Monday 11 May 2009

"பொய்" - இன்டர்நெட் இல் ரசித்த கதை

அன்பர்களுக்கு மறுபடியும் வணக்கம்...
சமீப காலங்களில் இன்டர்நெட் வெளிகளில் சுற்றித் திரிவதே என் வேலையாய் போய் விட்டது... அப்போது சிக்கியது இது... வயிறு வலிக்க சிரித்தேன். தங்களுக்கும் அப்படியே நடக்க இறைவனை வேண்டுகின்றேன்.

ஒரு நாள் கெல்வின் இன் அப்பா வீட்டுக்கு ஒரு ரோபோட் வாங்கி வந்தார். அந்த ரோபோட் கொஞ்சம் விசேஷமானது. யாராவது போய் சொன்னா அதை கண்டுபிடித்து அவர்களின் கன்னத்தில் அறைந்து விடும்.

அன்னிக்கு கெல்வின் ஸ்கூல்ல இருந்து கொஞ்சம் லேட்டா வந்தான். அப்பா கேட்டாரு "ஏன் லேட் கெல்வின்?".
அதுக்கு அவன் சொன்னான் "இன்னிக்கு எங்களுக்கு எக்ஸ்ட்ரா க்ளாஸ் இருந்திச்சுப்பா"
உடனே அங்கிருந்த ரோபோட் விட்டிச்சு அவன் மூஞ்சில ஒரு அறை.

அதுக்கப்புறம் அப்பா சொன்னாரு "இத பாரு கெல்வின், இந்த ரோபோட் கொஞ்சம் புத்திசாலி. ஒருத்தங்க பொய் சொன்னா அத கண்டுபிடிச்சு அவங்களுக்கு ஒரு அறை அறைஞ்சுடும். அதனால இனி பொய் சொல்லாம என்கிட்ட உண்மைய சொல்லு. மரியாதையா எங்க போனேன்னு சொல்லிடு"

அதுக்கு கெல்வின் சொன்னான் "மன்னிச்சிடுங்கப்பா, நான் சினிமாக்கு போனேன்"

"என்ன சினிமா?"

"திருவிளையாடல்"

மறுபடியும் விட்டிச்சு ஒரு அறை கெல்வின் மூஞ்சில, அந்த ரோபோட்.

"மன்னிச்சுகோங்கப்பா, *பலான படம்* க்குத்தான் போனேன்."

அப்பா சொன்னாரு, "உன்ன நினச்சா எனக்கு வெட்கமா இருக்கு மகனே, நான் எல்லாம் உன் வயசா இருக்கும் போது இப்பிடி *பலான படத்துக்கு* எல்லாம் போனதும் இல்ல, பொய் சொன்னதும் இல்ல."

சொன்னதுதான் தாமதம் அப்பா கன்னத்துலேயும் விழுந்திச்சு செமத்தியான ஒரு அறை.


சத்தம் கேட்டு கிச்சன்ல இருந்து ஓடி வந்தாள் அம்மா.
இவங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு சொன்னாள் "என்ன இருந்தாலும் அவன் உங்க பிள்ளைதானே, உங்க புத்திதானே அவனுக்கும்......"
சொல்லி முடிக்கல அவளுக்கும் விழுந்திச்சு ஒரு **பளீர்* .... ஹிஹி...