Sunday 31 October 2010

பேஸ்புக்கும் காதல்களும் - 2

ஓகே... இலை வந்திடுச்சு. இங்கேதான் நமது கடலை (ப்ளேர்ட்டிங்) போடும் திறமை கை கொடுக்கும். அடிக்கடி அவங்க ப்ரோபைலை விசிட் அடிப்போம். நிஜத்திலே காதலி வீட்டை சுத்தி சுத்தி வாற மாதிரி. ஆனா, பேஸ்புக்ல இப்பிடி எல்லா பொண்ணுங்க அல்லது பசங்க ப்ரோபைல்ஸையும் நோட்டம விடுவோம். ஏதாவது ஒண்ணு மாட்டும் என்கிற நம்பிக்கைல. ப்ளேர்ட்டிங்னாலே, நீதி நேர்மை தர்மம் எல்லாம் இருக்கக் கூடாதுன்னு ஒரு ரூல் இருக்கு. ஸோ, சில பேர் எப்டியோ பொண்ணுங்க/பசங்க மனசுல இடம் பிடிக்கணும் என்கிறத மட்டுமோ முதல் நோக்கமா வைப்பாங்க. அதுக்காக சிஸ்டர்/பிரதர் என்று கூப்பிட கூட தயங்கமாட்டாங்க. அப்பால அந்த ரிலேஷன்ஷிப்பை பெயர் மாத்திக்கலாம் என்கிற ஒரு தொலை நோக்குப் பார்வை அவங்ககிட்ட இருக்கும். இவங்க ஜெகஜாலக் கில்லாடிங்க. ஏன்னா நிஜமா ஒரு பொண்ண மட்டும் ட்ரை பண்றவந்தான் காலம் பூரா உண்மையா இருப்பான் என்கிறது எழுதப்படாத விதி. ஒரு படத்துல விஷால் சொல்வாரு, "வேலைக்குப் போகணும்னா ரெண்டு மூணு இடத்துல அப்ளிகேஷன் போடறதில்ல? அது மாதிரி நானும் ரெண்டு மூணு பேருக்கு போட்டு ஒருத்திய வாழ்க்கைத் துனையாக்கிக்குவேன்." இது எவ்ளோ லூசுத்தனமான ஒரு பாயின்ட். அப்ளிகேஷன் போடறதுன்னா, இங்க பொண்ணுங்ககிட்ட ப்ரொபோஸ் பண்றதுதான் வரும். பொண்ணுங்க ஓகே சொல்லிட்டா அவரு வேலைக்கு போறாருன்னு அர்த்தம். ஸோ அவரு அதுல ஒரு பொண்ணைத்தான் லவ் பண்ணியிருக்கணும். ஒரே டைம்ல ரெண்டு மூணு வேலைக்கு போறதில்லையே. ஆனா, அப்பிடி போகணும்னு ஆசைப் பட்டீங்கன்னா நீங்கதான் ப்ளேர்ட்டர்.

சரி, இப்போ அந்த பொண்ண மடக்கணும்னு ஆசைப்படுவீங்க. ஒரு பர்சனல் மெசேஜ் தட்டி விடுவீங்க, "ஹை, யு லுக்கிங் ஸோ பியூட்டிபுல் இன் யுவர் ப்ரோபைல் பிக்சர் யார். அண்ட் ஐ காட் டு நோ யுவர் கேரக்டர் ப்ரோம் யுவர் இன்போ. ஐ லைக் இட் வெரி மச் மா". கொஞ்ச நாளைக்கு மெசேஜ் நாட்டிபிகேஷன் "1" என்று ரெட் கலர்ல ப்ளின்க் பண்ணாதானு ஏங்கும். அவ என்ன போஸ்ட் அவ வால்ல ஷேயார் பண்ணினாலும் அதை போய் லைக் பண்ணி, "ஒவ்ஸம்"னு அடிச்சி வைப்பீங்க. கருமாந்திரம் புடிச்ச யூடியூப் வீடியோ போட்டாலும் அதே மாதிரியே. அவகிட்ட இருந்து ரிப்ளை வரும். இப்போ உங்க கடலை பிசினஸ் ஸ்டார்ட் ஆகும். ரொம்ப பொறுமைசாலி சார் நீங்க. சாவகாசமா பதில் அனுப்புவீங்க. குடும்பம், பேமிலி, அம்மா அப்பா இப்பிடி ஒரே மேட்டர வேற வேற மாதிரி கேள்வி கேட்டு குட்டைய குழப்புவிங்க. அவங்க போட்டோஸ் கேப்பீங்க.

"எனக்கு மட்டும் பெர்சனலா பார்க்க கூடிய மாதிரி ஒரு பிக் அனுப்பேன், ப்ளீஸ்."
"வாட்? வாட் டு யூ மீன்?"
"நோ நோ, நான் அப்பிடி சொல்லல, உன் அழகை நாள் புல்லா பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு"
"உன் முகம் அழகா இருக்கற போட்டோ ஒண்ணு எனக்கு வேணும்னு தோணுது."
"அப்போ மத்த போடோஸ்ல நான் அழகாய் இல்லியா?"
"ஐயோ நான் அப்பிடி சொல்லலமா. நீ எப்பவுமே அழகு. உன் முகம் ஒவ்வொரு கோணத்தில இருந்து பார்க்கும் போதும் ஒரு வித்தியாசமான அழகு. உனக்கு, நீ வச்சிருக்கற பிக்சர்ஸ்ல எது பெஸ்ட்னு தோணுதோ அத எனக்கு அனுப்பேன் ப்ளீஸ். முடியாதுன்னு மட்டும் சொல்லாத"
"ஓகே, ட்ரை பண்றேன்"
"ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்"
"ஓகே ஓகே வழியாத"
"தேங்க்ஸ்டி, ம்வாஹ்ஸ் (கிஸ் பண்ற சவுண்ட்)"

உங்க மனசு பத்திக்கும். உள்ளுக்குள்ள இருந்து சவுண்ட் போடும். "வாவ், நீ கேட்ட உடனேயே அனுப்பறாளே, அப்போ இது அதுதானா?." நீங்களும் 'எஸ் எஸ்'னு வாரணம் ஆயிரத்துல சமீராரெட்டிய சூர்யா கண்ட உடனே சூர்யா நெஞ்சை தட்டிக் கொடுப்பது போலே பண்ணிக்குவீங்க. மனசு பறந்து போகும்.

இப்போ உங்க சைட்ல ரெண்டு பாயின்ட் ஒப் வியூ...
1. நீங்க நிஜமாவே லவ் பண்றீங்க, உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாரிடமும் இவா பத்தி சொல்விங்க. செம ஹப்பியா அவ பத்தி பேசிட்டே இருப்பீங்க.
2. நீங்க ப்ளேர்ட் பண்றீங்க, உங்க ப்ரெண்ட்ஸ்ட "மச்சான் புதுசா ஒண்ணு சிக்கிடிச்சு"னு சொல்வீங்க. எல்லார்ட்டயும் அவ ப்ரோபைல் நேம் குடுத்து அட் பண்ணிக்க சொல்வீங்க. அல்லது, உங்க ப்ரெண்ட்ஸ் யாருக்கும் இந்த மேட்டர் சுத்தமா தெரியாத மாதிரி பார்த்துக்குவீங்க.

எதிர் சைட்ல ரெண்டு பாயின்ட் ஒப் வியூ...
1. மேலே சொன்ன ரெண்டும் ப்ளஸ் அவங்க எல்லார்க்கும் கேட்ட உடனேயே போட்டோ அனுப்பற ஒரு கேரக்டர்.
2. அவங்களுக்கு நீங்கதான் பேஸ்புக் மூலமா கிடைச்ச எப்போதும் டச்ல இருக்கும் முதல் ப்ரெண்ட்.


--டு பி கன்டிநியூட்--



Saturday 30 October 2010

பேஸ்புக்கும் காதல்களும்

எங்க இருந்து, எப்பிடி தொடங்குவது என்றெல்லாம் தெரியல... நவீன, டெக்னாலஜி உலகின் பிரதான பிறப்புகளில் ஒன்று சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள். இதில் கெட்டிக்காரப் பிள்ளை 'பேஸ்புக்'. நம்பர் 1 தளமான இது இன்றைய இளைஞர்களின் மிக முக்கியத் தேவை. ஒரு மொபைல் போன், மோட்டர்பைக் கணக்காய் இதுவும் நமது ஐடண்டி. புதிதாக அறிமுகமாகும் ப்ரெண்ட்ஸிடம் மொபைல் நம்பர் இருக்கா, ஈமெயில் ஐ.டி. இருக்கானு கேட்ட காலம் போய் கொஞ்ச வருஷமாக பேஸ்புக் ஐ.டி. இருக்கானுதான் எல்லாரும் கேட்டிட்டு இருக்காங்க. பேஸ்புக் தொடங்கப்பட்டது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த நண்பர்களுடன் தொடர்புகளை கன்டினியூ செய்ய. ஆனால், இது இப்போதைய ப்லேர்ட்டர்களுக்கு ஒரு கிப்ட். அது கிடக்கட்டும், அது என்ன ப்லேர்ட்டர்? இதுதான் இப்போதைய ட்ரெண்ட்டு மாமே. லவ், கிவ் எல்லாம் அந்தக் காலம். ப்லேர்ட்டிங் என்பது 'தனது எதிர்ப்பாலை தன் மீது ஆசை கொள்ள நாம் மேற்கொள்ளும் முயற்சி' என்று விக்கிபீடியா சொல்லுது. எதிர்ப்பால் மட்டுமே என்ற சமாச்சாரம் தற்போது இல்லை என்று ஆர்கியு பண்ணுபவர்கள், அதை 'இன்னொரு நபரை' என்று படிக்கவும்.

சரி மேட்டருக்கு வருவோம். கொஞ்ச நாள் முன்னாடி என் நண்பர்கள் சேந்து பேஸ்புக் பற்றி ஒரு சர்வே பண்ணினாங்க. அதில அவங்க கண்டுபிடிச்ச ஒரு முக்கியமான விஷயம், 'கொழும்பில் இருப்பவர்கள் அப்டேட் செய்யும் ஸ்டேட்டஸ்களில் அதிகமானது லவ் பற்றியது.' இதில் வேடிக்கையான விஷயம் என்னன்னா, நான் அறிந்து, என் நண்பர் வட்டத்தில் பேஸ்புக்கில் அறிமுகமானவர்களை லவ் பண்ணி அதுல சக்சஸ் ஆனவங்க மூணு பேர். இதில இதை நம்பி நேரம் லாஸ் ஆனவர்களில் நானும் ஒருவன். அப்படியானவர்களுக்காய் இந்தப் போஸ்ட் டெடிகேட் செய்யப்படுகிறது...

சபாஹ், ஒரு வழியாய் இன்ட்ரோ முடிச்சாச்சு.

சரி, இப்போ பேஸ்புக் காதல்களின் முதல் ஸ்டேஜ் எப்டி உருவாகுதுன்னு பார்ப்போம். முதலாவது நீங்க என்ன பண்ணுவீங்கன்னா, நல்ல நல்ல அழகான ப்ரோபைல் பிக்சர் உள்ள பொண்ணுங்க அல்லது பசங்களா பார்த்து அட் பண்ணிக்குவீங்க. இதுல அவங்க 'இன்ஃபோ' பகுதியில் அவங்களை பத்தி எழுதியிருக்கும் 'ஊரான் வீட்டு வசனங்கள்/மேற்கோள்கள்' அல்லது 'நான் இப்பிடித்தான், உனக்கு பிடிச்சிருந்தா இரி இல்லாட்டி கண்ண மூடிட்டு போய்க்கின்னே இரு' என்கிற மாதிரியாக அவர்கள் போட்டுவைத்த எழுத்துக்கள் ஈர்க்கும். ஆஹா, சூப்பரா இருக்குதே இவன்/இவள் கேரக்டர்னு நெனச்சி 'அட் அஸ் எ ப்ரெண்ட்' பட்டனை தட்டி விடுவீங்க. கொஞ்ச நேரத்துல, 'அக்செப்டட்'னு ஒரு நாட்டிபிகேஷன் வந்த உடனேயே மனசுகுள்ள ஒரு சின்ன வித்து விழுந்து முளைச்சு சின்னதா ஒரு இலை விடும்.

--டு பி கன்டிநியூட்--



Thursday 28 October 2010

Why I hate wedding?

இணையத்தில் ரசித்தது இது... என் சுய ஆக்கமில்லை...



கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான். இப்பதாண்டா எதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது.

வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது. பொண்டாட்டி முன்னாடி இப்படி சொல்லிட்டு,அவங்க Kitchen உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணி மாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்....


எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு அடிமையாக்கிட்டாங்க, என் தோழி ஒருத்தி...


தம்பி அடுத்த வருஷம் ஜூன்'குள்ள கல்யாணத்த முடிசிரனும்டா. நல்ல பொண்ணு கிடைச்சுதுன்னா விட்ற கூடாது, என் அம்மா...

டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும். வழக்கம் போல பெருந்தன்மையா நீங்களே பார்துகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத. மரியாதையா காச சேர்த்து வை, என் அப்பா...

சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா. காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ் போடலாம்னு நானும் ரெண்டு வருசமா வெயிட் பன்றேனு சொல்லிட்டு, மூதேவி இதுவும் பண்ணிக்கமட்டேன்குது எனக்கும் பண்ணி வெக்க மாட்டேன்குதுன்னு மனசுக்குள்ள முனுமுனுக்கற என் தங்கச்சி...

கல்யாணம்லாம் சும்மா பிரதர், வெத்து மேட்டரு, ஒன்னும் இல்ல அதுல, பார்ல சிகரட் ஓசி வாங்குன கடனுக்கு அட்வைஸ் பண்ண வஸ்தாது ஒருத்தர்.

கல்யாணம்... கல்யாணம்... கல்யாணம் ...

25 or 27 வது வயசுல ஒரு பிரம்மச்சாரியை லேசா பயமுறுத்தி அதிகமா பதட்டபடுத்தி கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த. அப்டி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல...

முதல் 3 மாதம் திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு பொண்டாட்டிங்க்ற பேர்ல உங்க வீட்டுகுள்ள வருவா...

பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்...

பீரோகுள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க துணிய அடுகிக்குவாங்க‌. உங்க பாத்ரூம்ல அவங்க சோப்பும் ப்ரச்சும் எடத்த புடிச்சுக்கும். அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவாங்க‌. ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்... (இது அடிமையாகுதலின் முதல் கட்டம்)

அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு, உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்.

(அவங்க கூட படிச்ச வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாங்க‌)

மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங் கூட்டிட்டு போவீங்க. அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த எல்லாத்தையும் அப்பதான் வாங்குவாங்க‌...

அவங்க வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம் அழுகனும். கான்டாதான் இருக்கும், என்ன பண்றது...

அவங்களோட ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட் கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம். பில்லு எகிர்றது பார்த்து மனசு பதர்னாலும் உதடு வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்...


வீட்டுக்கு விருந்தாளிங்க்ற பேர்ல வந்து டேரா போன்ற அவங்கப்பன் விருமாண்டி கிட்ட கூட பாசமா நடந்துகுவோம்... (எல்லாம் நடிப்புதேன். எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு)

கொஞ்சம் கொஞ்சமா நீங்க நீ'யாயிட்டு வருவீங்க...

ஆறு மாசம் ஓடிடும். அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை. அடிமை ஒய் நீரு...

பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற‌ சுகம் அதுக்கப்றம் கனவாவே போய்டும். எங்க போறோம், எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும் நினைவுகளா மட்டுமே இருக்கும்...

எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ, அப்டி இருப்பாளோங்கற அந்த curiosity சுத்தமா இருக்காது. செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும். குஷி ஆனா அடிக்கற பீர், தம்[எப்போவாவது] கட் ஆகும். நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்...

என்ன கொடும சார் இது...

இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...

வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelor life மட்டும்தான்னு எனக்கு தோனுது...

நீங்க என்ன நெனைக்கறீங்க?