Sunday 25 December 2011

முன்னூற்றி நாற்பத்தொன்பது

ஹேய் நீ...
ஆமா உன்னைத்தான்...
எப்படி இருக்கிறாய்? டூ யூ ரிமேம்பர் மீ? ஹிஹி... அதெப்படி மறந்துவிட முடியும்? நாம்தான் ஒருவரை ஒருவர் லவ் பண்ணித் தொலைத்தோமே. ஹேய் வெயிட். லவ்... பண்ணினோமா? பண்ணினேன். ரைட்? நான் மட்டும்தானே?
நோ... நோ, நோ, நோ...
அதெப்படியோ தெரியல? எல்லாப் பொண்ணுங்களாலயும் எப்பிடித்தான் முடியுதோ? ஒரு விஷயத்தை பண்ணிட்டு அது மாதிரி ஒண்ணு நடந்ததாவே காட்டிக்காம இருக்கறதுக்கு... ரீசனே இல்லாம சண்டை போடுறதுக்கு... நீங்களே தப்பு பண்ணினாலும் எங்களை மன்னிப்பு கேக்க வைப்பதற்கு... புரியல...
பொண்ணுங்க மனசு ஆழம்னு சொல்றது பொய்'னு நெனச்சி இருக்கேன். ஆனா, அன்னிக்கு புரிஞ்சிச்சு. உன் மனசுல நான் இல்லைன்னு நீ தூக்கி எறிஞ்சிட்டு போனப்போ விளங்கிச்சு. பைத்தியம் புடிச்சிச்சு.
உனக்கு ஞாபகம் இருக்கா? உன் கால்ல விழாத குறையாய் கெஞ்சினேன். மே பீ, உன் பிசி வேர்க்ஸ்'ல நீ மறந்திருப்பே. இல்ல, உனக்கு விளங்கியும் விளங்காதமாதிரி இருந்திருப்பே. நோ ப்ராப்ளம். ஆனா... வலிக்குதுடி...
நீங்க எல்லாரும் பெரியவங்கதான். உங்க கால்தூசிக்கு கூட நான் சமமாக மாட்டேன்தான். ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சிக்கோங்க, நீங்க நொந்து போய் இருந்த டைம்ல அட்லீஸ்ட் உங்க கண்ணீரை துடைச்சு வச்சிருக்கேன். ஏதோ என்னால முடிஞ்சது. நீங்க கேக்கலாம், "அதுக்காக லவ் பண்ணனுமா?"எண்டு. வாஸ்தவம்தான், கால்ல போடுற செருப்ப தலைல கிரீடமா வைக்க முடியாதுதான். ஆனா இந்த செருப்புதான் கிரீடத்தை விட பல மோசமான விஷயங்களில் இருந்து உங்களை காப்பாற்றி இருக்கு.
சரி விடுங்க. லவ் பத்தி பேச வந்துட்டு ஏதோ தத்துவம் எல்லாம் பேசிட்டு இருக்கேன். எதிர்த்த வீட்டு மாமி, என் அம்மாட்ட சொல்றாங்க, ஒரு நல்ல சைக்கோ டாக்டரிடம் காட்ட சொல்லி. ஹஹா, சைக்கோ டாக்டர்.
சரி விடுங்க. நான் இதெல்லாம் சொல்லி நீங்க மனசு மாறப் போறதுமில்ல. எனக்கு அது தேவையும் இல்ல.
சரி இந்த லெட்டருக்கு ஏன் "முன்னூற்றி நாற்பத்தொன்பது" என்று பேரு வச்சி இருக்கேன்னு நீங்க கேக்கலாம். பெருசா ஸ்பெஷல் ஒண்ணும் இல்ல. இது ஒரு முதன்மை எண் (ப்ரைம் நம்பர்). மேலும், அடுத்தடுத்து வரும் மூன்று முதன்மை எண்களின் கூட்டுத்தொகையாகவும் வரும் (109 + 113 + 127).


அப்புறம், உன்னைப் பார்த்த முன்னூற்றி நாற்பத்தொன்பதாவது நாள்.

அவ்ளோதான்.


பலன்ஸ் அடுத்த லெட்டர்ல எழுதறேன். 
டேக் கெயார்.
பாய்.