Sunday 18 December 2011

மொக்கையாய் ஒரு காதல் கவிதை

நீ உதிர்த்த புன்னகைகள்
பனித்துளிகளாய்
மனதை செய்திடும் ஈரம்
உன் பார்வைகள்
மின்னலென பாய்ந்து
குத்திக் கிழித்திடும்

கிழிக்கப்பட்ட மனதின்
சுவர்களின் வழியே
வண்ணமயமாய் பறந்து
என் முகம் மொய்க்கும்
பட்டாம் பூச்சிகள்

என் முகம் பார்த்து சிரித்து
பின் வான் பார்த்து
நீ கண் சிமிட்டும்
கணத்தில் வந்துவிடுகிறது மழை.

உன் அருகில்
வரும் செக்கனில்
எகிறுது ஹார்ட்பீட்,
கையும் களவுமாய்
பிடிபட்டாற் போல்
வியர்க்குது குப்பென.

கஞ்சா அடிக்காமலேயே
வானில் பறக்கிறேன்
உன் ஞாபகம் வருகையிலே.
தண்ணி தெளிக்காமலே
மப்பு கலைகிறது
உனை நினைக்க மறக்கையிலே

என்னோடு நீ பேசும்
ஒவ்வொரு நிமிடமும்
டீயில் தோய்த்து எடுத்த
பிஸ்கட் போல்
இளகுது நெஞ்சம்

உன்னைப் பற்றி
நான் எழுதும் கவிதை
படித்த அம்மா
மெண்டல் ஆஸ்பத்திரிக்கு
போடுகிறார் கால் மேல் கால்...