Wednesday, 20 January 2010

கவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 2)

முதல் பாகம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலில் கல்லா கட்டாமையால் 2 ஆம் பாகத்தை வெளியிடுவதில் சில எக்கனாமிக்கல் ப்ராப்ளம் வந்திடுச்சு. இருந்தாலும் தொடங்கியத முடிக்க வேண்டிய கட்டாயம் ஒன்னு இருக்கே...


சரி, மேட்டருக்கு வருவோம். சென்ற பதிவு பல கேள்விகளுடன் முடித்திருந்தோம். இனி ஒவ்வொண்ணா அலசலாம். பர்ஸ்ட் இன்டெர்நெட்டின் பாதுகாப்பின்மை. இணையத்தில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை, ப்ரைவசி. சரி இதுக்கேன் இவ்ளோ முக்கியத்துவம். ஒருத்தர பத்தி விஷயங்கள தெரிஞ்சிக்கறதுல என்ன தப்பு? இதில் உள்ள பாயிண்ட் என்னவென்றால், ஒருவரைப் பற்றி அவரது அனுமதி இல்லாமல் தெரிந்து கொள்ள இணையத்தில் இலகு வழிகள் இருப்பது... அப்போ நிஜ வாழ்க்கையில்? அது அதை விட இலகு. பட் நாம் ஏன் இணையத்தை மட்டும் சாடுகிறோம்? ஏன் இன்டர்நெட்டை எண்ணி அளவுக்கதிகமாக பயப்படுகின்றோம்? இதற்கு விடை தேடுவது ரொம்பவே கொம்ப்ளிகேட்டட் ஆனா இஷ்யூ. 


இப்போ பார்த்தீங்கன்னா, உங்க தெருவுக்கு புதுசா ஒருத்தர் குடி வார்ரார்னு வச்சிக்குவோம். அல்லது உங்கள பொண்ணு அல்லது மாப்பிள்ளை பார்க்க ஒரு பாமிலி முடிவு பண்ணுதுன்னு வச்சிக்குவோம். உங்க அனுமதி இல்லாம உங்களபத்தி, உங்களுக்கே தெரியாத, உங்க பேங்க் அக்கௌன்ட் டீட்டைல் வரைக்கும் பல விஷயங்கள அவங்க சேகரிக்கிரதுக்கு ஒரு வாரம் போதும். அப்போ இதை நாம் ஏன் பெரிசு படுத்துவதில்லை? இதுவும் ஒரு விதமான ஹாக்கிங் தானே? எப்பவாவது இவர் என்னை லவ் பண்ண முன்னாடி என்னை பற்றிய டீட்டேயில்ஸ் சேகரிச்சார்னு கேஸ் போட்டிருக்கோமா?


இவ்வாறு 2 ஒரே மாதிரியான விஷயங்களுக்கு வெவ்வேறு 2 விதமான கண்ணோட்டங்கள் இருப்பதற்கு காரணம், புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குழப்பம். இன்னிக்கு வரைக்கும் கூட எங்கள் ஊரில் இணையம் ஒரு மோசமான நண்பனாவே கருதப்படுகின்றது. பெண்கள் இணையத்தில் பங்கெடுப்பதை அவர்கள் குடும்பம் விரும்புவதில்லை. எனக்கு இணையம் அறிமுகமாகியது 1999/2000 ஆண்டு காலப் பகுதி. எனது 11 வயதில். அப்போதும் எனது பெற்றோருக்கு இன்டர்நெட் பற்றி ஒரு தப்பான கண்ணோட்டமே இருந்தது. எனினும் நான் ஆசைப்பட்டேன் என்பதற்காக அவ்வசதி ஏற்படுத்தி தரப்பட்டது. இதுவே நான் ஒரு பொண்ணாக இருந்திருந்தால்? பொம்பளப் பிள்ளைக்கு எதுக்கு கம்பியூட்டர் என்று சொல்லி இருந்திருக்கக் கூடும். இவ்வாறு அவர்கள் பயப்பட ஏன் காரணம்? கலாசார சீர்கேடுகள்! அப்போ கலாசாரத்தை பாதுகாக்க ஒரு பெண்ணின் படிக்கும் ஆசையினை விலையாகக் கொடுக்கும் வியாபாரம் நியாயமானதா? இதுவும் குழப்பமான பல விடைகளை தரக் கூடிய ஒரு கேள்வி.


இனி நாம் பரிச்சயப்பட்ட பல தலைப்புகளின் கீழ் எம்மைச் சுற்றியுள்ள "கவனிக்கப்படாத நிஜங்களை" ஆராயலாம்.


1. தயக்கம்:
கம்பஸ்ல இருந்து வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்தேன் சில நாள் முன்னாடி. ஒரு அழகான பொண்ணு அமர்ந்திருந்த சீட்ல பக்கத்துல இருந்த ஒருத்தர் எழும்பி அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போனார். கிடச்சிச்சுடா சாமி (உக்கார ஒரு இடம் - எங்கறத மட்டும் மீன் பண்ணவும், டபிள் மீனிங் வேணாம்) கணக்கா பொய் அமர்ந்து கொண்டேன். அவ்ளோ நேரம் ஐபாட்ல பாட்டு கேட்டிட்டிருந்த அவ முகம் சுர்ருன்னு சுருங்கிப் போச்சு. நான் கொஞ்சம் சுமார் (ஓகே ஓகே ரொம்பவே சுமார்) என்கிறது ஒரு புறம். பட் ஏன் இப்பிடி அவ முகம் சுளிக்கனும்னு யோசிச்சேன். அவ ஒரு ஸ்மைல் பண்ணி இருந்தான்னா எனக்கு அவ கூட ஒரு ஹாய் சொல்றதுல எந்த தயக்கமுமே இருந்திருக்காது. ஆனா அவ இப்பிடி பண்ணதால எனக்கு அது முடியாம போச்சு. புதிய உறவுகளை ஏற்படுத்திக்க மக்கள் ஏன் தயங்கனும். ஏமாத்திடுவாங்கன்னு பயம்??! அவங்க ஏமாத்தற அளவுக்கு நாம ஏன் இடமளிக்கனும். என்னையும் இப்பிடி ரொம்ப பேர் ஏமாத்தி இருக்காங்கதான். இப்பிடி ரெண்டு மூணு தடவை அடி பட்ட போதுதான் எவ்வாறு ஒரு பாதுகாப்பான உறவை ஏற்படுத்தலாம் என்கற யுக்தியை தெரிந்து கொண்டேன். அதில் முதலாவது நீங்கள் நம்ப வேண்டியது மற்றும் உங்களுக்கு நீங்களே சொல்லிக்க வேண்டியது "இவங்க என்னை விட்டுட்டு போறதால நான் கவலைப் பட மாட்டேன்." இது உறவுகள் மீதான நம்பிக்கையை பொய்யாக்குதுன்னு சில பேர் சொன்னாங்க. யு ஜஸ்ட் ட்ரை அண்ட் சி. கடைசியா ஏமாத்தின ஒரு பிரன்ட் சொன்னான் "நண்பர்களை நம்பாதே" :/ நான் சொன்னேன் "நட்பே நம்பிக்கைலதானேடா இருக்கு" உறவு முறைகளின் மீதான பிழையான புரிதலே அவன் இவ்வாறு சொல்லக் காரணம்.  இனி அவனால எப்படி மற்றவங்க கூட ஒரு உண்மையான நண்பனா இருக்க முடியும்? நான் யாரை கண்டாலும் முதல்ல இவங்க கூட எப்டி பிரண்ட் ஆகலாம்னுதான் யோசிப்பேன், பட் ரொம்ப பேரு எப்படி எமாத்தலாம்னு யோசிக்கறாங்க. இவங்க தேவை நிச்சயம் பணமாக இருக்கும். அல்லது இவர்கள் இவ்வாறான விஷயங்களில் சந்தோஷம் காணும் சைக்கோ அல்லது அட்டிக்ட்ஸ் ஆக இருப்பார்கள். பர்ஸ்ட் கட்டக்கரில இருக்கறவங்கள திருத்தறது ஈசி. ஆனா மூனாவது பிரிவைச் சேர்ந்தவங்கள மாத்தறதுதான் ரொம்ப கஷ்டம். இவங்க கேட்டகரி 1 + கேட்டகரி 2 வைச் சேர்ந்தவங்க. இவங்க பாதிப்பு எந்த அளவுக்குன்னா முதலாவதா ஒருத்தர மீட் பண்ணும் போது 'இவன் நம்மள ஏமாத்திடுவானோன்னு' சந்தேகம் வரும் அளவுக்கு நம் மனதை பாழ் படுத்திவிட்டு இருக்கரார்கள். இவ்வாறானவார்களாலேயே மக்கள் புதிய உறவுகளை ஏற்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். எடுத்துக் காட்டு, நான் பஸ்சில் சந்திச்ச அந்த அழகான பெண். இணையத்தில் இதன் விளைவு இதைக்காட்டிலும் 2 மடங்கு...


இன்னும் அலசுவோம்....