Tuesday 25 November 2008

AMD யும் INTEL உம்

இவற்றுக்கிடையிலான யுத்தத்தில் ஒரு பகுதி இது... இப்படியும் நடக்குமா என வியக்க வைக்கும் சில விஷயங்கள்....



Monday 24 November 2008

ஒபாமாவின் குடும்பம் அமெரிக்காவில் குடியேறுகிறதா?


நன்றி: இ மெயில் நண்பர்கள்



மக்கள் இந்த காமெடியனை இனி நிஜமாகவே மிஸ் பண்ணப் போறாங்க





















என்னதான் இருந்தாலும் இவருக்கு பராக் ஒபாமா சமமாவாரா என்ன? ஹிஹி....

நன்றி: இ மெயில் நண்பர்கள்



Saturday 15 November 2008

பராக் ஒபாமா இலங்கையில் பிறந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?


அவர் குடும்பத்தை சேர்ந்த எல்லோரும் அவருக்கு அடுத்தபடியான அதியுயர் பதவிகளில் இருந்திருப்பார்கள்....
நன்றி: e mail நண்பர்கள்



என்ன கொடுமை சரவணன் இது?







Tuesday 11 November 2008

facebook இல் நமது status இனை sms மூலமாக அப்டேட் செய்வது எப்படி?


இப்பெல்லாம் நம்ம பசங்க மத்தியில social networking sites என்கிற ஒன்னு ரொம்ப பிரபல்யமாகிட்டே வருது. இத பத்தி உங்களுக்கும் ரொம்ப நல்லாவே தெரிஞ்சிருக்கும். Friendster இல் தொடக்கி facebook வரை இந்த சேவையை பல நிறுவனங்கள் வழங்கிட்டு வருது. இதால இன்னிக்கு வரைக்கும் எனக்கு ரூபாய்க்கும் பிரயோஜனம் இல்லைங்கிறது வேறு விஷயம். ஆனாலும் இதால வரக் கூடிய நன்மைங்கன்னு சொல்லி ஒரு பெரிய லிஸ்ட்டே குடுக்கிறாங்க. உதாரணத்துக்கு வெளி நாட்டு மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கலாம், வெளி தேடலாம், ஒரே ஆற்றலுள்ள எண்ணங்களுடைய நண்பர்களை அடையாளம் காணலாம்... இப்டி ஏகத்துக்கும் இருக்கு. (இந்த விஷயங்கள் எல்லாம் இந்த social networking தளங்கள் இல்லாமலேயே ரொம்ப ஈசியா பண்ணலாங்கறது இன்னொரு வேறு விஷயம்).
ஆனாலும் நானும் இந்த எல்லா social networking site இலும் இருக்கறேன் என்கிறது மூன்றாவது வேறு விஷயம்.
மற்றவங்க கேட்டா "அப்டி என்னதான் இதுங்கள்ள இருக்குன்னு பார்க்கத்தான் மெம்பெர் ஆனேன்" னு சாட்டு சொல்லிக்குவேன்.

சரி, இப்ப விஷயத்துக்கு வருவோம்.
facebook இல் status என்று ஒரு விஷயம் இருக்கு. அதாவது இப்ப நாம என்ன நிலமைல இருக்கோம் என்று சொல்ற அதேதான். இதை web மற்றும் wap (or GPRS) இல் இருந்து எப்டி அப்டேட் செய்றதுன்னு உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். இதே விஷயத்த sms மூலமா எப்டி அப்டேட் செய்றதுன்னு நான் சொல்லப்போறேன். (தெரிஞ்சவங்க கம்னு கிடக்கனும்).
இதுக்கு எமக்கு தேவை twitter எனும் facebook அப்ளிகேஷன். இதை நீங்க அப்ளிகேஷன் பார் இல் உள்ள find more ஐ பயன்படுத்தி தேடிக்கலாம். பார்க்க படம்...
அல்லது facebook.com/applicaiotns எனும் பேஜ் இனை விசிட் செய்யவும்.
அதில் search applications இல் twitter என தேடும் பொது twitter by twitter எனும் அப்ளிகேஷன் ஐ இணைத்துக் கொள்ளவும்.

எல்லாத்துக்கும் மேலாக உமக்கு twitter இல் ஒரு அக்கவுண்ட் தேவை. இதற்கு twitter.com இனை விசிட் செய்யவும். அங்கு பதிவு செய்த பின் லொக் இன் செய்து உமது பக்கத்திற்குள் நுழையவும். twitter இல் உள்ள உமது பக்கத்தில் உள்ள settings tab க்ளிக் செய்து முன் செல்லவும். அதில் devices என்றொரு tab இருக்கும். அதை க்ளிக் செய்யவும். அதில் உமது மொபைல் இலக்கத்தை பதிந்து கொள்ளவும். இதன் பின்னர் facebook இல் உள்ள twitter அப்ளிகேஷன் இற்கு வரவும் . twiiter யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் இனையே இதற்கும் பயன்படுத்தவும். அப்ளிகேஷன் இற்கு எல்லா விஷயத்துக்கும் allow கொடுத்து வைக்கவும்..

எல்லாம் முடிஞ்சதுன்னா +447624801423 எனும் நம்பருக்கு ஒரு sms ஐ அனுப்புங்க. அவ்ளோதான்... மேட்டர் ஓவர்.

இது எப்டி வேல செய்துன்னு என்னோட அடுத்த பதிவில் சொல்றேன். இது தெரியாதவங்களுக்கு மட்டும். தெரிஞ்சவங்க எனக்கு முன்னாடியே மத்தவங்களுக்கு சொல்லி கொடுத்து என் பொழைப்ப கெடுத்துடாதிங்கப்பா.
அதுவரை பின்னூட்டங்களை எதிர்பார்கிறேன்....



Saturday 8 November 2008

இந்தியா ஏன் கிரிக்கட்டில் முன்னேறி இருக்கு?


அங்க எல்லாத்துக்குமே கிரிக்கட்தான் basic...



நேற்று ரசித்த கவிதை...

ஏழையின் சிரிப்பு...

ஏழையின் சிரிப்பில்
இறைவனை கண்டேன்,
தலையைச் சொறிந்த
கடவுள்,
என்னிடம் கேட்டார்...
"ஒரு நூறு ரூபா
கைமாத்து இருக்கும்களா சாமி?"



Monday 3 November 2008

இந்த வருடம் (2008) பெண்களுக்கு மிகவும் பிடித்த இ மெயில்.

ஒரு கணவன் தான் தினம் தினம் வேலைக்குப் போய் படுற கஷ்டங்களை தன் மனைவி உணரனும்னு நினைச்சான். அவ வீட்ல சும்மா இருக்கறது இவனுக்கு ரொம்ப கோபத்தை உண்டு பண்ணிச்சு.

உடனே அவன் கடவுள் இடம் வேண்ட ஆரம்பிச்சான்.
"அன்பான கடவுளே, நான் இந்த குடும்பத்துக்காக தினம் தினம் 8 மணி நேரம் வேலைக்கு போய் ரொம்ப கஷ்டப் படுறேன். ஆனா என் பொண்டாட்டியோ வீட்ல சும்மா உக்காந்துக்கிட்டு காலந்த்தள்ளிட்டு இருக்கா. அவ இந்த குடும்பத்துக்காக நான் படுற கஷ்டத்த உணரனும். எனவே, என்னை அவளாவும் அவளை நானாவும் மாத்திடு. ஆமென்"

கடவுள் அவனது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார்.

மறு நாள் காலை அவன் பெண்ணாய் எந்திரிச்சான்.
அவனுடைய மனைவிக்கு (தற்காலிக கணவனுக்கு) காலை உணவு ரெடி பண்ணான். குழந்தைங்கள எழுப்பி விட்டான். அவங்க பாடசாலை சீருடையை எடுத்து அயர்ன் பண்ணி வச்சான். அவங்களுக்கு காலை சாப்பாடு ஊட்டி விட்டான். பகல் உணவுகளை பேக் செய்து கொடுத்தான். அவங்களை பாடசாலைல கொண்டு போய் விட்டுட்டு வந்தான். வீட்டுக்கு வந்து லாண்டரிக்கு போட துணிகளை எடுத்து சென்றான். போற வழியில ஒரு வங்கில பணம் போட நின்னான். லாண்டரி முடிஞ்சு எடுத்துட்டு வார வழில மளிகை சாமான்கள் வாங்கிட்டு வீட்டுக்கு வந்தான். பில்ஸ் எல்லாத்தையும் கட்டினான். செக் புத்தகத்தை பலன்ஸ் பண்ணான். செல்லப் பூனையின் கூட்டை துப்பரவு செய்தான். நாயை குளிப்பாட்டினான்.

மணி ஏற்கனவே 1 pm ஆயிட்டிருந்தது.
அவசர அவசரமாக கட்டிலை சரி பண்ணினான். வீட்டை க்ளீன் பண்ணினான். கிச்சனை sweep, mop லாம் கூட பண்ணான். ஸ்கூல்கு ஓடிப் போய் பசங்களை கூட்டி வந்தான். வரும் வழியில் அவங்க போட்ட சண்டையை சமாதானம் செஞ்சான். வீட்டுக்கு வந்து அவங்களுக்கு பால், பிஸ்கட் குடுத்து அவங்க Home Work பண்ண உதவி செஞ்சான். அப்புறம் துணிகளை அயர்ன் பண்ணிக்கிட்டே கொஞ்ச நேரம் TV பார்த்தான்.

ஒரு 4.30 மணி போல் உருளைக் கிழங்குகளை உரிக்கத் தொடங்கினான். அப்புறம் காய்கறிகளை கழுவி இறைச்சியை வேக வைக்கத்தொடங்கினான், இரவு சாப்பாட்டிற்கு.

சாப்பிட்டு முடிஞ்சதுக்கப்புறம் கிச்சனை க்ளீன் பண்ணி, தட்டுகளை கழுவி, அயர்ன் பண்ண உடுப்புகளை மடிச்சு, குழந்தைங்களை குளிப்பாட்டி தூங்க வைச்சு முடிக்கும் பொது இரவு 9.30 ஆயிட்டிருந்திச்சு.

அதுக்கு மேல அவனால முடியல... அவன் நிம்மதியா தூங்குவோம்னு bedroom பக்கம் போனா அங்க அவன் பொண்டாட்டி (தற்காலிக கணவன்) ரொமான்ஸ் பண்ண காத்திட்டிருந்தா. அவனும் எந்த complaint உம் வராம அத நிறைவேற்றினான்.

மறு நாள் காலை விடிஞ்சதுதான் தாமதம்...
எழும்பி கடவுள் இடம் பிரார்த்திக்க ஆரம்பிச்சான்.
"கடவுளே, நான் அவளை ரொம்ப தப்பா இவளவு நாளும் நினைச்சிட்டு இருந்திருக்கேன். இதுக்கு மேல அவ மாதிரி என்னால இருக்க முடியாது. அவ எவளவு கஷ்டப் படுரானு இப்ப விளங்குது. தயவு செய்து எங்களை முன்பிருந்தது போல மாத்திடு"

அதுக்கு கடவுள் சொன்னாராம்...
"மகனே.. நீ நியாயத்தை உணந்ததை இட்டு நான் ரொம்ப சந்தோஷப் படுறேன். உங்களை பழைய நிலைமைக்கு நான் மாத்திடுவேன். ஆனா அதுக்கு நீ 9 மாசம் வெயிட் பண்ணனும். ஏன்னா நீ இப்ப கர்ப்பமாயிருக்கே" னு...

இது எப்டி இருக்கு...



Saturday 1 November 2008

E mail இல் வந்த கூத்து

இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி?





இலங்கையர்கள்:
1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின்
சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.

2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர்,
அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக
பத்திரமாக வைப்பார்கள்.

3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம்
வர எடுப்பார்கள்.

4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.

5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal
என்றே நினைப்பார்கள்.

6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து
வைப்பார்கள்.

7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று
இருக்கும்.

8)தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட(rhythm) கூடின மாதிரியான பெயர்களை
வைப்பார்கள்.. (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)

9)பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர்
ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.

10) 'இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது' என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட
இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.

11)வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து
மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.

12)காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.

13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet or new
couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.

14)தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று
சொல்லும் பெற்றோர்கள்; மற்ற 'Uncles And Aunties' என்ன நினைப்பார்களோ
என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள்.

15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.

16)நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும்
அதையே விரும்புவார்கள்.

17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத்
தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத்
தம் கடமையாக நினைப்பார்கள்.

18)தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours) எடுப்பார்கள்.

19)பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர்
தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும்
சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.

20)இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால்
எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.

21)வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள்
அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.

22)சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு
வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல (sheet)
தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.
23)திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்கள்.

24)திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும்
மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்

25)எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு
அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு
விருப்பம் காட்டுவார்கள்.

இதை வாசிக்கும் உங்களுக்கு இதில் பல பொருந்துகிறதா? அப்படியானால் நீங்கள்
ஒரு இலங்கையர் ( + தமிழரென்று சொல்லலாமெனவே நான் நினைக்கிறேன்) என்பதில்
சந்தேகமே இல்லை.