Sunday 23 August 2009

இலங்கை வலைப் பதிவர் சந்திப்பு - நடந்தது என்ன???

காலை 9 மணிக்குன்னுதான் வந்தியத்தேவரு எனக்கு மின்னஞ்சல் பண்ணியிருந்தாரு. நமக்கும் நேரந்தவராமைக்கும் ரொம்பத்தான்... அப்பிடியே ஒட்டிகிட்டு போகும்... சரியாக 9.37 ஆயிடிச்சு நான் வினோதன் மண்டபத்தை அடைந்த போது...

கேக்கில் பாதி மெழுகுதிரிகள் ஏற்றப் பட்டிருந்தன. வலைப்பூக்களின் 10 ஆவது பிறந்த நாளாம். நல்லா இருங்கப்பா... (நான் அலப்பறை பண்ண ஆரம்பித்து 2 வருடமாகப் போகிறது. ஆனா நான் 2004 இலேயே வலைப்பதிவு பண்ண ஆரம்பித்து விட்டது எத்தனை பேருக்கு தெரியும். எனக்கே ஒரு மாசம் முன்னாடிதான் தெரியும். அந்த ப்ராபைல் இப்போது முடக்கப்பட்டுவிட்டது. அது கூகிள் ப்ளாகரை வாங்க முந்தி உள்ள விஷயம்.)

நான் வர முன்னாடி சுபானு கொஞ்சம் பேசி வலைப்பதிவிடுவது பற்றி விளங்கப்படுத்தினராம் அதுக்கு முன்னாடி நம்ம புல்லட்டு பேசினது நமக்கு பின்னாடிதான் தெரியவந்தது. மிஸ் பண்ணிட்டன் மாப்பு.

அப்பறம் சுமார் எண்பது வலைப்பதிவர்களும் தங்களை அறிமுகம் செய்துகொண்டோம். நம்ம அலப்பறை சில பேருக்கு கேட்டிருந்தது. "அவனா நீ" கணக்காய் முறைத்துக் கொண்டார்கள். எனக்கு பக்கத்தில் தெரு விளக்கு. மாப்ள சந்திப்பு தொடங்கினதிலிருந்தே சிரிச்சிட்டிருந்தாப்ல.

பின்னாடி மருதமூரான் பேசினாப்ல. பார்ட்டி கொஞ்சம் சீரியஸ் டைப் மாப்பு. இலங்கை தமிழ் வலைப்பதிவர் திரட்டி, மட்றும் சகோதர மொழி வலைப்பதிவர் திரட்டி அறிமுகம் சென்ஜாப்ல.

அப்புறம் எழில்வேந்தன் அண்ணா பேசினாரு. அதே அடக்கம், அதே கனிவு. வலைப்பதிவிடலுடனான தனது உறவு பத்தி பேசினாப்ல.

அப்புறம் சேரன் கிருஷ் பேசினாப்ல, வலைப்பதிவு தொழினுட்பம் பத்தி மாப்பு கொஞ்சம் எடுத்து விட்டாப்ல. நம்ம துறைங்கிரதால நானும் கொஞ்சம் நல்லாவே காதைப் போட்டுகிட்டேன்.

அப்பறம் லோஷன் அண்ணா பேசினாப்ல... கொஞ்சம் பல்சுவையும் இருந்தாப்ல.

கலந்துரையாடல் இடம் பெற்றது... இதில் அனைவரும் பல்வேறுபட்ட தலைப்புகளில் பேசிக் கொண்டனர். காரசாரம் செம அதிகம்.

கடைசியா நம்ம வந்தியத்தேவரின் பின்னூட்டம். அவருதான் கிங்குல. கலக்கிடே தலைவா. நமக்கு அலப்பறைனுதாந் பேரு. போனதில இருந்து எதுவுமே பேசாம கம்னு கிடந்திட்டு அப்டியே கப்னு வந்துடம்ல...

பி.கு: புல்லட்டின் அன்னதானம்தான் எங்கேயோ சந்தடி சாக்குல மிஸ் ஆகிட்டு...