Thursday 13 December 2007

கவிதையும் நானும்

முன் குறிப்பு: நமக்கு அவளவா கவிதை எலாம் எழுத வராது. இருந்தாலும் எழுத வேண்டும் என்கிறது ரொம்ப நாள் ஆசை. அதனால சகலருக்கும் அறிவிச்சிக்கிறது என்னண்ணா... இன்னில இருந்து நம்ம கைவண்ணத்த ரசிகர்கள் கண்டு மகிழலாம்.


வல்லவர்களும் ஆயுதங்களும்
வல்லவர்களின் கைகளில்
விளையாடும் ஆயுதங்கள்.
எட்டுத் திசைகளும்
எதிரிகளய்...
ஒவ்வொரு நொடியும்
ஒரு விதமாய்...
நிம்மதியின்றியும் கழியும்
நிமிடங்கள்.

ஆயுதமேந்தின்
அதுவே கொல்லும்!


கருத்துக்கள் வேண்டப்படுகின்றன.



அலப்பறை பற்றிய தங்கள் கருத்தும் பொருளும்

"அலப்பறை" பற்றி தங்கள் கருத்தையும், "அலப்பறை" என்ற சொல்லிற்கு தங்கள் கொடுக்கும் பொருளையும் இப்பதிவில் இட வேண்டுகிறேன்.



Tuesday 11 December 2007

மெகா தொடர்களும் பின்னணி இசைகளும்...

என்னட இது சம்பந்தம் இல்லாத தலைப்பாயிருக்கே என்று பார்க்கறீங்களா? உண்மையிலேயே எனக்கும் அது புரியவே இல்லைதான். ஆனாலும் நேற்று எதேச்சையா 'மலர்கள்' நெடுந்தொடரை பார்க்க நேரிட்டது. அப்போது நடிகைகளின் கிளிசரின் அழுகைகளை விடவும் என் புலங்களுக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தியது அதன் பின்னணி இசைதான். பின்னர்தான் வடிவேலு பாணியில் 'உக்காந்து யோசிக்கும்' போது ஒரு உண்மை புலப்பட்டது. அதாவது தொடர்களில் சோகம் இருக்கோ இல்லையோ, பின்னணி இசை இருக்கவே இருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான தொ.கா. தொடர் இசையமைப்பாளர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. அவர் செய்யும் மிகப் பிரதானமான வேலை நடிகைகளின் கண்ணீருக்கு உயிரோட்டமளிப்பதுதான். ஆனால் இவ் இசையமைப்பாளர்கள் தமது சுயத்தையும் காட்ட தவறுவதுமுண்டு. நம்மவர்கள் மேலைத்தேய இசை கேட்க மாட்டார்கள் என்ற குருட்டு நம்பிக்கையோ தெரியாது, நிறையவே இறக்குமதி செய்யப் படுகின்றன. சினிமாவிலும் இது உண்டு என்றாலும் தொ.கா. நாடகங்களுக்கு இது புதுசே... அவர்களின் திருட்டுத்தனங்கள் என்னைப் போன்ற சில அதி புத்திசாலிகள் பார்க்க உட்காரும் போதுதான் ஒளிபரப்பாகித் தொலைப்பதுண்டு. அப்படி அண்மையில் மிக அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டது 'The last of the Mohiccan' என்ற திரைப்படத்திலிருந்து...

ஹிஹிஹி... இப்போது புரிந்திருக்குமே எதற்காக இந்த தலைப்பு என்று...



நாகரீகம்

கன்னிப் பதிவாய் எதை இடுவது என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தேன். எதேச்சையாக கண்ணில் பட்டது சகோதரியின் இ மெயில். நாகரீக வளர்ச்சியை ஒரு சிறு படம் மூலம் சிறப்புற எடுத்தியம்பியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்...
ஒருவர் பேசும்போது கேட்டுக் கொண்டிருந்தேன், "ஒரு காலம் வரும். அந் நாட்களில் வீதிகளில் விபச்சாரம் நடக்கும். நாம் அவர்களை தண்டிக்க திராணியின்றி 'சற்றே ஒதுங்கிப் போய் செய்து கொள்ளுங்க்ளேன், உங்களுக்கு எங்கள் இடையூறும் குறையும்' என ஆலோசனை சொல்வோம். நாய்களுக்கும் மனிதர்களுக்குமே வித்தியாசமிராது" எனத் தொடர்ந்தது அப் பேச்சு.
நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன்...

"உலகம் விடியலை நோக்கிப் போனாலும், அது பூரண சூரிய கிரகணம் நிகழும் விடியல் என எமக்கு தெளிவாகவே விளங்குகிறது. ஆக மொத்தத்தில் இருட்டுதான்"



Monday 10 December 2007

வருக வருக வருக...














எங்களது புதிய blog (வலைப் பூ) இற்கு தங்களை வரவேற்பதில் நானும் எனது நண்பனும் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். முதலாவதாய் எம் நினைவாக இந்த ரோஜாக்கள்...