Thursday 1 December 2011

அன்டைட்டில்ட் 2

புரட்சி, அது இதுன்னு எழுத எல்லாம், ஐ ஜஸ்ட் டோன்ட் நோ. கவிதைத்தனமாய் ஒரு ஹெடிங் வச்சிட்டு எதைப் பத்தி எழுதலாம்னு யோசிக்கிற கூட்டத்தில லைப் டைம் மெம்பர்ஷிப் வாங்கி வச்சிண்டு இருக்கேன்...

லாஸ்ட் போஸ்ட்டை பத்தி பெர்சனல்'ஆ ஒரு கமன்ட் வந்திச்சு, 'வேஸ்ட் ஆப் டைம்'னு. எதைப் பத்தி எழுதறதுன்னு ஒரு வரையறை இருக்கா? தெரில. ஆனா, எல்லாத்தையும் எழுதிட முடியாதுதான். பார் எக்ஸாம்பிள், என் ப்ரெண்ட் ஒருத்தன் சொன்னான், 'எல்லார்க்கும் ப்ரைவேட் பார்ட்ஸ் இருக்கு. உனக்கு என்ன இருக்கும்னு எனக்கு தெரியும். எனக்கு என்ன இருக்குன்னு உனக்குத் தெரியும். அதுக்காக உன் முன்னாடி நான் எதுவுமே போடாம வந்து நிக்க முடியுமா?'. அதே மாதிரிதான் ஒரு தகவலை பரிமாற்றம் செய்தலும். எல்லாத்தையும் வெளிப்படையா சொல்லிட முடியாது. இதுல கல்ச்சர், ஜியாக்கிரபிக்கல் லொக்கேஷன் என்று நிறைய விஷயம் செல்வாக்கு செலுத்துது. ஒரு நிர்வாண தேசம் ஒண்ணு இருக்குன்னு வச்சிக்குவோம். அங்க நீங்க ட்ரெஸ் போட்டு நின்னா அவங்க கேவலமா பாப்பாங்க. அப்போ ஒரு தகவலை எப்டி சொல்றது. நீங்க உங்க பக்கம் இருக்கற நியாயத்தை எடுத்து சொல்லணும்ல. அதுக்கு உங்க மனசு ஸ்ட்ராங்'ஆ இருக்கணும். நிர்வாண தேசத்துல இருக்கற ஒரு பிகர் உங்கள உத்துப் பாத்திச்சுன்னா போதும். உங்க கேம் ஓவர். நான் முதல்லேயே சொன்ன மாதிரி எல்லா விஷயத்தையும் தெளிவா சொல்ல முடியாது. நீங்கதான் நான் என்ன சொல்ல வாறேன்னு புரிஞ்சுக்கணும்.

ரெண்டு மூணு நண்பர்களோட பழைய கதைகள் வாசிச்சேன். தமிழ்ல இருக்கற ரொம்ப கஷ்டமான வேர்ட்ஸ் யூஸ் பண்ணி எழுதுவாங்க. மார்க்கெட்டுக்கு மீன் வாங்க போன இன்ஸிடென்ட்டையே நாலு தாள்ல எழுதுவாங்க. 'அதி கதைகள்' அதுக்கு ஒரு பேரு இருக்கு. வாசிக்க சந்தர்ப்பம் கிடச்சிச்சுன்னா ஒரு ட்ரை பண்ணிப் பாருங்க. இப்படியான கதைகள் எழுதுறதுல என்ன நன்மைன்னா, ரைட்டர் / ஆத்தர்'கு டபிள் சேல். அப்பிடி ஒரு கதைய எழுதிட்டு, அதுக்கு ஒரு விளக்கப் புத்தகமும் எழுதி வெளியிடலாம். இல்லன்னா, அவரு கொஞ்சம் பெருந்தன்மை கொண்ட மனுஷர்னா, மத்த ரைட்டர்ஸ்'ஐ அதுக்கு விளக்கம் புத்தகம் எழுத சொல்லி சொல்லலாம். சோ, அவரால இன்னும் ஒரு நாலு அஞ்சு பேரு வாழ்வாங்க. பெருமையா, எழுத்தாளர் மாநாட்டுல இதெல்லாம் சொல்லிக் காட்டலாம்.

மார்க் ட்வைன்இன் 176ஆவது பிறந்த நாளிற்கு கூகுள் டூடில் ஒன்று வந்திச்சு. மார்க் ட்வைன் பற்றி பெருசா எனக்கு எதுவும் தெரியாது. ஒரு எழுத்தாளர் மற்றும் காமெடியா கருத்து சொன்னவர்னு மட்டும் தெரியும். ஹிஸ்டரி பத்தி பெரிசா ஐடியா இல்ல. சுய முன்னேற்றப் புத்தகங்களில் அவர் பத்திய சம்பவம்கள் அவ்வப்போது வரும். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். ஓ'சம் னு சொல்ற அளவுக்கு செமயா பொளந்து கட்டியிருப்பார் மனுஷன். அவரது 'மேற்கோள்கள்' இப்பவும் சூப்பர்ப்'ஆ இருக்கும். 'மார்க் ட்வைன் கு'ஓட்ஸ்' னு தேடி பாருங்க. பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டு செம லைக்ஸ் அள்ளலாம்.

அப்றோம் காபி. உலகத்துல எனக்கு ரொம்பவும் புடிச்ச ஒரு குடிபானம். பானம்'னு சொன்னாலே அது குடிக்கிற ஒரு விஷயம் தானே? அப்றோம் எதுக்கு குடிபானம்'னு ஒரு பேரு எங்கிறதப் பத்தி வெட்டி விவாதம் இப்போ தேவையில்லை. நான் எப்பவும் சொல்ற மாதிரி, மழைக்கும் காப்பிக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் ஒண்ணு இருக்கு. கூடவே ஜன்னலையும் சேர்த்துக் கொள்வோம்.மழை நேரங்களில் குடிக்கப்படும் காப்பியில் இருக்கும் சுவை வர்ணிக்கவே முடியாதது. அதிலும் அதனுடன் பால் சேர்த்துக் குடிக்கும் போறது இன்னும் இதம். இங்க்லீஷ் படங்கள்ல பாத்தீங்கன்னா அமெரிக்கன்ஸ் பொதுவாவே காப்பியை ப்ளைன் ஆக, அதாவது ஜஸ்ட் ப்ளாக் காப்பியாக, குடிக்கவே விரும்புவார்கள். காப்பியுடன் பாலை கலந்தால், காப்பியின் மருத்துவக் குணத்தை பால் முறித்து விடுவதாக டாக்டர்ஸ் சொல்றாங்க. இது டீக்கும் பொருந்தும்.
உலகத்திலேயே விலை கூடின காப்பி பத்தி படிச்சேன். வழக்கம் போல ஒரு நண்பன் அதைப் பத்தி சொன்னான். விக்கிபீடியால மிச்சத்தை தெரிஞ்சு கொண்டோம். அந்தக் காப்பியை, 'கோபி லுவாக்' என்கிறார்கள். ஆக்சுவல்லி ப்ராப்ளம் என்னன்னா, இது 'காப்பி பெர்ரி' கொட்டைகளை தின்று விட்டு 'ஆசிய மர நாய்' எனப்படும் ஒரு பூனை(?!!!), கண்பீஸ் ஆனவர்கள் இத்தோடு நிறுத்திக்கவும், போடும் மலக் கழிவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஊட்டச் சத்துகள் அதிகமாக இருப்பது இதன் விலைக்கு ஒரு காரணம். இனி காப்பி குடிப்பவர்கள் அது, 'கோபி லுவாக்' இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். இந்தக் காப்பி அதிகமாக 'கிழக்கு ஆசிய' நாடுகளிலேயே தயாரிக்கப்படுவது எனக்கு ஒரு புது சேதியாக இருந்தது. சாதாரணமாக ஒரு கிலோ 600 யூ.எஸ். டாலர் வரை இருக்கிறது. அதிக பட்சமாக ஒரு கட்டத்தில் 6000 டாலர் விளையும் சென்று இருக்கிறது. ஒரு கப் 'கோபி லுவாக்' ஒரு 30-50 டாலர் வரை இருக்கக் கூடும். 'ஓசில கிடச்சா எத வேணும்நாலும் திம்பியா' என்பதை 'காசு இருந்தா எத வேணும்னாலும் திம்பியா' என்றும் இப்போது வைத்துக் கொள்ளலாம்.

ஒரு வருஷம் என்றாலும் மினக்கட்டு காசு சேர்த்தேனும் ஒரு தடவையாவது ஒரு கப், 'கோபி லுவாக்' குடித்து விடுவது என்று முடிவு கட்டியிருக்கிறேன்.