்களோ என்ற பயம் மற்றப் பக்கம் இருக்க வந்தே விட்டது, "நண்பன்". வி.ஐ.பி. ப்ரிவியூ என்ற பெயரில் படம் ஆபீசியலாகரிலீஸ் ஆவதற்கு முன்பே ரெண்டு நாளைக்கு முதல் ஒரு ஷோ போட்டு, அதற்கு சாதாரண டிக்கட் விலையை விட ஐந்து மடங்கு விலை வைத்து பணம் பறிப்பார்கள். அதில் ஒரு ஷோ'க்கு இரவு போய்த் தொலைத்தேன். டிக்கட் ஓசி தான்.

ம்ம்ம்... படம் பற்றி சொல்வதென்றால். முதலாவது விஜய். வெளிப்படையாக சொல்லப் போனால் இதுவரை விஜய் நடித்த படங்களில் மெச்சக்கூடியது இதுதான் எனலாம். நீண்ட நாளைக்கப்புறம், பூக்கள் சொரியாமல், தார தப்பட்டைகள் இல்லாமல் ஒரு இன்ட்ரோ. படம் தொடங்கியதில் இருந்து விஜய் வரும் சீன்கள் எல்லாமே அமைதியான, தன்புகழ் பாடாத, பன்ச் டயலாக் பேசாத நடிப்பில் அருமையாக கவர்கிறார். நிச்சயமாக வழக்கமான விஜய் படங்களில் அவரது நடிப்பில் கூடுதலாக இருக்கும் ஏதோ ஒன்று இந்தப் படத்தில் இல்லை. அதுவே அவரை அழகாகக் காட்டுகிறது.
அடுத்தது ஷங்கர். ஹட்ஸ் ஆப் டு ஹிம். ஒரிஜினல் படத்தின் பிரேம் பை பிரேம் காப்பியை எடுத்திட்ட போதிலும் தனது டச்சை வைத்துப் படம் இயக்கி இருப்பது கூடுதல் தைரியம். மதன் கார்க்கியின் உதவியுடன் ஷங்கரின் ஸ்க்ரீன்ப்ளே புகுந்து விளையாடுகிறது. ஜீவா'வும் ஸ்ரீகாந்தும் நடிப்பில் பின்னுகிறார்கள். இலியானா, நோ வேர்ட்ஸ். நிஜமாவே அழகினால் கொள்ளை அடிக்கிறார். சத்யராஜ், சத்யன் என எல்லாருமே அழகாக நடித்திருக்கிறார்கள்.

குறிப்பிடத்தக்க சீன்கள் நிறையவே இருக்கின்றன. ஸ்ரீகாந்த் தன் அப்பாவிடம் மனசு விட்டுப் பேசும் அந்தக் காட்சியில் கண்ணீர் வந்துவிட்டது. அதே போல செம டச்சிங் ஜீவா ஹாஸ்பிட்டலில் இருக்கும் காட்சி. "த்ரீ இடியட்ஸ்"இல் சைலன்சர் பேசும் அந்த புகழ் பெற்ற ஸ்பீச் இதில் இன்னும் சூப்பர்ப். தியேட்டரே வயிறு குலுங்க சிரித்தது. இலியானா விஜய்க்கு லிப் கிஸ் குடுக்கும் காட்சி, விஜய் "வைரஸ்'ஐ வெளியே எடு" என சொல்ல (வைரஸ் எனப் பெயரிடப்பட்ட 'கார் பேட்டரியில் இருந்து ஏ.சி கரண்ட் தயாரிக்கும் இன்வேர்ட்டர்) 'மில்லிமீட்டர்' சத்யராஜை "கெட் அவுட் சார்" எனத் தள்ளிக்கொண்டு போகும் காட்சி என டச்சிங் சீன்ஸ் ஏராளம்.

முடிவு: படம் ஓடும். ஹார்ட்கோர் விஜய் ரசிகர்கள் இல்லாதவர்களும் ரசிப்பார்கள். நீண்ட நாளைக்கப்புறம் விஜய் இடமிருந்து ஒரு அல்டிமேட் பெர்போர்மன்ஸ்.Friday, 6 January 2012

சிதாரா

சில பெயருக்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் தெரியாமலேயே அதைக் கேட்டவுடனேயே, "அழகு" என்றுதான் இருக்க வேண்டும் என அடித்துக் கூறும் நாமங்களின் பட்டியலில் முதலிடத்தில் இந்த 'சிதாரா' இருந்து தொலைத்திருக்க வேண்டும். பேஸ்புக்கில் தொடக்கி ஸ்கைப்பில் கண்டினியூ ஆகும் நவீன காலக் காதல் காம லீலைகளில் ஒரு வர்க்கம் தேக்கி நிக்க, மற்றப் பிரிவு கடிதங்களில் இருந்து செல்போனுக்கு ட்ரான்ஸ்பர் வாங்கி இருந்தது. இந்தப் பிரிவில் வந்தவன்தான் 'அலன்'. தன் மொபைல் நம்பரில் ஒன்று இரண்டை மாற்றி வரும் நம்பருக்கு டயல் செய்யும் வித்தை தொடங்கி வீறாப்பாய் நடை போட்ட சமயம் அலன்னின் கோல்'இற்கு மறுமுனையில் ஆன்சர் செய்தவள் சிதாரா. ட்ரான்ஸ்பர் வாங்கிய பிரிவைச் சேர்ந்த மற்றொரு ஜென்மம்.

நான் அங்கிளை மீட் பண்ண சென்றிருந்தேன்.
"எக்ஸ்கியூஸ் மீ, டாக்டர் நம்பிராஜன்னை பார்க்கணும்"
"இப்போ பேஷன்ட் வியூவிங் டைம் இல்லியே. ஈவினிங் பைவ்'கு அப்றோம் வாங்க. இப்போ அவர் முக்கியமான ஒரு வேலையா இருக்கார்"
"இல்ல, அவர்தான் கோல் பண்ணி வர சொல்லி இருந்தார்."
பேரை சொன்னேன்.
"ஆ, ஐயாம் சாரி. யு கேன் கோ இன்" என்றாள் அந்த அழகுப் பதுமை. வயது ஒரு இருபத்தைந்து இருக்க வேண்டும். எனக்கு அப்போதுதான் இருபத்திரண்டு எட்டி இருந்தது. இருந்தாலும் அவளை அக்கா முறையில் வைத்துப் பார்க்க 'அன்ட்ரோஜென்ஸ்' இடம் கொடுக்கவே இல்லை. உள்ளை நுழைந்தேன். என்னை உள்ளே விட்டு மூடிக்கொண்ட கதவில், டாக்டர் நம்பிராஜன், சீப் டாக்டர் என்றும் இன்னு பிற அவரது ஸ்பெஷல் படிப்புகளுக்கு ஏதுவான எழுத்துக்களும் இருந்தது.

அலன்னின் செல் பேச்சுகள் சிதாராவுடன் தொடர்ந்த வண்ணமே இருந்தன. "ஹேய், எப்டி இருக்கே"வில் தொடங்கி, காலையில் என்ன டூத்பேஸ்ட், சாப்பாட்டிற்கு என்ன கறி என்று போய் "அப்றோம், ஏதாவது சொல்லேன்" என்பதில் வந்து முடியத்தொடங்கின. "இல்ல நீயே சொல்லு" என்று சொல்லுவாள் அவள். சொல்லுவதற்கு எதுவுமே இல்லாமல் இருந்தாலும் அவளது குரலில் வோட்கா ஊற்றுவது போல் புலம்பித் தீர்ப்பான் அவன். கிரிக்கட் விளையாடிக் கொண்டிருக்கும் போது ரிங்-கட்ஸ் வந்தால் பாதி ஆட்டத்திலேயே நழுவி விடுவதாலும், நைட் அவுட் என்று போய் கூட்டத்தோடு சேராமல் பால்கனியில் போய் இருந்து கொண்டு செல்லை காதில வைத்து வானத்தைப் பார்த்து சிரித்து சிரித்து பேசுவதாலும், கோல் எடுக்கும் போது எல்லாம் 'வெயிட்டிங்' விழுவதாலும் மட்டும் ப்ரெண்ட்ஸ்'கு அலன்னின் மீது சந்தேகம் அதிகரித்து விடவில்லை. புதுசு புதுசாக சிம் வாங்கி எந்த பேக்கேஜ் சீப்பானது என்று ரிசேர்ச் செய்கிறேன் என்று அவர்களிடத்தில் அவன் சொன்ன போதும் சேர்த்துத்தான் வந்தது.

"வா முறு, ஹவ் ஆர் யூ? ஐ தின்க் திஸ்இஸ் த பர்ஸ்ட் டைம் யூ ஆர் கமிங் ஹியர் ரைட்?" என்றார் நம்பிராஜன். டாக்டர். என் பேமிலி பிரண்ட். அப்பாவின் நெருங்கிய நண்பர். "யாஹ் அங்கிள். நோர்மல்லி ஐ யூஸ்ட் டு கம் டு யுவ கிளினிக் ஒன்லி நா. ஐ'யாம் நியூ ஹியர், அஸ் யூ செட்" என்று சொல்லி வைத்தேன். நான் அவரை சந்திக்க வந்திருந்தது "ஜெனரல் ஹாஸ்பிட்டல்"க்கு. "சோ, யூ குட் ஹேவ் கெஸ்ட் தட் தேயார் இஸ் சம்திங் இம்போர்டன்ட் எஹ்" என்றார். ஆமாம் என்கிற மாதிரி தலையாட்டினேன். "அக்சுவல்லி இட் இஸ் ரைட். அன் இம்போர்டன்ட் மேட்டர்." என்றபடியே ரோலிங் ச்செயார்'இல் இருந்து எழுந்து கொண்டார்.

சிதாரா அவளது போட்டோ அனுப்பி இருந்தால். நண்பர்கள் எல்லாரும் வாய் திறந்தார்கள். நிஜமாவே கொள்ளை அழகு அவள். ப்ரெண்ட்ஸ்'இல் ஒருத்தன் ஆரம்பித்தான், "மச்சான் நான் இவளை எங்கோ பாத்திருக்கேன்டா". அலன் சொன்னான், "ச்சான்சே இல்ல. இவள் நம்ம ஊரே இல்ல".
"மச்சான் இன்னொரு தரம் காட்டுடா."
"செம்மயா இருக்காடா"
"எப்டிடா புடிச்சே?"
புகழாரங்கள் அவனைத் தூக்கி செங்குத்தாய் கீழே இறங்கும் ஒரு மலையின் விளிம்பில் கொண்டு போய் நிப்பாட்டி விட்டன. சத்தம் போட்டு கத்துவதை மனசுக்குள் நினைத்துக் கொண்டான். தான் 'சிதாராவை' பிடித்த கதையை சொன்னான். எல்லா ப்ரெண்ட்ஸ்'உம் செல்லை எடுத்து புதுப் புது நம்பர் டயல் செய்யத் தொடங்கினார்கள். "ஹலோ" என்று சொன்னவை பெரும்பாலும் ஆண்களாகவே இருந்தார்கள். மீதி சுவிட்ச்ட் ஆப்'இல் இருந்தது.

"அப்டி என்ன அவசரம் அங்கிள்?"
"என்னோட கொஞ்சம் வாறியா? ஐ நீட் டு ஷோ யூ சம்திங்" என்றபடி வெளியே போனார். மனசில் பல விஷயங்கள் ஓடத்தொடங்கின. அப்படி எதைக் காட்டப் போகிறார் என்பதை முன்னாடியே ப்ரடிக்ட் பண்ண ட்ரை பண்ணினேன். கொரிடோரில் அவர் பின்னால் நடந்து போனேன். "அப்றோம் சும்மா ஏதாவது சொல்லேன்" என்றார் என்னைப் பார்த்து. எங்கேயோ எனக்கு 'கிளிக்' என்ற சத்தம் கேட்டது. "வாட்? அங்கிள்?"என்றேன். "சும்மா நடக்காமல் ஏதாவது பேச சொன்னேன். சோ, ஹவ் இஸ் யுவர் ஸ்டடீஸ்?" என்றார். டிப்பிகல் அங்கிள்'ஸ் கேள்வி. "கோயிங் ஓன்" என்றேன். டிப்பிக்கல் ஸ்டூடண்ட்'ஸ் பதில்.

அலன் கொஞ்சம் மூட் அவுட் ஆகத் தொடங்கி இருந்தான். அடிக்கடி கோபம் வந்தது. ப்ரெண்ட்ஸ்'இடத்தில் எரிந்து எரிந்து விழுந்தான். நைட் அவுட்டுகளில் நண்பர்கள் அவன் சிதாராவுடன் சண்டை போடுவதை ஒட்டுக் கேக்கத் தொடங்கினார்கள். டீ.வீ.யில் பார்ப்பதற்கு யாருமேயில்லாமல் செக்ஸ் படம் ஒடி முடிந்தது. சிகரட் பிடித்தான். அதிகமாய் பிடித்தான். குடித்தான். கெட்ட வார்த்தை ரொம்ப யூஸ் பண்ணினான். அவளும், சரி சமமாய் சண்டை போட்டால். "நீ என் ப்ரெண்ட் தானே, எதுக்கு இவ்ளோ ரைட்ஸ் எடுத்துக்கறே" எட்ன்று எஸ்.எம்.எஸ் பண்ணினாள். "நான் உன்ன லவ் பன்றேண்டி" என்று ரிப்ளை பண்ணினான். "ஆரம்பத்துல நாம எப்டி பேசிக்கிட்டோம் என்று ஞாபகம் இருக்கா? எனக்கு வீட்ல ஏற்கனவே ப்ரோபோஸ் பண்ணியாச்சு என்று சொல்லி இருக்கேன்ல" என்று அவள் அனுப்பினாள். கையில் இருந்த கிளாசை தூக்கி எறிந்தான். அது நிலத்தில் பட்டு ஜம்ப் பண்ணி இரண்டாவது தரம் நிலத் தொடுகையுறும் கணத்தில் வெடித்துச் சிதறியது. அவள் வேறு ஒருத்தனுடனும் போனில் பேசுவதாய் ப்ரெண்ட்ஸ்'இடம் சொல்லி அழுதான்.
வலிக்குதுடா என்றான்.

"கம் இன்" என்றார்.
என்ட்ரன்ஸ்'இல் "மோர்க்" என்று ஒரு போர்டு தொங்கியது. ஏதோ வில்லங்கம் இருப்பதை அந்த போர்டு அன்டர்லைன் பண்ணிக் காட்டியது. பின்னால் போனேன். கொஞ்சம் உள்ளே போனோம். "பிண நாற்றம் அடிக்குது" என்ற வரி அச்சு அசலாக பொருந்தும் இடத்தில் இருந்தோம். மூக்கை பொத்திக் கொண்டேன். ஒரு ஸ்ட்ரெச்சர்'ஐ இழுத்து வந்தார். "டூ யூ நோ திஸ் கய்?" என்ற படியே துணியை அகற்றிவிட்டார். கொஞ்சம் தூக்கித்தான் போட்டது. முதன் முதலாக எனக்கு ரொம்பத் தெரிந்த ஒரு நபரின் பிணத்தின் பக்கத்திலே நின்றேன்.
"யாஹ்.... அங்கிள்... திஸ் இஸ்.... 'அலன்'..... வாட் த ஹெல்?" என்றேன். வார்த்தைகள் வரவில்லை. உடம்பு விறைத்துக் கொண்டது. அவனை
இப்படி ஒரு கோலத்தில் என்னால் பார்க்க முடியவில்லை. "என்னாச்சு அங்கிள்?"
"சூசைட். விஷத்தை குடிச்சிட்டு கைய அறுத்துக்கிட்டான். நைட் நடந்து இருக்கு. காலைலதான் கண்டு புடிச்சிருக்காங்க. உன் ட்ரைவிங் லைசன்ஸ் இவன் பர்ஸ்ல இருந்துச்சு. சப் இன்ஸ்பெக்டர் மேஜைல இருந்து எடுத்துட்டு வந்தேன். சோ தோட், மஸ்ட் பீ யுவர் ப்ரெண்ட். நீ லஞ்ச்'கு தான் ஊருக்கு வாறேன்னு அம்மா சொன்னாங்க. சோ வர சொல்லி இருந்தேன். க்ளோஸ் ப்ரெண்ட்'ஓ?"
கொஞ்சம் நேரம் பித்துப் பிடித்து நின்றேன்.
"என் ப்ரெண்ட்டோட ப்ரெண்ட். க்ளோஸ் எல்லாம் இல்லை. ஒரு நாள் லைசன்ஸ் வேணும் என்று கேட்டான். குடுத்தேன். அவ்ளோதான்" என்றேன்.
"சரி வா, லெட்ஸ் கோ அவுட். சீம்ஸ் லைக் யூ ஆர் கெட்டிங் நேர்வஸ்" நிஜமாவே என்னமோ பண்ணிக் கொண்டே இருந்தது.

அலன், சிதாரா பத்தி சொல்லிக் கொண்டிருந்த சமயத்திலேயே எனக்கும் அவளுடன் பேச வேண்டும் போலிருந்தது. அவனுக்குத் தெரியாமல் மொபைல்'இல் இருந்து சிதாரா நம்பரை எடுத்துக் கொண்டேன். வீட்டுக்குப் போய், எஸ்.எம்.எஸ் பண்ணினேன்.
"ஹாய்"
ஐந்து செக்கனில் வந்தது ரிப்ளை.
"ஹூ இஸ் திஸ்?"
எஸ்.எம்.எஸ்'ஸில் தொடர்ந்தது அரட்டை ரெண்டு நாள். யாரிடமும் சொல்லக் கூடாது என்று ப்ராமிஸ் வாங்கிக் கொண்டு நான் யார் என்று சொன்னேன். தெரிந்த உடனே, 'அலன்'னிடம் சொல்லப் போறேன் என்றாள். காலில் விழாத குறையாக கெஞ்சி அந்த ஆப்பரேஷன்'ஐ கேன்சல் செய்தேன். "சரி, இனி எதுவுமே மறைக்கக் கூடாது" என்று ப்ராமிஸ் வாங்கிக் கொண்டாள். சிரித்துக் கொண்டேன். அடிக்கடி அவள் போட்டோ எம்.எம்.எஸ். பண்ணினாள். அலன் எப்படி வழிந்தான் என்று சொன்னாள். அவன் போர் என்றாள். வீட்டில் ப்ரோபோஸ் பண்ணி இருப்பதாய் சொன்னாள். "இனியும் புதுசா யாராவது பசங்க கூட பேசுவியா?" என்று கேட்டதற்கு "மாட்டேன்" என்றாள்.

"அங்கிள், ஐ கோ ஹோம். மனசே சரி இல்லை"
"ஓகே, கேரி ஓன்"
வெளியே வந்தேன்.

"ஹாய்'டா ஜஸ்ட் கேம் ஹோம். ஹவ் இஸ் த ஜர்னி. டயர்ட் ஆ?. மிஸ் யூ டா" என்று சிதாரா'விடம் இருந்து எஸ்.எம்.எஸ் வந்தது.