Tuesday 10 August 2010

மேற்கோள்கள் - 1

ஜென்னி: "நீ எப்பொழுதாவது கனவு கண்டிருக்கிறாயா, பாஃரஸ்ட், நீ யாராக இருக்கப் போகிறாய் என்பதை?"

பாஃரஸ்ட்: "நான் யாராக இருப்பேன் என்பதையா?"

ஜென்னி: "ஆமா"

பாஃரஸ்ட்: (குழம்பிய முகத்துடன்) "நான் நானாக இருக்கப் போவதில்லையா?"



இது நிஜமான கேள்விகள். நாம் எல்லோரும் இப்படித்தான். எமக்கென்ற ஒரு காரக்டரை உருவாக்குவதை விடுத்து இன்னொரு நபர் போன்று ஒரு மாயை ஏற்படுத்திக் கொண்டு வாழ விரும்புகிறோம். பொய்ப் பகட்டு.இது கண நேர சந்தோஷம் தந்தாலும், நிஜமான திருப்தி இருக்கப் போவதில்லை.ஒருவரை பின்பற்றுவது என்பதை தப்பாக புரிந்து கொண்டதன் விளைவே அது. நீ இன்னொருவருடை காப்பியாக இருப்பதைக் காட்டிலும், உன்னைப் பார்த்து நீ இவருடைய வழி வந்தாலும் தனக்கென்று  ஒரு சுயம்கொண்டிருந்தாய் என்று மற்றவர்கள் சொல்லும்படியாக இருப்பதே உண்மையான மகிழ்ச்சி. இதை உறைக்கும் படியாய் சொல்லிய இந்த வசனங்கள் இடம் பெற்றது "பாஃரஸ்ட் கம்ப்" மூவியில் :)