Saturday, 30 October 2010

பேஸ்புக்கும் காதல்களும்

எங்க இருந்து, எப்பிடி தொடங்குவது என்றெல்லாம் தெரியல... நவீன, டெக்னாலஜி உலகின் பிரதான பிறப்புகளில் ஒன்று சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள். இதில் கெட்டிக்காரப் பிள்ளை 'பேஸ்புக்'. நம்பர் 1 தளமான இது இன்றைய இளைஞர்களின் மிக முக்கியத் தேவை. ஒரு மொபைல் போன், மோட்டர்பைக் கணக்காய் இதுவும் நமது ஐடண்டி. புதிதாக அறிமுகமாகும் ப்ரெண்ட்ஸிடம் மொபைல் நம்பர் இருக்கா, ஈமெயில் ஐ.டி. இருக்கானு கேட்ட காலம் போய் கொஞ்ச வருஷமாக பேஸ்புக் ஐ.டி. இருக்கானுதான் எல்லாரும் கேட்டிட்டு இருக்காங்க. பேஸ்புக் தொடங்கப்பட்டது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த நண்பர்களுடன் தொடர்புகளை கன்டினியூ செய்ய. ஆனால், இது இப்போதைய ப்லேர்ட்டர்களுக்கு ஒரு கிப்ட். அது கிடக்கட்டும், அது என்ன ப்லேர்ட்டர்? இதுதான் இப்போதைய ட்ரெண்ட்டு மாமே. லவ், கிவ் எல்லாம் அந்தக் காலம். ப்லேர்ட்டிங் என்பது 'தனது எதிர்ப்பாலை தன் மீது ஆசை கொள்ள நாம் மேற்கொள்ளும் முயற்சி' என்று விக்கிபீடியா சொல்லுது. எதிர்ப்பால் மட்டுமே என்ற சமாச்சாரம் தற்போது இல்லை என்று ஆர்கியு பண்ணுபவர்கள், அதை 'இன்னொரு நபரை' என்று படிக்கவும்.

சரி மேட்டருக்கு வருவோம். கொஞ்ச நாள் முன்னாடி என் நண்பர்கள் சேந்து பேஸ்புக் பற்றி ஒரு சர்வே பண்ணினாங்க. அதில அவங்க கண்டுபிடிச்ச ஒரு முக்கியமான விஷயம், 'கொழும்பில் இருப்பவர்கள் அப்டேட் செய்யும் ஸ்டேட்டஸ்களில் அதிகமானது லவ் பற்றியது.' இதில் வேடிக்கையான விஷயம் என்னன்னா, நான் அறிந்து, என் நண்பர் வட்டத்தில் பேஸ்புக்கில் அறிமுகமானவர்களை லவ் பண்ணி அதுல சக்சஸ் ஆனவங்க மூணு பேர். இதில இதை நம்பி நேரம் லாஸ் ஆனவர்களில் நானும் ஒருவன். அப்படியானவர்களுக்காய் இந்தப் போஸ்ட் டெடிகேட் செய்யப்படுகிறது...

சபாஹ், ஒரு வழியாய் இன்ட்ரோ முடிச்சாச்சு.

சரி, இப்போ பேஸ்புக் காதல்களின் முதல் ஸ்டேஜ் எப்டி உருவாகுதுன்னு பார்ப்போம். முதலாவது நீங்க என்ன பண்ணுவீங்கன்னா, நல்ல நல்ல அழகான ப்ரோபைல் பிக்சர் உள்ள பொண்ணுங்க அல்லது பசங்களா பார்த்து அட் பண்ணிக்குவீங்க. இதுல அவங்க 'இன்ஃபோ' பகுதியில் அவங்களை பத்தி எழுதியிருக்கும் 'ஊரான் வீட்டு வசனங்கள்/மேற்கோள்கள்' அல்லது 'நான் இப்பிடித்தான், உனக்கு பிடிச்சிருந்தா இரி இல்லாட்டி கண்ண மூடிட்டு போய்க்கின்னே இரு' என்கிற மாதிரியாக அவர்கள் போட்டுவைத்த எழுத்துக்கள் ஈர்க்கும். ஆஹா, சூப்பரா இருக்குதே இவன்/இவள் கேரக்டர்னு நெனச்சி 'அட் அஸ் எ ப்ரெண்ட்' பட்டனை தட்டி விடுவீங்க. கொஞ்ச நேரத்துல, 'அக்செப்டட்'னு ஒரு நாட்டிபிகேஷன் வந்த உடனேயே மனசுகுள்ள ஒரு சின்ன வித்து விழுந்து முளைச்சு சின்னதா ஒரு இலை விடும்.

--டு பி கன்டிநியூட்--