Tuesday 11 December 2007

மெகா தொடர்களும் பின்னணி இசைகளும்...

என்னட இது சம்பந்தம் இல்லாத தலைப்பாயிருக்கே என்று பார்க்கறீங்களா? உண்மையிலேயே எனக்கும் அது புரியவே இல்லைதான். ஆனாலும் நேற்று எதேச்சையா 'மலர்கள்' நெடுந்தொடரை பார்க்க நேரிட்டது. அப்போது நடிகைகளின் கிளிசரின் அழுகைகளை விடவும் என் புலங்களுக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தியது அதன் பின்னணி இசைதான். பின்னர்தான் வடிவேலு பாணியில் 'உக்காந்து யோசிக்கும்' போது ஒரு உண்மை புலப்பட்டது. அதாவது தொடர்களில் சோகம் இருக்கோ இல்லையோ, பின்னணி இசை இருக்கவே இருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான தொ.கா. தொடர் இசையமைப்பாளர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. அவர் செய்யும் மிகப் பிரதானமான வேலை நடிகைகளின் கண்ணீருக்கு உயிரோட்டமளிப்பதுதான். ஆனால் இவ் இசையமைப்பாளர்கள் தமது சுயத்தையும் காட்ட தவறுவதுமுண்டு. நம்மவர்கள் மேலைத்தேய இசை கேட்க மாட்டார்கள் என்ற குருட்டு நம்பிக்கையோ தெரியாது, நிறையவே இறக்குமதி செய்யப் படுகின்றன. சினிமாவிலும் இது உண்டு என்றாலும் தொ.கா. நாடகங்களுக்கு இது புதுசே... அவர்களின் திருட்டுத்தனங்கள் என்னைப் போன்ற சில அதி புத்திசாலிகள் பார்க்க உட்காரும் போதுதான் ஒளிபரப்பாகித் தொலைப்பதுண்டு. அப்படி அண்மையில் மிக அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டது 'The last of the Mohiccan' என்ற திரைப்படத்திலிருந்து...

ஹிஹிஹி... இப்போது புரிந்திருக்குமே எதற்காக இந்த தலைப்பு என்று...