Friday 6 January 2012

சிதாரா

சில பெயருக்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் தெரியாமலேயே அதைக் கேட்டவுடனேயே, "அழகு" என்றுதான் இருக்க வேண்டும் என அடித்துக் கூறும் நாமங்களின் பட்டியலில் முதலிடத்தில் இந்த 'சிதாரா' இருந்து தொலைத்திருக்க வேண்டும். பேஸ்புக்கில் தொடக்கி ஸ்கைப்பில் கண்டினியூ ஆகும் நவீன காலக் காதல் காம லீலைகளில் ஒரு வர்க்கம் தேக்கி நிக்க, மற்றப் பிரிவு கடிதங்களில் இருந்து செல்போனுக்கு ட்ரான்ஸ்பர் வாங்கி இருந்தது. இந்தப் பிரிவில் வந்தவன்தான் 'அலன்'. தன் மொபைல் நம்பரில் ஒன்று இரண்டை மாற்றி வரும் நம்பருக்கு டயல் செய்யும் வித்தை தொடங்கி வீறாப்பாய் நடை போட்ட சமயம் அலன்னின் கோல்'இற்கு மறுமுனையில் ஆன்சர் செய்தவள் சிதாரா. ட்ரான்ஸ்பர் வாங்கிய பிரிவைச் சேர்ந்த மற்றொரு ஜென்மம்.

நான் அங்கிளை மீட் பண்ண சென்றிருந்தேன்.
"எக்ஸ்கியூஸ் மீ, டாக்டர் நம்பிராஜன்னை பார்க்கணும்"
"இப்போ பேஷன்ட் வியூவிங் டைம் இல்லியே. ஈவினிங் பைவ்'கு அப்றோம் வாங்க. இப்போ அவர் முக்கியமான ஒரு வேலையா இருக்கார்"
"இல்ல, அவர்தான் கோல் பண்ணி வர சொல்லி இருந்தார்."
பேரை சொன்னேன்.
"ஆ, ஐயாம் சாரி. யு கேன் கோ இன்" என்றாள் அந்த அழகுப் பதுமை. வயது ஒரு இருபத்தைந்து இருக்க வேண்டும். எனக்கு அப்போதுதான் இருபத்திரண்டு எட்டி இருந்தது. இருந்தாலும் அவளை அக்கா முறையில் வைத்துப் பார்க்க 'அன்ட்ரோஜென்ஸ்' இடம் கொடுக்கவே இல்லை. உள்ளை நுழைந்தேன். என்னை உள்ளே விட்டு மூடிக்கொண்ட கதவில், டாக்டர் நம்பிராஜன், சீப் டாக்டர் என்றும் இன்னு பிற அவரது ஸ்பெஷல் படிப்புகளுக்கு ஏதுவான எழுத்துக்களும் இருந்தது.

அலன்னின் செல் பேச்சுகள் சிதாராவுடன் தொடர்ந்த வண்ணமே இருந்தன. "ஹேய், எப்டி இருக்கே"வில் தொடங்கி, காலையில் என்ன டூத்பேஸ்ட், சாப்பாட்டிற்கு என்ன கறி என்று போய் "அப்றோம், ஏதாவது சொல்லேன்" என்பதில் வந்து முடியத்தொடங்கின. "இல்ல நீயே சொல்லு" என்று சொல்லுவாள் அவள். சொல்லுவதற்கு எதுவுமே இல்லாமல் இருந்தாலும் அவளது குரலில் வோட்கா ஊற்றுவது போல் புலம்பித் தீர்ப்பான் அவன். கிரிக்கட் விளையாடிக் கொண்டிருக்கும் போது ரிங்-கட்ஸ் வந்தால் பாதி ஆட்டத்திலேயே நழுவி விடுவதாலும், நைட் அவுட் என்று போய் கூட்டத்தோடு சேராமல் பால்கனியில் போய் இருந்து கொண்டு செல்லை காதில வைத்து வானத்தைப் பார்த்து சிரித்து சிரித்து பேசுவதாலும், கோல் எடுக்கும் போது எல்லாம் 'வெயிட்டிங்' விழுவதாலும் மட்டும் ப்ரெண்ட்ஸ்'கு அலன்னின் மீது சந்தேகம் அதிகரித்து விடவில்லை. புதுசு புதுசாக சிம் வாங்கி எந்த பேக்கேஜ் சீப்பானது என்று ரிசேர்ச் செய்கிறேன் என்று அவர்களிடத்தில் அவன் சொன்ன போதும் சேர்த்துத்தான் வந்தது.

"வா முறு, ஹவ் ஆர் யூ? ஐ தின்க் திஸ்இஸ் த பர்ஸ்ட் டைம் யூ ஆர் கமிங் ஹியர் ரைட்?" என்றார் நம்பிராஜன். டாக்டர். என் பேமிலி பிரண்ட். அப்பாவின் நெருங்கிய நண்பர். "யாஹ் அங்கிள். நோர்மல்லி ஐ யூஸ்ட் டு கம் டு யுவ கிளினிக் ஒன்லி நா. ஐ'யாம் நியூ ஹியர், அஸ் யூ செட்" என்று சொல்லி வைத்தேன். நான் அவரை சந்திக்க வந்திருந்தது "ஜெனரல் ஹாஸ்பிட்டல்"க்கு. "சோ, யூ குட் ஹேவ் கெஸ்ட் தட் தேயார் இஸ் சம்திங் இம்போர்டன்ட் எஹ்" என்றார். ஆமாம் என்கிற மாதிரி தலையாட்டினேன். "அக்சுவல்லி இட் இஸ் ரைட். அன் இம்போர்டன்ட் மேட்டர்." என்றபடியே ரோலிங் ச்செயார்'இல் இருந்து எழுந்து கொண்டார்.

சிதாரா அவளது போட்டோ அனுப்பி இருந்தால். நண்பர்கள் எல்லாரும் வாய் திறந்தார்கள். நிஜமாவே கொள்ளை அழகு அவள். ப்ரெண்ட்ஸ்'இல் ஒருத்தன் ஆரம்பித்தான், "மச்சான் நான் இவளை எங்கோ பாத்திருக்கேன்டா". அலன் சொன்னான், "ச்சான்சே இல்ல. இவள் நம்ம ஊரே இல்ல".
"மச்சான் இன்னொரு தரம் காட்டுடா."
"செம்மயா இருக்காடா"
"எப்டிடா புடிச்சே?"
புகழாரங்கள் அவனைத் தூக்கி செங்குத்தாய் கீழே இறங்கும் ஒரு மலையின் விளிம்பில் கொண்டு போய் நிப்பாட்டி விட்டன. சத்தம் போட்டு கத்துவதை மனசுக்குள் நினைத்துக் கொண்டான். தான் 'சிதாராவை' பிடித்த கதையை சொன்னான். எல்லா ப்ரெண்ட்ஸ்'உம் செல்லை எடுத்து புதுப் புது நம்பர் டயல் செய்யத் தொடங்கினார்கள். "ஹலோ" என்று சொன்னவை பெரும்பாலும் ஆண்களாகவே இருந்தார்கள். மீதி சுவிட்ச்ட் ஆப்'இல் இருந்தது.

"அப்டி என்ன அவசரம் அங்கிள்?"
"என்னோட கொஞ்சம் வாறியா? ஐ நீட் டு ஷோ யூ சம்திங்" என்றபடி வெளியே போனார். மனசில் பல விஷயங்கள் ஓடத்தொடங்கின. அப்படி எதைக் காட்டப் போகிறார் என்பதை முன்னாடியே ப்ரடிக்ட் பண்ண ட்ரை பண்ணினேன். கொரிடோரில் அவர் பின்னால் நடந்து போனேன். "அப்றோம் சும்மா ஏதாவது சொல்லேன்" என்றார் என்னைப் பார்த்து. எங்கேயோ எனக்கு 'கிளிக்' என்ற சத்தம் கேட்டது. "வாட்? அங்கிள்?"என்றேன். "சும்மா நடக்காமல் ஏதாவது பேச சொன்னேன். சோ, ஹவ் இஸ் யுவர் ஸ்டடீஸ்?" என்றார். டிப்பிகல் அங்கிள்'ஸ் கேள்வி. "கோயிங் ஓன்" என்றேன். டிப்பிக்கல் ஸ்டூடண்ட்'ஸ் பதில்.

அலன் கொஞ்சம் மூட் அவுட் ஆகத் தொடங்கி இருந்தான். அடிக்கடி கோபம் வந்தது. ப்ரெண்ட்ஸ்'இடத்தில் எரிந்து எரிந்து விழுந்தான். நைட் அவுட்டுகளில் நண்பர்கள் அவன் சிதாராவுடன் சண்டை போடுவதை ஒட்டுக் கேக்கத் தொடங்கினார்கள். டீ.வீ.யில் பார்ப்பதற்கு யாருமேயில்லாமல் செக்ஸ் படம் ஒடி முடிந்தது. சிகரட் பிடித்தான். அதிகமாய் பிடித்தான். குடித்தான். கெட்ட வார்த்தை ரொம்ப யூஸ் பண்ணினான். அவளும், சரி சமமாய் சண்டை போட்டால். "நீ என் ப்ரெண்ட் தானே, எதுக்கு இவ்ளோ ரைட்ஸ் எடுத்துக்கறே" எட்ன்று எஸ்.எம்.எஸ் பண்ணினாள். "நான் உன்ன லவ் பன்றேண்டி" என்று ரிப்ளை பண்ணினான். "ஆரம்பத்துல நாம எப்டி பேசிக்கிட்டோம் என்று ஞாபகம் இருக்கா? எனக்கு வீட்ல ஏற்கனவே ப்ரோபோஸ் பண்ணியாச்சு என்று சொல்லி இருக்கேன்ல" என்று அவள் அனுப்பினாள். கையில் இருந்த கிளாசை தூக்கி எறிந்தான். அது நிலத்தில் பட்டு ஜம்ப் பண்ணி இரண்டாவது தரம் நிலத் தொடுகையுறும் கணத்தில் வெடித்துச் சிதறியது. அவள் வேறு ஒருத்தனுடனும் போனில் பேசுவதாய் ப்ரெண்ட்ஸ்'இடம் சொல்லி அழுதான்.
வலிக்குதுடா என்றான்.

"கம் இன்" என்றார்.
என்ட்ரன்ஸ்'இல் "மோர்க்" என்று ஒரு போர்டு தொங்கியது. ஏதோ வில்லங்கம் இருப்பதை அந்த போர்டு அன்டர்லைன் பண்ணிக் காட்டியது. பின்னால் போனேன். கொஞ்சம் உள்ளே போனோம். "பிண நாற்றம் அடிக்குது" என்ற வரி அச்சு அசலாக பொருந்தும் இடத்தில் இருந்தோம். மூக்கை பொத்திக் கொண்டேன். ஒரு ஸ்ட்ரெச்சர்'ஐ இழுத்து வந்தார். "டூ யூ நோ திஸ் கய்?" என்ற படியே துணியை அகற்றிவிட்டார். கொஞ்சம் தூக்கித்தான் போட்டது. முதன் முதலாக எனக்கு ரொம்பத் தெரிந்த ஒரு நபரின் பிணத்தின் பக்கத்திலே நின்றேன்.
"யாஹ்.... அங்கிள்... திஸ் இஸ்.... 'அலன்'..... வாட் த ஹெல்?" என்றேன். வார்த்தைகள் வரவில்லை. உடம்பு விறைத்துக் கொண்டது. அவனை
இப்படி ஒரு கோலத்தில் என்னால் பார்க்க முடியவில்லை. "என்னாச்சு அங்கிள்?"
"சூசைட். விஷத்தை குடிச்சிட்டு கைய அறுத்துக்கிட்டான். நைட் நடந்து இருக்கு. காலைலதான் கண்டு புடிச்சிருக்காங்க. உன் ட்ரைவிங் லைசன்ஸ் இவன் பர்ஸ்ல இருந்துச்சு. சப் இன்ஸ்பெக்டர் மேஜைல இருந்து எடுத்துட்டு வந்தேன். சோ தோட், மஸ்ட் பீ யுவர் ப்ரெண்ட். நீ லஞ்ச்'கு தான் ஊருக்கு வாறேன்னு அம்மா சொன்னாங்க. சோ வர சொல்லி இருந்தேன். க்ளோஸ் ப்ரெண்ட்'ஓ?"
கொஞ்சம் நேரம் பித்துப் பிடித்து நின்றேன்.
"என் ப்ரெண்ட்டோட ப்ரெண்ட். க்ளோஸ் எல்லாம் இல்லை. ஒரு நாள் லைசன்ஸ் வேணும் என்று கேட்டான். குடுத்தேன். அவ்ளோதான்" என்றேன்.
"சரி வா, லெட்ஸ் கோ அவுட். சீம்ஸ் லைக் யூ ஆர் கெட்டிங் நேர்வஸ்" நிஜமாவே என்னமோ பண்ணிக் கொண்டே இருந்தது.

அலன், சிதாரா பத்தி சொல்லிக் கொண்டிருந்த சமயத்திலேயே எனக்கும் அவளுடன் பேச வேண்டும் போலிருந்தது. அவனுக்குத் தெரியாமல் மொபைல்'இல் இருந்து சிதாரா நம்பரை எடுத்துக் கொண்டேன். வீட்டுக்குப் போய், எஸ்.எம்.எஸ் பண்ணினேன்.
"ஹாய்"
ஐந்து செக்கனில் வந்தது ரிப்ளை.
"ஹூ இஸ் திஸ்?"
எஸ்.எம்.எஸ்'ஸில் தொடர்ந்தது அரட்டை ரெண்டு நாள். யாரிடமும் சொல்லக் கூடாது என்று ப்ராமிஸ் வாங்கிக் கொண்டு நான் யார் என்று சொன்னேன். தெரிந்த உடனே, 'அலன்'னிடம் சொல்லப் போறேன் என்றாள். காலில் விழாத குறையாக கெஞ்சி அந்த ஆப்பரேஷன்'ஐ கேன்சல் செய்தேன். "சரி, இனி எதுவுமே மறைக்கக் கூடாது" என்று ப்ராமிஸ் வாங்கிக் கொண்டாள். சிரித்துக் கொண்டேன். அடிக்கடி அவள் போட்டோ எம்.எம்.எஸ். பண்ணினாள். அலன் எப்படி வழிந்தான் என்று சொன்னாள். அவன் போர் என்றாள். வீட்டில் ப்ரோபோஸ் பண்ணி இருப்பதாய் சொன்னாள். "இனியும் புதுசா யாராவது பசங்க கூட பேசுவியா?" என்று கேட்டதற்கு "மாட்டேன்" என்றாள்.

"அங்கிள், ஐ கோ ஹோம். மனசே சரி இல்லை"
"ஓகே, கேரி ஓன்"
வெளியே வந்தேன்.

"ஹாய்'டா ஜஸ்ட் கேம் ஹோம். ஹவ் இஸ் த ஜர்னி. டயர்ட் ஆ?. மிஸ் யூ டா" என்று சிதாரா'விடம் இருந்து எஸ்.எம்.எஸ் வந்தது.