Sunday, 31 October 2010

பேஸ்புக்கும் காதல்களும் - 2

ஓகே... இலை வந்திடுச்சு. இங்கேதான் நமது கடலை (ப்ளேர்ட்டிங்) போடும் திறமை கை கொடுக்கும். அடிக்கடி அவங்க ப்ரோபைலை விசிட் அடிப்போம். நிஜத்திலே காதலி வீட்டை சுத்தி சுத்தி வாற மாதிரி. ஆனா, பேஸ்புக்ல இப்பிடி எல்லா பொண்ணுங்க அல்லது பசங்க ப்ரோபைல்ஸையும் நோட்டம விடுவோம். ஏதாவது ஒண்ணு மாட்டும் என்கிற நம்பிக்கைல. ப்ளேர்ட்டிங்னாலே, நீதி நேர்மை தர்மம் எல்லாம் இருக்கக் கூடாதுன்னு ஒரு ரூல் இருக்கு. ஸோ, சில பேர் எப்டியோ பொண்ணுங்க/பசங்க மனசுல இடம் பிடிக்கணும் என்கிறத மட்டுமோ முதல் நோக்கமா வைப்பாங்க. அதுக்காக சிஸ்டர்/பிரதர் என்று கூப்பிட கூட தயங்கமாட்டாங்க. அப்பால அந்த ரிலேஷன்ஷிப்பை பெயர் மாத்திக்கலாம் என்கிற ஒரு தொலை நோக்குப் பார்வை அவங்ககிட்ட இருக்கும். இவங்க ஜெகஜாலக் கில்லாடிங்க. ஏன்னா நிஜமா ஒரு பொண்ண மட்டும் ட்ரை பண்றவந்தான் காலம் பூரா உண்மையா இருப்பான் என்கிறது எழுதப்படாத விதி. ஒரு படத்துல விஷால் சொல்வாரு, "வேலைக்குப் போகணும்னா ரெண்டு மூணு இடத்துல அப்ளிகேஷன் போடறதில்ல? அது மாதிரி நானும் ரெண்டு மூணு பேருக்கு போட்டு ஒருத்திய வாழ்க்கைத் துனையாக்கிக்குவேன்." இது எவ்ளோ லூசுத்தனமான ஒரு பாயின்ட். அப்ளிகேஷன் போடறதுன்னா, இங்க பொண்ணுங்ககிட்ட ப்ரொபோஸ் பண்றதுதான் வரும். பொண்ணுங்க ஓகே சொல்லிட்டா அவரு வேலைக்கு போறாருன்னு அர்த்தம். ஸோ அவரு அதுல ஒரு பொண்ணைத்தான் லவ் பண்ணியிருக்கணும். ஒரே டைம்ல ரெண்டு மூணு வேலைக்கு போறதில்லையே. ஆனா, அப்பிடி போகணும்னு ஆசைப் பட்டீங்கன்னா நீங்கதான் ப்ளேர்ட்டர்.

சரி, இப்போ அந்த பொண்ண மடக்கணும்னு ஆசைப்படுவீங்க. ஒரு பர்சனல் மெசேஜ் தட்டி விடுவீங்க, "ஹை, யு லுக்கிங் ஸோ பியூட்டிபுல் இன் யுவர் ப்ரோபைல் பிக்சர் யார். அண்ட் ஐ காட் டு நோ யுவர் கேரக்டர் ப்ரோம் யுவர் இன்போ. ஐ லைக் இட் வெரி மச் மா". கொஞ்ச நாளைக்கு மெசேஜ் நாட்டிபிகேஷன் "1" என்று ரெட் கலர்ல ப்ளின்க் பண்ணாதானு ஏங்கும். அவ என்ன போஸ்ட் அவ வால்ல ஷேயார் பண்ணினாலும் அதை போய் லைக் பண்ணி, "ஒவ்ஸம்"னு அடிச்சி வைப்பீங்க. கருமாந்திரம் புடிச்ச யூடியூப் வீடியோ போட்டாலும் அதே மாதிரியே. அவகிட்ட இருந்து ரிப்ளை வரும். இப்போ உங்க கடலை பிசினஸ் ஸ்டார்ட் ஆகும். ரொம்ப பொறுமைசாலி சார் நீங்க. சாவகாசமா பதில் அனுப்புவீங்க. குடும்பம், பேமிலி, அம்மா அப்பா இப்பிடி ஒரே மேட்டர வேற வேற மாதிரி கேள்வி கேட்டு குட்டைய குழப்புவிங்க. அவங்க போட்டோஸ் கேப்பீங்க.

"எனக்கு மட்டும் பெர்சனலா பார்க்க கூடிய மாதிரி ஒரு பிக் அனுப்பேன், ப்ளீஸ்."
"வாட்? வாட் டு யூ மீன்?"
"நோ நோ, நான் அப்பிடி சொல்லல, உன் அழகை நாள் புல்லா பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு"
"உன் முகம் அழகா இருக்கற போட்டோ ஒண்ணு எனக்கு வேணும்னு தோணுது."
"அப்போ மத்த போடோஸ்ல நான் அழகாய் இல்லியா?"
"ஐயோ நான் அப்பிடி சொல்லலமா. நீ எப்பவுமே அழகு. உன் முகம் ஒவ்வொரு கோணத்தில இருந்து பார்க்கும் போதும் ஒரு வித்தியாசமான அழகு. உனக்கு, நீ வச்சிருக்கற பிக்சர்ஸ்ல எது பெஸ்ட்னு தோணுதோ அத எனக்கு அனுப்பேன் ப்ளீஸ். முடியாதுன்னு மட்டும் சொல்லாத"
"ஓகே, ட்ரை பண்றேன்"
"ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்"
"ஓகே ஓகே வழியாத"
"தேங்க்ஸ்டி, ம்வாஹ்ஸ் (கிஸ் பண்ற சவுண்ட்)"

உங்க மனசு பத்திக்கும். உள்ளுக்குள்ள இருந்து சவுண்ட் போடும். "வாவ், நீ கேட்ட உடனேயே அனுப்பறாளே, அப்போ இது அதுதானா?." நீங்களும் 'எஸ் எஸ்'னு வாரணம் ஆயிரத்துல சமீராரெட்டிய சூர்யா கண்ட உடனே சூர்யா நெஞ்சை தட்டிக் கொடுப்பது போலே பண்ணிக்குவீங்க. மனசு பறந்து போகும்.

இப்போ உங்க சைட்ல ரெண்டு பாயின்ட் ஒப் வியூ...
1. நீங்க நிஜமாவே லவ் பண்றீங்க, உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாரிடமும் இவா பத்தி சொல்விங்க. செம ஹப்பியா அவ பத்தி பேசிட்டே இருப்பீங்க.
2. நீங்க ப்ளேர்ட் பண்றீங்க, உங்க ப்ரெண்ட்ஸ்ட "மச்சான் புதுசா ஒண்ணு சிக்கிடிச்சு"னு சொல்வீங்க. எல்லார்ட்டயும் அவ ப்ரோபைல் நேம் குடுத்து அட் பண்ணிக்க சொல்வீங்க. அல்லது, உங்க ப்ரெண்ட்ஸ் யாருக்கும் இந்த மேட்டர் சுத்தமா தெரியாத மாதிரி பார்த்துக்குவீங்க.

எதிர் சைட்ல ரெண்டு பாயின்ட் ஒப் வியூ...
1. மேலே சொன்ன ரெண்டும் ப்ளஸ் அவங்க எல்லார்க்கும் கேட்ட உடனேயே போட்டோ அனுப்பற ஒரு கேரக்டர்.
2. அவங்களுக்கு நீங்கதான் பேஸ்புக் மூலமா கிடைச்ச எப்போதும் டச்ல இருக்கும் முதல் ப்ரெண்ட்.


--டு பி கன்டிநியூட்--