Thursday 21 January 2010

கவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 3)

ஒரு மனிதனுக்கு உதவி செய்வதில் தங்கள் மனநிலை என்ன? கஷ்டப்படும் ஒருவருக்கு ஓடிச்சென்று உதவுவபரா? நான் இதில் ஆகவும் கீழ் ரகம். இவருக்கு உதவுதா வேண்டாமா என்று யோசித்தபடியே காலத்தை கடத்திவிடும் கேவலமான ரகம். இதில் என்னை விடவும் தாழ்ந்த பிரிவொன்று உள்ளது. அது இந்த சம்பவங்களை விற்றுக் காசாக்கும் மீடியா ரகம். ஒரு மனிதன் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது அவனுடன் இருந்த கடைசி நண்பன் எடுத்த வீடியோ எதோ காம்பட்டிஷனில் முதல் பரிசு வாங்கிய ஞாபகம்.

2 சந்தேகம்:
நேற்று பஸ்சில் மற்றுமொரு நெடுந்தூரப் பயணம். பாதித் தூரம் கடந்த போது பஸ்ஸில் மூச்சு முட்டிக்கொண்டது. ஆரம்பத்திலேயே நல்ல சீட் கிடைத்த படியால் எந்த தொந்திரவும் இருக்கவில்லை. ஒரு 3 அல்லது 4 சீட்களுக்கு முன்னாடி ஒரு வயதான பெண்மணி (அபௌட் 45 இருக்கும்) நின்று கொண்டிருந்தார். என் அம்மாவை ஒத்த தோற்றம். சற்றுப் பெருத்த உடம்பு. நிற்கக் கஷ்டப் படுவதான தோற்றம். ஆனா பஸ்ஸில் அசையக் கூட முடியாத நிலை. அவங்க கூட வந்த சின்னப் பொண்ணுக்கு எப்படியோ சீட் கிடைத்துக் கொண்டது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த என் மைன்ட் தாறுமாறா யோசிக்கத் தொடங்கியது.
யோசனை 1: நான் எழும்பி இடம் கொடுத்தால் என்ன?
யோசனை 2: இதையே அந்தச் சின்னப் பெண் செய்தால் என்ன?
யோசனை 2 என் மனதில் வரக் காரணம், நான் இதை நினைக்கும் போது நான் பயணம் போய்க் கொண்டிருக்கும் தூரத்தை எண்ணிப் பார்த்தது.
யோசனை 3: நான் எழும்பி இடம் கொடுக்க முற்படுகையில் என் ஆசனத்துக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் நபர் இருந்து விட்டால்? முன் பின் அசைவது போலவும் எழும்ப முயற்சிப்பது போலவும் சில சீன்கள் போட்டுப் பார்த்தேன். நபர் என் இடத்தை கைப் பற்ற தயார் ஆவது தெரிந்தது.
யோசனை 4: இதேமாதிரி அப் பெண்மணியின் இடத்தில் என் அம்மா இருந்திருந்தால்??? அம்மா பஸ்சில் பயணிப்பதில்லை என்று அதற்கு மறுமொழியும் கிட்டியது.
யோசனை 5: அப் பெண்ணிற்குப் பக்கத்தில் இருந்தவர் எழும்பி இடம் தராதது ஏன்?
யோசனை 6: இவரைப் பார்க்காதது போல் முகத்தை திருப்பி வைத்துக் கொண்டால் என்ன?

இவ்வாறு பல விஷயங்களை யோசித்ததில் எனது டெஸ்டிநேஷனை சென்றடைந்து விட்டிருந்தேன். அப்போதும் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தார்.

என்னால் அவருக்கு இடம் கொடுத்திருக்கக் கூடியது அப்படி ஒன்றும் கஷ்டமான காரியமில்லை. உக்கார முயற்சி பண்ணிய பக்கத்து நபரை ஒரு வாய்ப் பேச்சில் தடுத்து அவருக்கு புரிய வைத்திருக்க முடியும். இந்தப் பெண்மணியை கூப்பிட்டு இவ்விடத்தில் அமரச் செய்திருக்க முடியும்.இவையெல்லாம் நான் செய்யாததற்கு காரணம் என்ன? ஒரே பதில், சந்தேகம். அது என் மீதோ, அந்தப் பெண்மணி மீதோ, பக்கத்தில் நின்ற நபர் மீதானதாகக் கூட இருக்கலாம். உதவி செய்வதன்று புறப்பட்ட பின் உதவி பெறுபவரின் காரக்டர் பத்தி சந்தேகப் பட்டுக் கொண்டிருப்பது, உங்களை அந்த உதவி செய்தலிலிருந்து தடுத்து விடும். இந்த ஹெல்ப் இவருக்கு பிரயோசனமா என்று யோசியுங்கள், ஆம் என்றால் உதவி செய்திடுங்கள். அப்பால நடக்கிறது எல்லாத்தையும் மெயின்டெய்ன் பண்ண மேல ஒருத்தரு இருக்காரு.

நான் பஸ்ஸை விட்டு இறங்கினேன், மனது கனத்திருந்தது...

அலசல் தொடரும்...