Wednesday 14 April 2010

எதோ ஒன்று என்னைத் தாக்க - பையா

பையா  பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் லயித்திருந்தாலும் இடையிடையே சண்டைக் காட்சிகள் வந்து போதையை தண்ணி தெளித்துப் போக்கி விட்டன. இறுதித் தருவாயில் இந்த சாங். மியூசிக் சி.டி. இல் வெளி வராத இந்தப் பாடல் உள்ளம கொள்ளை கொண்டது. நான் விரும்பி ரசித்த அதை நீங்களும் கொஞ்சம் ரசியுங்களேன். :)


எதோ ஒன்று என்னைத் தாக்க, 
யாரோ போல உன்னைப் பார்க்க, 
சுற்றி எங்கும் நாடகம் நடக்க, 
பெண்ணே நானும் எப்படி நடிக்க... 

காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன், 
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன், 
பெண்ணே உந்தன் ஞாபகத்தை, நெஞ்சில் சேர்த்து வைத்தேனே, 
உன்னைப் பிரிந்து போகையிலே, நெஞ்சை இங்கு தொலைத்தேனே... 

என்னை உன்னிடம் விட்டுச்செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில், 
எங்கே போவது யாரைக் கேட்பது எல்லாப் பாதையும் உன்னிடத்தில், 
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் என் இரவையும் பகலையும் மாற்றிப்போனாய், 
ஏன் இந்தப் பிரிவை தந்தாய் என் இதயத்தில் தனிமையை ஊற்றிப் போனாய், 
உள்ளே உன் குரல் கேட்குதடி என்னை என்னுயிர் தாக்குதடி, 
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ ஓ ஓ ஓ... 

பெண்ணே உந்தன் ஞாபகத்தை, நெஞ்சில் சேர்த்து வைத்தேனே, 
உன்னைப் பிரிந்து போகையிலே, நெஞ்சை இங்கு தொலைத்தேனே... 

எதோ ஒன்று என்னைத் தாக்க, 
யாரோ போல உன்னைப் பார்க்க, 
சுற்றி எங்கும் நாடகம் நடக்க, 
பெண்ணே நானும் எப்படி நடிக்க... 

காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன், 
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன், 
பெண்ணே உந்தன் ஞாபகத்தை, நெஞ்சில் சேர்த்து வைத்தேனே, 
உன்னைப் பிரிந்து போகையிலே, நெஞ்சை இங்கு தொலைத்தேனே.



Tuesday 6 April 2010

அரசியல்வாதியும் தாயம்மாவும்

பின்னாடி  சேர்க்கப்பட்ட முன்குறிப்பு: இது இலங்கையின் "2010 பொதுத் தேர்தலிற்கு" சமர்ப்பணம்.

ஏர்போர்ட்டிலிருந்து ஊருக்கான வழியில்
வேப்பமர நிழலில் அல்லலுறும் பகலில்
டிஷ்யூ பேப்பர் விற்கிறாள் தாயம்மா...
ராத்திரி வீட்டில் எரிய விளக்கில்லை
வந்தால் போக டாய்லட்டும் இல்லை.

அவள் கண்ணீர்தான் போக்கமுடியாது போயிற்று
மற்றோர் புறம் துடைக்க அவள் விக்கும்
டிஷ்யூ பேப்பரால் எனினும்
தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் கணங்களில்
அவளுக்கும் உதவிடும் அது...

இதையெல்லாம் தீர்ப்பேன் என்று
அன்று வந்த அரசியல்வாதி
இன்றும் வந்தார் வாங்க...
வாக்கு இல்லை, டிஷ்யூ பேப்பர்.

ஏர்போர்ட்டிலிருந்து வீடு செல்லும் வழியில்
வாங்கிக் கொள்கிறார் கொஞ்சம்.
இவருக்கு அவளை நினைவில்லை எனினும்
வறுமையின் இருட்டு கண்ணை மறைத்து
இவளுக்கும் ஞாபகசக்தி இழந்ததால் என்னவோ
அவர் தந்த காசை எண்ணத் தொடங்கினாள்,
மறுபடியும் கேட்டதை கொடுத்துவிட்டு...