Sunday, 21 March 2010

லக்கிலூக்கும் ஏழு பேரும்

உலகத்துல ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்களாம், பக்கத்து வீட்டுப் பங்கஜம் மாமி வாய் கூசாம நல்லாவே போய் சொல்லுவா.ஸோ அத நான் நம்பல்ல. அப்புறம் அம்மா சொல்லும் போது லைட்டா டவுட் வந்திச்சு. அப்புறம் இதே விஷயத்தை நண்பன், சினிமா மற்றும் அரசியல்வாதி கூட்டங்களில் என இதர பதர ஏழு சந்தர்ப்பங்களில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எல்லாம் கேள்விப்படும்போது உண்மைதானோ என்று மனச்சாட்சி கதவைத் திறந்தது.

ஒரு பக்கம் நீதி நேர்மை அப்பிடின்னுட்டு மனச்சாட்சி டாச்சர் பண்ண, இன்னொரு பக்கம் "லூசாடா உனக்கு, எதையும் ரிஸர்ச் பண்ணாம டோன்ட் கம் டூ எ டிசிஷன்" அப்பிடின்னு பகுத்தறிவு இன் கார்ப்பரேஷன் வித் மூளை சகிதம் கன்னத்தில் அறைய இடையில் உடம்பு சூடாகிக் போய் "போங்கடா நீங்களும் உங்க சண்டையும்" என்று ஜுரம்/காய்ச்சல் என்ற பெயரில் படுத்துக் கொண்டது உடம்பு. பில்லி சூனியம் என்று பங்கஜம் மாமி பதற, ஓவர் எமோஷனலாகி அம்மா அழ கடைசியில் அப்பாவின் உதவியால் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி ஒரு வாரம் 'ஹாஸ்பிட்டல் பியூட்டி குயீன்' நர்ஸ் நர்மதாவின் அழகான கவனிப்பின் பின் வீடு திரும்பினேன்.

மீன்வைல், "மச்சான் உன்னைப் போலவே இருக்கற அந்த மத்த ஏழு பேரும் எப்பிடி, எங்க இருக்கானுங்கன்னு ஒருவாட்டி பாத்துடனும்டா" என்று அடிக்கடி பிரெய்ன் திரி பற்றவைத்துக் கொண்டே இருந்தான். அதற்கு ரைட் ஆப்போஸிட்டா "அவங்க எங்க இருந்தா நமக்கென்ன. எப்படி இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு பிரே பண்ணு போதும்" என்று காதை குடைந்தது மனச்சாட்சி. "அதுவும் சரிதான்" என்று ஒருவருக்குத் தெரியாமல் மற்றவருக்கு ஆமாம் சாமி போட்டுக் கொண்டேன்.

பங்கஜம்  மாமியின் அலப்பறைகளும் அம்மாவின் கவலைகளும் நின்று போன சமயத்தில் அறிமுகமானார் லக்கிலூக். காமிக்ஸ், கார்ட்டூன் என்று ஏதோ ஒரு வழியில் வீட்டுக்குள் புகுந்து விடும் அவரது சாமர்த்தியம் கண்டு வியந்தேன். எதிலும் இருக்காத பற்று, வாயில் ஒரு புல், நண்பர்கள் இல்லாத வாழ்க்கை என லைட்டா என்னையே பிரதிபலித்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிக்கொள்வோம். அப்போது அவர் சொன்ன விஷயம்தான் சில கேள்விகளுக்கு விடை தந்தது.

அந்த ஏழு பேர் மேட்டரில், உருவ ஒற்றுமையில் ஒரு மூணு பேரும், தன்மை ஒற்றுமையில் மீதமும் இருக்கலாம் என்றார். பாஃர் எக்ஸாம்பிள் நீயும் நானும் என்றார். சரிதான் அவர் ஒல்லிப்பிச்சான், நான் அண்டா குண்டா. இருப்பினும் வாழ்க்கை முறையில் ஒற்றுமை இருந்தது. இருவரும் தனிமை விரும்பிகளாக இருந்தோம். நண்பர்கள் ஏமாற்றி இருந்தார்கள். யோசிச்சுப் பார்த்த போது பங்கஜம் மாமிக்கும் அம்மாக்கும் கூட நிறைய ஒற்றுமைகள் இருந்தன. அப்பாக்கும் பேஸ்புக்கில் இருந்த பிரேசில் காரருக்கும் ஒரே விதமான பேச்சுத்தன்மை இருந்தது. இதை லக்கிலூக்கிடம் சொல்லி சிரித்துக் கொண்டேன். அவர் டால்டன் சகோதரர்களை பிடிப்பதற்காக 48ம் பக்கத்தில் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார். நான் சொன்னது காதில் விழுந்ததோ தெரியவில்லை.

மனச்சாட்சி தலையில் கைவைத்து நொந்து கொண்டது, இதோ இப்போ நீங்க "இதெல்லாம் ஒரு பதிவா" என்று  பீஃல் பண்ற மாதிரி. இப்ப பீஃல் பண்ணி என்ன பிரயோசனம், எல்லாம் முன்னாடியே யோசிச்சிருக்கணும் என்று நக்கலடித்தது மூளை. லக்கிலூக் கடைசிப் பக்கத்தில் "தனிமையே என் துணைவன், தனிமையே என் வாழ்க்கை" என்று பாடி விசில் அடித்தபடி குதிரையில் சென்று கொண்டிருந்தார்...