Saturday 26 September 2009

கடல்கொள்ளையன் போன்று பேசுங்கள்


சமீப காலங்களில் வலைப்பூக்களில் வலம் வந்த போதே இப்படி ஒரு விஷயம் இருப்பதை தெரிந்து கொண்டேன்.
அது "உலக கடல்கொள்ளையர்கள் போன்று பேசும் தினம்". உலக தினங்களில் வித்தியாசமான ஒன்று. இது வருடாந்தம் செப்டம்பர் 19 ஆம் திகதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கடல்கொள்ளையர்கள் எவ்வாறு பேசுவார்களோ அவ்வாறே நாம் பேச வேண்டும், இந்நாளை கொண்டாடும் பட்சத்தில். இதில் என்ன பிரச்சனை என்றால் நமக்கு ஆங்கில கடல்கொள்ளையர்கள் பேசும் முறையே தெரிந்திருக்கிறது. தமிழ் கடல்கொள்ளையர்கள் இருந்தார்களா என்பது பற்றி தெரியவில்லை. ஒரு வேளை நாம் சற்று நல்லவர்களாக இருந்திருக்கக்கூடும். தமிழ் அன்பர்கள் இதில் ஒரு ஆய்வு செய்ய வேண்டுகின்றேன்.

சரி இனி ஆங்கில கடல்கொள்ளையர்கள் பகுதிக்கு வருவோம். விஷயம் என்னவென்றால் இத்தினத்தை சிறப்பிக்கும் முகமாக கூகிள் மற்றும் பேஸ்புக் ஒரு புதிய மொழி நடையை அறிமுகப்படுத்தி உள்ளன. இது கடல்கொள்ளையர்களின் ஆங்கிலம் என அழைக்கப்படுகிறது. வித்தியாசமான பாணியில் இருந்தாலும் மிகவும் ரசிக்க வைக்கும் இம் மொழியை ஒரு முறை பயன்படுத்தித்தான் பாருங்களேன்.

கூகிள் பைரேட்
பேஸ்புக் இல் இம்மொழியை செயல்படுத்த செட்டிங்க்ஸ் டேப் இலுள்ள மொழிகள் பக்கத்துக்கு சென்று "ஆங்கிலம் பைரேட்" என்பதை தெரிவு செய்யலாம்.

எவ்வாறு இம்மொழி நடையை பேசுவது என்று அறிய இங்கே க்ளிக்குங்கள்.

இம்மொழி நடை தோன்றியதற்கு காரணமாக அளவுக்கு மீறிய மது பாவனை மற்றும் உப்புக் காற்று போன்றன சொல்லப்படுகிறது



Thursday 24 September 2009

சில புகைப்படங்களும் கை வண்ணங்களும்... :)




























மீண்டும் ஒரு சிறு இடைவெளி... இரண்டு மாத காலங்களுக்கு என் காதலி மடிக்கணனி என்னை விட்டு விலகி இருந்தாள். ஒரு விதமான ஊடலில் செயலிழந்து போனது அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இடைப்பட்ட காலங்களில் எனது தேடல் சற்றுக் குறைந்து போனது அப்பட்டமான உண்மை.

சில நாட்களுக்கு முன் நானும் எனது நண்பர்களும் ஒரு சில புகைப்படங்களை எடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தோம். அப்போது எடுத்தவை சிலவற்றை தங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். இது ஒரு விதமான ட்ரிக் ஷாட் உத்தியை கையாண்டு எடுக்கப்பட்டது. மென்பொருட்களின் மூலம் எடிட் செய்யப்படவில்லை. விண்டோஸ் விஸ்டா இலுள்ள "விண்டோஸ் போட்டோ கலரி"ஐ பயன்படுத்தி ப்ரைட்னஸ் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது