Sunday 17 January 2010

யாதுமாகிய நட்பு...

மின்னஞ்சல் ஒன்று கிடைத்தது ஒரு வாரம் முன். நட்பின் பெருமைகளை அளவளாவி இருந்தது அது. அதை வாசித்த போது என்னுள்ளே உதித்தவை...

பொதுவாகவே நட்பைப் பற்றி பெருமையாகவே விஷயங்கள் கூறப்படுவதுண்டு. எனவே நம்பிக்கை துரோகம் என்பது நட்பில் பாரிய ஒரு குற்றமாக கருதப்படுகிறது. அதுலயும் இன்னா மேட்டர்னா சிறந்த நண்பன், சாதா நண்பன்னு 2 பிரிவு வேற வச்சுப்புட்டாங்க. இதாலேயே ப்ரண்ட்ஸ்ஸுகுள்ள செம ப்ராப்ளம் வர ஆரம்பிச்சிச்சு. யாரு எந்த கேட்டகரின்னு பிரிச்சுக்க சண்டை போட்டாங்க. பெஸ்ட் ப்ரண்டா ஒருத்தன்தான் இருக்க முடியும்னு நெனச்சாங்க. அந்த இடத்துக்கு போட்டி அதிகமாச்சு. அதனால யாராளையுமே அந்த இடத்த தக்கவச்சிக்க ஏலாம போச்சு. பெஸ்ட் ப்ரண்டு அந்த இடத்த தக்க வச்சிக்க ஏனையவங்க மேல வீண் பழி போடா ஆரம்பிச்சான். நட்புக்குள்ளே அரசியல் யுக்திகள் வந்திச்சு. சாதா நண்பன் ரொம்ப நல்லவனா வேஷம் போடா ஆரம்பிச்சான். அவன் நெஜமாவே நல்லவனா இருந்தாலும் "ஒருவேள நடிக்கிறானோ" என்று தோண ஆரம்பிச்சது. நட்பு மேல சந்தேகம் வந்திச்சு.

"சாதா நண்பன் அலுமாரியை தூக்க உதவுவான், உயிர் நண்பன் நீ கொலை செய்தால் பிணங்களை கூட தூக்க உதவுவான்" என்றெல்லாம் மேற்கோள்கள் வந்திச்சு. அப்போ கொலை செய்யாதே அது பாவம்னு தடுப்பவன் எந்த பிரிவுன்னு சந்தேகம் வந்திச்சு. ஒரு நண்பன் எப்டி என் கூட இருக்கானோ அப்டித்தான் நான் அவன் கூட இருப்பேன்னு ஒரு முடிவு எடுத்தாங்க. ஒரு பண்ட மாற்று ரேஞ்சுக்கு நட்பு என்னும் உறவு போச்சு. நிலங்களுக்கு நிலம் நட்பின் வரைவிலக்கணம் மாறு பட்டிச்சு. சில இடங்கள்ல நட்பின் விரல் மூக்கு வரைக்கும் தான் வாரலாம்னாங்க, சில இடங்கள்ல நட்பின் கைகள் கழுத்தைப் பிடித்துக் கூட சில விஷயங்கள் சொல்லலாம்னு உரிமை இருந்திச்சு.

இந்த அண்டத்தின் ஏதோ ஒரு மூலைல நட்பின் மூதாதையர் திருப்திப் பட்டுக்கொண்டனர், "ஏதோ நம் பரம்பரை இன்னும் உயிர் வாழ்கிறதே" என்று :)