Saturday 22 August 2009

கந்தசாமியும் எனது குற்ற உணர்வும்

ரொம்ப நாளைக்கப்பரம் ஒரு படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணாப்ல...

நானும் என் கிறுக்குப் பய புள்ளைய ரெண்டு பேரும் போனாப்ல... பக்கத்துலேர்ந்த சினிசிடிக்கு... படம் பேரு "கந்தசாமி"... நம்ம விக்ரம் பய புள்ள நடிச்சிரிக்காப்ல... மூணு வருஷமா அப்பிடி என்னதான் எடுத்தாங்களோ தெரியல... எதிர்பார்ப்புகளை எல்லாம் தவிடு பொடி ஆக்கி இருப்பதே அவர்களது சாதனை...

பாடல்கள் முழுக்க காமம் இழையோடியிருக்கிறது. இரட்டை அர்த்தங்கள் வரிகளில். விக்ரம்கு சொந்த வீடு இல்லை போலிருக்கு. அவர் எங்கிருந்து வாரார்னே தெரியல. ஷ்ரேயா தலை முடியை வெட்டி இருப்பதுதான் அவர் நடிப்பிற்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பு. சுசிக்கும் நடிப்பாசை துளிர்விட்டுவிட்டது போல. பிரபு மட்டுமே சற்று மிளிர்கிறார். ஆக கந்தசாமி அதிஷா சொன்னது போல கந்தல்சாமியே...

பெருசா சொல்றதுக்கு இதுல ஒண்ணுமே இல்ல. ஒரே வரியில் சொல்வதானால்...

கந்தசாமி = அந்நியன் + சிவாஜி + சிட்டிசன் + ரமணா

எல்லா மசாலாவும் கலக்கப் போய் ஓவர் டோஸ் ஆகி எமக்கு வயிற்று வலி வந்ததே மிச்சம்...

பி.கு: எனக்கு முன்னாடியே டிக்கட் எடுத்து ஹால் இரண்டில் உள்ள ஷோவை பார்க்காமல் விடுத்து எனாக்காக காத்திருந்து ஹால் மூன்றில் பார்க்க என்னுடன் வந்த என் நண்பனை உள்ளே அனுமதிக்காத சினிசிட்டி காரர்களுக்கு என் குட்டு...

அந்த நண்பன் இற்கு இந்த விமர்சனம் சமர்ப்பணம்...