Tuesday 26 January 2010

என்ன கொடும சார் இது. வட போச்சே!

முன் குறிப்பு: இதில் குறிப்பிடப்படும் நம்மாளு சத்தியமாக அடியேன் இல்லை என்பதை இத்தால் உறுதி செய்கிறேன் :D




கன்வர்சேஷன் 1: 
ஷெஹானிக்கு வேண்டப்பட்டவர்கள் யாவரும் அந்த நேரத்தில் பேஸ்புக்கில் ஆன்லைனில் இருக்காத படியால் நம்மாளிடம் வந்து ஹாய் சொல்ல...

4:10am ஷெஹானி: ஹாய், நான் உன் கூட ப்ரண்ட்ஷிப் வச்சிக்கலாம்னு நினைக்கறேன்

4:10am நம்மாளு: ஆஹ், சூப்பர். ஆனா நான் பொண்ணுங்க பின்னாடி அலையறவன் கிடையாது. சோ, உன்ன பார்த்து நீ செம ஹாட்னு எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கமாட்டேன். :D

4:10am ஷெஹானி: இப்போ நீ ஹாட்னு சொல்லி என்ன சொல்ல வாறே?

4:11am நம்மாளு : இப்போ எல்லா பசங்களுமே எல்லாப் போன்னுங்களையுமே அப்டித்தானே கூப்பிடுறானுங்க

4:11am ஷெஹானி: உனக்கு ஒரு பிரண்ட் கூட எப்பிடி பிஹேவ் பண்ணனும்னு தெரியாதா?

4:12am நம்மாளு : ஆஹ், நீ தப்பா புரிஞ்சிகிட்டே! நான் என்ன சொன்னேன்னு மறுபடியும் செக் பண்ணு. எனக்குப் பொண்ணுங்கள "ஹாட்னு" கூப்பிட பிடிக்காது. அவ்ளோதான்.

4:13am ஷெஹானி: ஓகே. சாரி.
                        
4:13am நம்மாளு : நான் சிம்பிளா சொல்லனும்னா, "யூ லுக் நைஸ்!".

4:13am ஷெஹானி: ஓகே. இப்போ நான் போகணும். அப்புறம் சந்திக்கலாம்.

4:13am நம்மாளு : ஹேய். கொஞ்சம் வெயிட். நான் உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்.

4:14am ஷெஹானி: ஓகே. கேளு.

4:14am நம்மாளு : நீ என் பிரண்ட் ஆக இருப்பியா, எப்பவும்? கேள் பிரண்டா இல்ல, ஆனா பெஸ்ட் பிரண்டா...

4:15am ஷெஹானி: ஆமா

4:16am நம்மாளு : என்ன நம்புறியா?

4:18am ஷெஹானி: ஆமாடா. ஆஹ், சமீர் ஆன்லைன் இருக்கான். அவன் கூட பேசணும். நான் போறேன், பாய்.

4:21am நம்மாளு : சமீர்? ஹேய், உன் நம்பர் கிடைக்குமா?

4:21am ஷெஹானி: அவன் என் பிரண்ட். நம்பரா? ஹிஹி :)

4:22am நம்மாளு : ஏன்? நான் சீரியஸாக கேக்கறேன். நீ என் பிரண்ட் தானே. எனக்கு பேஸ்புக்ல மட்டும் பிரண்ட் ஆக இருக்கறது பிடிக்காது.

4:22am ஷெஹானி: நான் சமீரிடம் கேக்கணும்.

4:23am நம்மாளு: அவன்ட எதுக்கு கேக்கணும்? அது உன் நம்பர்தானே?

4:24am ஷெஹானி: சமீர் சொன்னா தருவேன்.

4:24am நம்மாளு: ஓகே. வெயிட்.


கன்வர்சேஷன் 2: 
சமீரும் நம்மாளின் நண்பர் பட்டியலில் இருந்ததால், அவரிடம் சென்று கேட்டார் நம்மாளு.

4.33am நம்மாளு : நான் ஷெஹானிட்ட நம்பர் கேட்டேன். அவ உன்கிட்ட கேக்க சொன்னா, தர முடியுங்களா?

4:34am சமீர் : யார் நீ?

4:34am நம்மாளு : அவ புது பிரண்ட்

4:35am சமீர் : அவ என் லவ்வர். நீ சாட் பண்ணனும்னா பண்ணு. ஐ டோன்ட் கேர். பட் கால் எல்லாம் எடுக்க முடியாது. ஓகே?

4:34am நம்மாளு : ஆகா ஓகே ஓகே :D


கன்வர்சேஷன் 3: 
கன்வர்சேஷன் 2 அப்பிடியே காப்பி செய்யப்பட்டு அனுப்பப்பட்டது.
ஷெஹானி இதைப் படித்ததில் இருந்து இது தொடங்குகிறது.

4:42am ஷெஹானி: என்ன? சமீர் என்னை லவ் பண்ணுறானா?

4:42am நம்மாளு : அப்பிடித்தான் சொன்னான்.

4:42am ஷெஹானி: நெஜமாவா?

4:43am நம்மாளு : ஆமா.
                  
4:43am ஷெஹானி: வாவ். நானும் அவன லவ் பண்றேன். பட் எப்பிடி சொல்றதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டிருன்தேன். தேங்க்ஸ்டா. ஐ லைக் யூ.

4:45am நம்மாளு : என்ன கொடும சார் இது. வட போச்சே!




பின் குறிப்பு: எல்லாத்துக்கும் அப்புறம் அதுங்க ரெண்டும் சேர்ந்து குரூப் மெசேஜ் ஒண்ணு தேங்க்ஸ் பண்ணி அனுப்பி இருந்திச்சுங்களாம்.
எல்லாம் ஒரு குரூப்பாத்தான்யா அலையறாங்க என்று புலம்பித் தீர்த்தார் :D



Thursday 21 January 2010

அவாஸ்ட் அண்டி வைரஸ்ஸின் புதிய பதிப்பு

அவாஸ்ட் அன்டி வைரஸ்ஸின் புதிய பதிப்பான 5.0.377 கடந்த 19 ஜனவரி 2010 இல் வெளியாகியுள்ளது. மிகவும் நீண்ட காலத்திற்குப் பின் வெளிவந்த அவாஸ்டின் ஒரு பதிப்பு இதுவாகும். புதிய லோகோ மற்றும் இன்டர்பேஸ் உடன் வந்திருக்கும் இதை வீட்டுப் பாவனைக்கு இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



கவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 3)

ஒரு மனிதனுக்கு உதவி செய்வதில் தங்கள் மனநிலை என்ன? கஷ்டப்படும் ஒருவருக்கு ஓடிச்சென்று உதவுவபரா? நான் இதில் ஆகவும் கீழ் ரகம். இவருக்கு உதவுதா வேண்டாமா என்று யோசித்தபடியே காலத்தை கடத்திவிடும் கேவலமான ரகம். இதில் என்னை விடவும் தாழ்ந்த பிரிவொன்று உள்ளது. அது இந்த சம்பவங்களை விற்றுக் காசாக்கும் மீடியா ரகம். ஒரு மனிதன் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது அவனுடன் இருந்த கடைசி நண்பன் எடுத்த வீடியோ எதோ காம்பட்டிஷனில் முதல் பரிசு வாங்கிய ஞாபகம்.

2 சந்தேகம்:
நேற்று பஸ்சில் மற்றுமொரு நெடுந்தூரப் பயணம். பாதித் தூரம் கடந்த போது பஸ்ஸில் மூச்சு முட்டிக்கொண்டது. ஆரம்பத்திலேயே நல்ல சீட் கிடைத்த படியால் எந்த தொந்திரவும் இருக்கவில்லை. ஒரு 3 அல்லது 4 சீட்களுக்கு முன்னாடி ஒரு வயதான பெண்மணி (அபௌட் 45 இருக்கும்) நின்று கொண்டிருந்தார். என் அம்மாவை ஒத்த தோற்றம். சற்றுப் பெருத்த உடம்பு. நிற்கக் கஷ்டப் படுவதான தோற்றம். ஆனா பஸ்ஸில் அசையக் கூட முடியாத நிலை. அவங்க கூட வந்த சின்னப் பொண்ணுக்கு எப்படியோ சீட் கிடைத்துக் கொண்டது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த என் மைன்ட் தாறுமாறா யோசிக்கத் தொடங்கியது.
யோசனை 1: நான் எழும்பி இடம் கொடுத்தால் என்ன?
யோசனை 2: இதையே அந்தச் சின்னப் பெண் செய்தால் என்ன?
யோசனை 2 என் மனதில் வரக் காரணம், நான் இதை நினைக்கும் போது நான் பயணம் போய்க் கொண்டிருக்கும் தூரத்தை எண்ணிப் பார்த்தது.
யோசனை 3: நான் எழும்பி இடம் கொடுக்க முற்படுகையில் என் ஆசனத்துக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் நபர் இருந்து விட்டால்? முன் பின் அசைவது போலவும் எழும்ப முயற்சிப்பது போலவும் சில சீன்கள் போட்டுப் பார்த்தேன். நபர் என் இடத்தை கைப் பற்ற தயார் ஆவது தெரிந்தது.
யோசனை 4: இதேமாதிரி அப் பெண்மணியின் இடத்தில் என் அம்மா இருந்திருந்தால்??? அம்மா பஸ்சில் பயணிப்பதில்லை என்று அதற்கு மறுமொழியும் கிட்டியது.
யோசனை 5: அப் பெண்ணிற்குப் பக்கத்தில் இருந்தவர் எழும்பி இடம் தராதது ஏன்?
யோசனை 6: இவரைப் பார்க்காதது போல் முகத்தை திருப்பி வைத்துக் கொண்டால் என்ன?

இவ்வாறு பல விஷயங்களை யோசித்ததில் எனது டெஸ்டிநேஷனை சென்றடைந்து விட்டிருந்தேன். அப்போதும் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தார்.

என்னால் அவருக்கு இடம் கொடுத்திருக்கக் கூடியது அப்படி ஒன்றும் கஷ்டமான காரியமில்லை. உக்கார முயற்சி பண்ணிய பக்கத்து நபரை ஒரு வாய்ப் பேச்சில் தடுத்து அவருக்கு புரிய வைத்திருக்க முடியும். இந்தப் பெண்மணியை கூப்பிட்டு இவ்விடத்தில் அமரச் செய்திருக்க முடியும்.இவையெல்லாம் நான் செய்யாததற்கு காரணம் என்ன? ஒரே பதில், சந்தேகம். அது என் மீதோ, அந்தப் பெண்மணி மீதோ, பக்கத்தில் நின்ற நபர் மீதானதாகக் கூட இருக்கலாம். உதவி செய்வதன்று புறப்பட்ட பின் உதவி பெறுபவரின் காரக்டர் பத்தி சந்தேகப் பட்டுக் கொண்டிருப்பது, உங்களை அந்த உதவி செய்தலிலிருந்து தடுத்து விடும். இந்த ஹெல்ப் இவருக்கு பிரயோசனமா என்று யோசியுங்கள், ஆம் என்றால் உதவி செய்திடுங்கள். அப்பால நடக்கிறது எல்லாத்தையும் மெயின்டெய்ன் பண்ண மேல ஒருத்தரு இருக்காரு.

நான் பஸ்ஸை விட்டு இறங்கினேன், மனது கனத்திருந்தது...

அலசல் தொடரும்...



Wednesday 20 January 2010

பில் கேட்ஸ் ட்விட்டரில்...

இறுதியாக பில் கேட்ஸ் என்ற மீனும் ட்விட்டர் என்ற வலையில் மாட்டிக் கொண்டது... கடந்த 11 மணி நேரத்துக்கு முதல் இவர் தனது முதலாவது ட்வீட்ஐ செய்துள்ளார். இந்த கணத்தில் 135,000 பின்தொடர்கையாளர்களை கொண்டுள்ள இவரது ப்ரோபைல் சராசரியாக ஒரு செக்கனுக்கு 15 பின்தொடர்பவர்கள் வீதம் அதிகரித்து செல்கின்றது. இது ஒரு வாரிபைட் அக்கௌன்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன கொடும சார் இது :/



கவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 2)

முதல் பாகம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலில் கல்லா கட்டாமையால் 2 ஆம் பாகத்தை வெளியிடுவதில் சில எக்கனாமிக்கல் ப்ராப்ளம் வந்திடுச்சு. இருந்தாலும் தொடங்கியத முடிக்க வேண்டிய கட்டாயம் ஒன்னு இருக்கே...


சரி, மேட்டருக்கு வருவோம். சென்ற பதிவு பல கேள்விகளுடன் முடித்திருந்தோம். இனி ஒவ்வொண்ணா அலசலாம். 



பர்ஸ்ட் இன்டெர்நெட்டின் பாதுகாப்பின்மை. இணையத்தில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை, ப்ரைவசி. சரி இதுக்கேன் இவ்ளோ முக்கியத்துவம். ஒருத்தர பத்தி விஷயங்கள தெரிஞ்சிக்கறதுல என்ன தப்பு? இதில் உள்ள பாயிண்ட் என்னவென்றால், ஒருவரைப் பற்றி அவரது அனுமதி இல்லாமல் தெரிந்து கொள்ள இணையத்தில் இலகு வழிகள் இருப்பது... அப்போ நிஜ வாழ்க்கையில்? அது அதை விட இலகு. பட் நாம் ஏன் இணையத்தை மட்டும் சாடுகிறோம்? ஏன் இன்டர்நெட்டை எண்ணி அளவுக்கதிகமாக பயப்படுகின்றோம்? இதற்கு விடை தேடுவது ரொம்பவே கொம்ப்ளிகேட்டட் ஆனா இஷ்யூ. 


இப்போ பார்த்தீங்கன்னா, உங்க தெருவுக்கு புதுசா ஒருத்தர் குடி வார்ரார்னு வச்சிக்குவோம். அல்லது உங்கள பொண்ணு அல்லது மாப்பிள்ளை பார்க்க ஒரு பாமிலி முடிவு பண்ணுதுன்னு வச்சிக்குவோம். உங்க அனுமதி இல்லாம உங்களபத்தி, உங்களுக்கே தெரியாத, உங்க பேங்க் அக்கௌன்ட் டீட்டைல் வரைக்கும் பல விஷயங்கள அவங்க சேகரிக்கிரதுக்கு ஒரு வாரம் போதும். அப்போ இதை நாம் ஏன் பெரிசு படுத்துவதில்லை? இதுவும் ஒரு விதமான ஹாக்கிங் தானே? எப்பவாவது இவர் என்னை லவ் பண்ண முன்னாடி என்னை பற்றிய டீட்டேயில்ஸ் சேகரிச்சார்னு கேஸ் போட்டிருக்கோமா?


இவ்வாறு 2 ஒரே மாதிரியான விஷயங்களுக்கு வெவ்வேறு 2 விதமான கண்ணோட்டங்கள் இருப்பதற்கு காரணம், புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குழப்பம். இன்னிக்கு வரைக்கும் கூட எங்கள் ஊரில் இணையம் ஒரு மோசமான நண்பனாவே கருதப்படுகின்றது. பெண்கள் இணையத்தில் பங்கெடுப்பதை அவர்கள் குடும்பம் விரும்புவதில்லை. எனக்கு இணையம் அறிமுகமாகியது 1999/2000 ஆண்டு காலப் பகுதி. எனது 11 வயதில். அப்போதும் எனது பெற்றோருக்கு இன்டர்நெட் பற்றி ஒரு தப்பான கண்ணோட்டமே இருந்தது. எனினும் நான் ஆசைப்பட்டேன் என்பதற்காக அவ்வசதி ஏற்படுத்தி தரப்பட்டது. இதுவே நான் ஒரு பொண்ணாக இருந்திருந்தால்? பொம்பளப் பிள்ளைக்கு எதுக்கு கம்பியூட்டர் என்று சொல்லி இருந்திருக்கக் கூடும். இவ்வாறு அவர்கள் பயப்பட ஏன் காரணம்? கலாசார சீர்கேடுகள்! அப்போ கலாசாரத்தை பாதுகாக்க ஒரு பெண்ணின் படிக்கும் ஆசையினை விலையாகக் கொடுக்கும் வியாபாரம் நியாயமானதா? இதுவும் குழப்பமான பல விடைகளை தரக் கூடிய ஒரு கேள்வி.


இனி நாம் பரிச்சயப்பட்ட பல தலைப்புகளின் கீழ் எம்மைச் சுற்றியுள்ள "கவனிக்கப்படாத நிஜங்களை" ஆராயலாம்.


1. தயக்கம்:
கம்பஸ்ல இருந்து வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்தேன் சில நாள் முன்னாடி. ஒரு அழகான பொண்ணு அமர்ந்திருந்த சீட்ல பக்கத்துல இருந்த ஒருத்தர் எழும்பி அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போனார். கிடச்சிச்சுடா சாமி (உக்கார ஒரு இடம் - எங்கறத மட்டும் மீன் பண்ணவும், டபிள் மீனிங் வேணாம்) கணக்கா பொய் அமர்ந்து கொண்டேன். அவ்ளோ நேரம் ஐபாட்ல பாட்டு கேட்டிட்டிருந்த அவ முகம் சுர்ருன்னு சுருங்கிப் போச்சு. நான் கொஞ்சம் சுமார் (ஓகே ஓகே ரொம்பவே சுமார்) என்கிறது ஒரு புறம். பட் ஏன் இப்பிடி அவ முகம் சுளிக்கனும்னு யோசிச்சேன். அவ ஒரு ஸ்மைல் பண்ணி இருந்தான்னா எனக்கு அவ கூட ஒரு ஹாய் சொல்றதுல எந்த தயக்கமுமே இருந்திருக்காது. ஆனா அவ இப்பிடி பண்ணதால எனக்கு அது முடியாம போச்சு. புதிய உறவுகளை ஏற்படுத்திக்க மக்கள் ஏன் தயங்கனும். ஏமாத்திடுவாங்கன்னு பயம்??! அவங்க ஏமாத்தற அளவுக்கு நாம ஏன் இடமளிக்கனும். என்னையும் இப்பிடி ரொம்ப பேர் ஏமாத்தி இருக்காங்கதான். இப்பிடி ரெண்டு மூணு தடவை அடி பட்ட போதுதான் எவ்வாறு ஒரு பாதுகாப்பான உறவை ஏற்படுத்தலாம் என்கற யுக்தியை தெரிந்து கொண்டேன். அதில் முதலாவது நீங்கள் நம்ப வேண்டியது மற்றும் உங்களுக்கு நீங்களே சொல்லிக்க வேண்டியது "இவங்க என்னை விட்டுட்டு போறதால நான் கவலைப் பட மாட்டேன்." இது உறவுகள் மீதான நம்பிக்கையை பொய்யாக்குதுன்னு சில பேர் சொன்னாங்க. யு ஜஸ்ட் ட்ரை அண்ட் சி. கடைசியா ஏமாத்தின ஒரு பிரன்ட் சொன்னான் "நண்பர்களை நம்பாதே" :/ நான் சொன்னேன் "நட்பே நம்பிக்கைலதானேடா இருக்கு" உறவு முறைகளின் மீதான பிழையான புரிதலே அவன் இவ்வாறு சொல்லக் காரணம்.  இனி அவனால எப்படி மற்றவங்க கூட ஒரு உண்மையான நண்பனா இருக்க முடியும்? நான் யாரை கண்டாலும் முதல்ல இவங்க கூட எப்டி பிரண்ட் ஆகலாம்னுதான் யோசிப்பேன், பட் ரொம்ப பேரு எப்படி எமாத்தலாம்னு யோசிக்கறாங்க. இவங்க தேவை நிச்சயம் பணமாக இருக்கும். அல்லது இவர்கள் இவ்வாறான விஷயங்களில் சந்தோஷம் காணும் சைக்கோ அல்லது அட்டிக்ட்ஸ் ஆக இருப்பார்கள். பர்ஸ்ட் கட்டக்கரில இருக்கறவங்கள திருத்தறது ஈசி. ஆனா மூனாவது பிரிவைச் சேர்ந்தவங்கள மாத்தறதுதான் ரொம்ப கஷ்டம். இவங்க கேட்டகரி 1 + கேட்டகரி 2 வைச் சேர்ந்தவங்க. இவங்க பாதிப்பு எந்த அளவுக்குன்னா முதலாவதா ஒருத்தர மீட் பண்ணும் போது 'இவன் நம்மள ஏமாத்திடுவானோன்னு' சந்தேகம் வரும் அளவுக்கு நம் மனதை பாழ் படுத்திவிட்டு இருக்கரார்கள். இவ்வாறானவார்களாலேயே மக்கள் புதிய உறவுகளை ஏற்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். எடுத்துக் காட்டு, நான் பஸ்சில் சந்திச்ச அந்த அழகான பெண். இணையத்தில் இதன் விளைவு இதைக்காட்டிலும் 2 மடங்கு...


இன்னும் அலசுவோம்....



Tuesday 19 January 2010

கவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 1)

முன் குறிப்பு: இந்தத் தொடர் பதிவுகள் பலரது எதிர்ப்பையும் சிலரது பாராட்டையும் சம்பாதிக்கக் கூடியன. மற்றும் இவை விவாதத்திற்காக அல்ல :)

விருமாண்டி பெயர் குழப்பத்தின் போது கமல்ஹாசன் குடுத்த பேட்டி பற்றி ரொம்ப பேருக்கு தெரிந்திருக்கும். அதையும் விட ரொம்ப குழப்பமா போச்சு இந்த பதிவுக்கு பேர் தேடிய படலம்.

ஆக்சுவலா நானும் என் நண்பன் மின்னிக்ஸ் உம் கொஞ்ச நாள் முன்னாடி பேசிக்கொண்டிருக்கும் போதே வந்திச்சு இந்த ஐடியா. நார்மலா தொடங்கிய அரட்டை வர்ச்சுவல் வேர்ல்ட் இன் நம் மீதான பாதிப்புகள் பற்றி பேசப்போய் மாட்டிக் கொண்டது இந்த மீன். முதலில் பேஸ்புக் பற்றித்தான் ஆரம்பிச்சோம். அப்புறம் பஸ்ல போற வாரவங்கள எல்லாம் நோட்டம் போட ஆரம்பிச்சோம். சும்மா சொல்லப்படாது. செம எக்ஸ்பீரியன்ஸ் அது. நாம வேணான்னு தூக்கி எறிஞ்ச பல விஷயங்கள்ல ரொம்பவே இன்டெரெஸ்டிங்கான விஷயங்கள் இருக்கு. வாழ்க்கைல நாம மீட் பண்ற ஒவ்வொரு நபரும் ஒரு வித்தியாசமான காரக்டர். அவருக்கென்று தனித்தன்மைகள் இருக்கும். இது சாதாரணமா வெளில தெரியாது. இப்படி ஒரு விஷயத்தை அலசுவதுதான் எங்க கான்சப்ட். இப்படி பல விஷயங்கள் சம்பந்தப்படுறதால என்ன பேரு வைக்கறதுன்னு ப்ராப்ளம் வந்திச்சு. மின்னிக்ஸ் "பேஸ்புக் பக்கங்கள்" இலேயே எழுதரேன்னாரு. நான் கொஞ்சம் டைம் எடுத்துகிட்டேன். இந்த தலைப்பு பரவால்லன்னு பட்டதும் உடனே பதிவெழுத ஆரம்பிச்சிட்டேன். முதல் கோணல் முற்றும் கோணல் ஆயிடக்கூடாதுல்ல. அதான் இப்பிடி.

சரி முதல் இன்சிடன்ட்கு வருவோம். இங்கதான் பேஸ்புக்கின் வருகை...
சென்ற வருடத்தின் சம்மர் சீசனில் ஒரு நாள். நாங்கள் பேஸ்புக்கில் உலவிக்கொண்டிருக்கும் போது வந்தது ஒரு மெசேஜ், பேஸ்புக் இன்பாக்ஸ் இற்கு. ஒரு பொண்ணு. ஆமா எப்பவுமே பிரச்சனை அங்கதானே தொடங்குது :D. அவ கேட்டிருந்தா, "டூ ஐ நோ யூ?". கேள்வி வாஸ்தவம்தான். பட் அதுக்கப்புறம்தான் ப்ராப்ளமே ஸ்டார்ட். நான் ரிப்ளை பண்ணேன், "நோ, பட் வி கேன் கெட் டு நோ ஈச் அதர்". அவகிட்ட இருந்து பளீர்னு வந்திச்சு "சாரி, ஐ டோன்ட் அட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்." சரி இதுல நாம் கவனிக்க வேண்டி இருக்கறது சில விஷயங்கள். பொதுவாவே இணையம், சோசியல் நெட்வேர்க்கிங் தளங்கள் பற்றி மோசமான உண்மைச் சம்பவங்கள் உலவுவது நாம் அறிந்ததே. முன் ஜாக்கிரதை தேவைதான். பட் அந்த "கன்பர்ம் பிரண்ட் ரிகுவஸ்ட்" பட்டனை அழுத்த ஆயிரம் கேள்வி கேக்கறவங்க நிஜ உலகுல இப்பிடி இருக்கறாங்களா?. ஒரு ஸ்ட்ரேஞ்சர்தானே பிரண்ட் ஆக முடியும். இப்போ இருக்கும் எல்லா நண்பர்களும் முன்னாடி யாரோ தெரியாதவங்கதானே. பேஸ்புக் இல் அல்லது மற்ற இணையம் சம்பந்தப்பட்ட வழிகளில் உண்மையான உறவுகளை ஏற்படுத்த முடியாதா? இணையத்தில் ஒருவரை ஏமாற்றுவதால் எமக்கு என்ன லாபம்?

கேள்விகளுடன் காத்திருங்கள்... கூடிய சீக்கிரமே எல்லோரும் சேர்ந்து விடை தேடலாம்...

:)



Sunday 17 January 2010

யாதுமாகிய நட்பு...

மின்னஞ்சல் ஒன்று கிடைத்தது ஒரு வாரம் முன். நட்பின் பெருமைகளை அளவளாவி இருந்தது அது. அதை வாசித்த போது என்னுள்ளே உதித்தவை...

பொதுவாகவே நட்பைப் பற்றி பெருமையாகவே விஷயங்கள் கூறப்படுவதுண்டு. எனவே நம்பிக்கை துரோகம் என்பது நட்பில் பாரிய ஒரு குற்றமாக கருதப்படுகிறது. அதுலயும் இன்னா மேட்டர்னா சிறந்த நண்பன், சாதா நண்பன்னு 2 பிரிவு வேற வச்சுப்புட்டாங்க. இதாலேயே ப்ரண்ட்ஸ்ஸுகுள்ள செம ப்ராப்ளம் வர ஆரம்பிச்சிச்சு. யாரு எந்த கேட்டகரின்னு பிரிச்சுக்க சண்டை போட்டாங்க. பெஸ்ட் ப்ரண்டா ஒருத்தன்தான் இருக்க முடியும்னு நெனச்சாங்க. அந்த இடத்துக்கு போட்டி அதிகமாச்சு. அதனால யாராளையுமே அந்த இடத்த தக்கவச்சிக்க ஏலாம போச்சு. பெஸ்ட் ப்ரண்டு அந்த இடத்த தக்க வச்சிக்க ஏனையவங்க மேல வீண் பழி போடா ஆரம்பிச்சான். நட்புக்குள்ளே அரசியல் யுக்திகள் வந்திச்சு. சாதா நண்பன் ரொம்ப நல்லவனா வேஷம் போடா ஆரம்பிச்சான். அவன் நெஜமாவே நல்லவனா இருந்தாலும் "ஒருவேள நடிக்கிறானோ" என்று தோண ஆரம்பிச்சது. நட்பு மேல சந்தேகம் வந்திச்சு.

"சாதா நண்பன் அலுமாரியை தூக்க உதவுவான், உயிர் நண்பன் நீ கொலை செய்தால் பிணங்களை கூட தூக்க உதவுவான்" என்றெல்லாம் மேற்கோள்கள் வந்திச்சு. அப்போ கொலை செய்யாதே அது பாவம்னு தடுப்பவன் எந்த பிரிவுன்னு சந்தேகம் வந்திச்சு. ஒரு நண்பன் எப்டி என் கூட இருக்கானோ அப்டித்தான் நான் அவன் கூட இருப்பேன்னு ஒரு முடிவு எடுத்தாங்க. ஒரு பண்ட மாற்று ரேஞ்சுக்கு நட்பு என்னும் உறவு போச்சு. நிலங்களுக்கு நிலம் நட்பின் வரைவிலக்கணம் மாறு பட்டிச்சு. சில இடங்கள்ல நட்பின் விரல் மூக்கு வரைக்கும் தான் வாரலாம்னாங்க, சில இடங்கள்ல நட்பின் கைகள் கழுத்தைப் பிடித்துக் கூட சில விஷயங்கள் சொல்லலாம்னு உரிமை இருந்திச்சு.

இந்த அண்டத்தின் ஏதோ ஒரு மூலைல நட்பின் மூதாதையர் திருப்திப் பட்டுக்கொண்டனர், "ஏதோ நம் பரம்பரை இன்னும் உயிர் வாழ்கிறதே" என்று :)



Friday 15 January 2010

வந்துட்டோம்ல... மறுபடியும்...

சபாஹ்... எப்டி இருக்கீங்க எல்லோரும்... கொஞ்ச நாளைக்கு ஜெயில் பக்கம் போயி நம்ம சகாக்களுக்கு ஒரு சலாம் போடுறதும் ரிலீஸ் ஆயி ஜாமீன் கையெழுத்து அப்றோம் வாயிதானு கோர்ட் போலீஸ் ஸ்டேஷன் வாசல்படி ஏறுறதுமா கொஞ்ச நாட்கள் அப்டியே போயிட்டதால பதிவெழுத நேரமே இல்லாம போயிடுச்சு சாமி... நீங்கதான் நம்ம நெலமைய புரிஞ்சிகிட்டு மன்னிக்கணும் :)

அப்றோம் நாம இல்லாத இந்த காலப்பகுதிகள்ள நெறையவே விஷயங்கள் நடந்து போச்சு இந்த உலகத்துல... அத பத்தி எல்லாருக்குமே நல்லா தெரிஞ்சு இருக்கு... அப்றோம் நாம எதுக்கு அத பத்தி அலசிக்கிட்டு...

அதனால கூடிய சீக்கிரமே புதிய பதிவில சந்திக்கலாம் :)