Wednesday, 29 September 2010

மேகத்தில் ஒரு கம்பனி!

இது எனது நண்பன் மின்னிக்ஸ்ஸின் ப்ளாக் போஸ்ட்... அப்படியே காப்பி அண்ட் பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது...


ஹேய் ப்ரெண்ட்ஸ்! இன்னும் இந்த ப்ளாக் அப்டேட்டாகும்னு யாராச்சும் நம்பிட்டு இருக்கிறீங்களா? அப்டீன்னா ரொம்ப நல்லவருதான் நீங்க! ரெண்டு மாசமாகுது லாஸ்ட் போஸ்ட் எழுதி! எழுதவே டைம் இல்ல... அவ்ளோ பிசின்னு பொய் சொல்ல விரும்பல்ல! ப்ளாக் எழுதுற மூட் இல்ல! அதான் மேட்டர்!

லாஸ்ட் ரெண்டு மாசமா விஜய் படம் மாதிரி தொடர் தோல்விகள்தான்! முதல் காதல்... முதல் தோல்வி... பேஸ்புக் லவ் பேஸ்புக்காலேயே முறிஞ்சிடுச்சு! அதையே... அவளையே நெனச்சு நெனச்சு ஃபீல் பண்ணிக்கிட்டு கெடந்ததுல அசைன்மென்ட், ப்ராஜெக்ட் எல்லாம் ஊத்திகிச்சு! உடைஞ்சிபோன இதயம், ஊத்திக்கிட்ட அசைன்மென்ட், ப்ராஜெக்ட் எல்லாம் பிக்ஸ் பண்ணினதுல ரெண்டு மாசம் ஓடிடுச்சு! இப்போ கொஞ்சம் பரவால்ல!

ஆல்றைட்! இப்போ டைட்டில் மேட்டருக்கு வருவோம். நாங்க ஒரு கம்பனி ஸ்டார்ட் பண்ணி இருக்கோம்! "வாட்? கம்பனியா? அத ஏதோ பப்பிள்கம் சாப்பிட்ட மாதிரி சிம்பிளா சொல்லுறே?" எண்டுதான் நீங்க கேப்பீங்க! நம்புங்க பாஸ்! காமடி கீமடி பண்ணல... நிஜமாவேதான்!

இந்த ஸ்டோரி கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு முன்னால நான் என் ப்ரெண்ட் முறுவோடரூமுக்கு விசிட் அடிச்சதுல இருந்து தொடங்குது... நள்ளிரவு நேரம் அப்பிடியே நெட்ல ப்ரவ்ஸ் பண்ணிட்டு பேசிகிட்டே இருந்ததுல இந்த சொந்தக் கம்பனி ஸ்டார்ட் பண்ணுற (சொந்த செலவுல சூனியம் வெச்சுகுற) ஐடியா க்ளிக்காவிச்சு! என்ன கம்பனி? ஒருக்ளவ்ட் கம்பனி! அதாவது வெப்சைட் மற்றும் வெப் அப்ஸ் க்ரியேட் பண்ணுற கம்பனி! கொஞ்சம் கவித்துவமா சொல்லப்போனா மேகத்தில் ஒரு கம்பனி! (ஒருவழியா டைட்டில கனெக்ட் பண்ணிட்டேன்!)

கம்பனி ஏன்டா அதுக்கு ஒரு பேரு, ஒரு லோகோ வேணும்ல? அதுக்கு ரூம் போட்டு யோசிச்சோம்! ஆமா நிஜமாவே ரூம்ல இருந்துதான் யோசிச்சோம்! நெறைய பேரு ட்ரை பண்ணி கடைசியில அக்ஸரா என்ட பேரு கெட்சியா இருந்துச்சின்னு செலக்ட் பண்ணினோம்! கம்பனி பேருக்கும் கமல் மகளுக்கும் (?!) சத்தியமா எந்தத் தொடர்பும் இல்லீங்க! பேரு ஓகே! அப்புறம் கம்பனி லோகோ டிசைன் பண்ணனுமே... நெட்ல அலைஞ்சுதிரிஞ்சு (?!) நெறைய ஃபொன்ட்ஸ் டவுன்லோட் பண்ணி... நெறைய கலர்ஸ் ட்ரை பண்ணி... ஒருவழியா லோகோவும் ஓகே! அப்படியே கம்பனி வெப்சைட்டையும் க்ரியேட் பண்ணியாச்சு! இதெல்லாம் முடிய ஒரு ஆறு மாசம் ஓடிடுச்சி! அடுத்து டொமைன் நேம் வாங்கி ஹோஸ்ட் பண்ணிட வேண்டியதுதான்னு போனா அந்த நேம் அவைலபிள் இல்லியாம்! சரியாப்போச்சி! அப்பிடியே எல்லாத்தையும் போட்டுட்டு எங்க சொந்த சோகத்துல (?!) மூழ்கிட்டோம்!

அப்புறம் நாங்க இன்னும் கொஞ்ச ப்ரெண்ட்ஸ் வந்து சேந்தாங்க... முறு திரும்பவும் கம்பனி ஐடியாவ தூசு தட்டி எடுத்தான். அக்ஸரா என்கிற நேம் பிடிக்கல்ல... ச்சேன்ஞ் பண்ணனும் என்டான்! திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிச்சோம்! இந்தவாட்டி நியோ (புதிய) என்கிற க்ரீக் வேர்ட் மற்றும் நொரா (ஒளி) என்கிற அரபிக் வேர்ட் ரெண்டையும் மிக்ஸ் பண்ணி நியோநொரா எண்டு பேரு வெச்சோம்! ஒரு கலர்புல்லான லோகோவையும் ரெடி பண்ணினோம்! அப்புறம் வெப்சைட்டும் ரெடி! டொமைன் நேம் கூட அவைலபிள்! எங்ககிட்ட அத வாங்க பணம் இருக்கு, ஆனா க்ரெடிட் கார்ட்தான் இல்ல! இதுவும் சரிப்படாதோன்னு தோணிச்சு! கடைசியில என்  ப்ரெண்ட் ஒருத்தன் ஹெல்ப் பண்ணினான்! அவ்ளோதான்! உடனே சட்டுப்புட்டென்னு நானும் முறுவும் மீட் பண்ணின இடம் கேஃஎப்சி!

ஆமா, கேஃஎப்சி கோழிக்கடைல (?!) வச்சுதான் வெப்சைட் லாஞ் பண்ணினோம்! அது மழை தூறிக்கொண்டிருந்த செப்டெம்பர் மாதம் 27ம் நாள். கிட்டத்தட்ட ஒரு வருசக்கனவு நனவாயிடுச்சி! மேகங்களின் மேல் இன்னும் எவ்ளோ கனவுகள் இருக்கு! இந்தக் கனவுகளைத் துரத்துறது எவ்ளோ சந்தோசமான விஷயம் தெரியுமா?